மருமகனை அரிவாளால் வெட்டிய மாமனார், மாமியார் உள்பட 3 பேர் சிறையில் அடைப்பு

மருமகன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 3 பேரும் தலைமறை வாகினார்.போலீசார் வீட்டில் உள்ளே இருந்த 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கணவன், மனைவியை படத்தில் காணலாம்.
கைது செய்யப்பட்ட கணவன், மனைவியை படத்தில் காணலாம்.
Published on

தாளவாடி:

தாளவாடி அடுத்த திகனாரை கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ்கா ர்த்திக் (29). இவர் அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ், துளசியம்மா ஆகியோரின் மகள் ஜோதி என்பவரை காதலித்து கடந்த 4 மாதத்துக்கு முன்பு திரு மணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் பெண்ணின் பெற்றோருக்கு பிடிக்க வில்லை. கடந்த மாதம் விக்னேஷ் கார்த்திக் கேரளா வுக்கு வேலைக்காக சென்று ள்ளார். மீண்டும் தனது சொந்த ஊரான திகனாரை கிராமத்துக்கு வந்துள்ளார்.

அப்பொழுது விக்னே ஷ்கார்த்தியின் மாமனார் பால்ராஜ் மற்றும் மாமியார் துளசிம்மா, சிறுவன் என 3 பேர் சேர்ந்து விக்னேஷ்கார்த்தியின் வீட்டுக்குள் நுழைந்து விக்னேஷின் முகத்தில் மாமியார் மிளகாய் பொடியை தூவி உள்ளார்.

பின்னர் மாமனார் பால்ராஜ் தான் கொண்டு வந்திருந்த அரிவாளால் விக்னேஷ் கார்த்திகை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் விக்னேஷ்கா ர்த்தியின் கை, கால், வயிற்று பகுதி பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அவர் மைசூர் அரசு மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருமகன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 3 பேரும் தலைமறை வாகினார்.அவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் 2 தனிபடைகள் அமைத்து தேடிவந்தனர்.

அருகில் உள்ள கர்நாடகா மாநிலத்திக்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் 3 பேரும் தாளவாடி அடுத்த தர்மாபுரம் கிராமத்தில் தனது வீட்டுக்கு வந்துள்ளனர்.

இது குறித்து கிராம மக்கள் தாளவாடி போலீ சார்க்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவயிடத்திக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் வீட்டை சுற்றி வளைத்து வீட்டில் உள்ளே இருந்த 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

தாக்குதலுக்கு பயன்படுத்திய அரிவாள், கத்தியையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் சத்தியமங்கலம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com