என் மலர்
ஈரோடு
- முருகப்பெருமானுக்கு காலை 7 மணிக்கு சப்தநதி தீர்த்த அபிஷேகம் நடந்தது.
- ஹோமம் மற்றும் பூர்ணாகுதி, தேவார, நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
சென்னிமலை,
சென்னிமலை முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர விழாவை முன்னிட்டு நேற்று நடந்த ஸ்ரீ சுப்பிரமண்ய ஜெப பாரா யணம் ஹோமம் பூஜை களில் ஆயிரக்காணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சென்னிமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திர விழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் 40 -– வது ஆண்டாக நடந்த மூன்று நாள் விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முருகப்பெருமானுக்கு காலை 7 மணிக்கு சப்தநதி தீர்த்த அபிஷேகம் நடந்தது.
அதை தொடர்ந்து வேதிகா அர்ச்சனையும், 1008 கலச அபிஷேகம் மற்றும் ஸ்ரீ மஹா ஜெய விஜய ஸ்ரீ சுப்பிரமண்ய ஜெப பாராயணம் ஹோமம் மற்றும் பூர்ணாகுதி, தேவார, நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
பிறகு பகல் 12 மணிக்கு மேல் மகா தீபாராதனையும், அதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்தி புறப்பாடும் நடை பெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இறுதியில் பக்தர்களுக்கு சுப்புசாமி அருள் பிரசாதம் வழங்கினார், அன்னதான மும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.
- வழக்கம் போல் மாணவர் பிரவீன் இன்று காலை மளிகை கடையை திறக்க வந்தார்.
- மின்கசிவு காரணமாக கடையின் ஷட்டரில் மின்சாரம் பாய்ந்து இருந்தது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்கு பேட்டையை சேர்ந்தவர் சண்முகராஜா. இவரது மகன் பிரவீன் (14). இவர் கொடிவேரியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்தார்.
சண்முகராஜா வடக்கு பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் மாணவர் பிரவீன் தினமும் காலையில் மளிகை கடையை திறந்து வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவும் கடையில் வியாபாரம் முடிந்ததும் ஷட்டரை பூட்டி விட்டு சென்றனர்.
வழக்கம் போல் மாணவர் பிரவீன் இன்று காலை 6.30 மணியளவில் மளிகை கடையை திறக்க வந்தார். அப்போது மின்கசிவு காரணமாக கடையின் ஷட்டரில் மின்சாரம் பாய்ந்து இருந்தது. இதுப்பற்றி தெரியாத பிரவீன் ஷட்டரை திறந்த போது மின்சாரம் தாக்கி அலறினார்.
அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து மாணவர் பிரவீனை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவர் பிரவீன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மின்சார துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி கொண்டிருந்தனர்.
- இதையடுத்து 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த பணம், சீட்டு கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் செம்புளிச்சாம்பாளையம் கசாப் கடை வீதியில் அந்தியூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சிலர் பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி கொண்டிருந்தனர்.
அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் அதேபகுதியை சேர்ந்த பழனிசாமி (52), கணேசன் (31), ஒட்டபாளையம் அய்யண்ணார் (48), முனுசாமி (52), கண்ணையன் (48) ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.530 ரொக்கம் மற்றும் சீட்டு கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
- கங்காபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
ஈரோடு:
ஈரோடு கங்காபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (15-ந்தேதி) நடக்கிறது.
இதனால் பேரோடு, குமிளம்பரப்பு, கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தயிர்பா ளையம், ஆட்டையம்பாளையம்,
பள்ளிபாளையம், புதுவலசு, கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொக்கைய ம்பாளையம், சூரிப்பாறை, கரட்டுப்பாளையம், கவுண்டன்பாளையம், ஆலுச்சாம்பாளையம்,
நசியனூர் மெயின் ரோடு, மாகாளியம்மன் வீதி, திங்களுர் ரோடு மற்றும் ஆலுச்சாம்பாளையம் புதூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துக்கொள்ள ப்படுகிறது.
- சென்னிமலை காமாட்சி அம்மன் பொங்கல் விழா வருகிற 18-ந் தேதி நடக்கிறது.
- ஆண்களும், பெண்களும் பய பக்தியுடன் பால் குடங்களை சுமந்து வந்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை காமாட்சி அம்மன் பொங்கல் விழா வருகிற 18-ந் தேதி நடக்கிறது. அதை முன்னிட்டு விழா கடந்த 10-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
இன்று காலை 7 மணிக்கு பால் குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு சென்னிமலை நான்கு ரத வீதிகளில் மேளதாளத்துடன் ஊர்வலமாக வலம் வந்து காமாட்சி யம்மன் கோவிலையடைந்தது.
இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் பய பக்தியுடன் பால் குடங்களை சுமந்து வந்தனர். பால் குடங்கள் கோவிலை அடைந்த பின்பு காமாட்சி யம்மனுக்கு பால் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
பின்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கி ழமை) மாலை 6 மணிக்கு கும்பம் பாலித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
17-ந் தேதி காமாட்சியம்மன் மாவிளக்கு க்குடன் திருவீதி களில் பவனி வந்து தீபாராதனை நடக்கிறது. 18-ந் தேதி வியாழன் காலை 6 மணிக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
அன்று மாலை 3 மணிக்கு மேலப்பாளையம், மாதேஸ்வரநகரில் இருந்து அலகு தேர் ஊர்வலமாக புறப்பட்டு திருக்கோவிலை வந்துசேரும்.
மாலை 4 மணிக்கு களத்துக்காட்டில் இருந்து மாவிளக்கு ஊர்வ லம் புறப்பட்டு ஜென்டை மேளம் முழங்க கோவிலை வந்தடையும். 19-ந் தேதி இரவு 7 மணிக்கு மஞ்சள் நீர், மறு பூஜை உடன் விழா நிறைவு பெறுகிறது.
- பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- அணையின் நீர்மட்டம் 83.53 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டம் மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக நீர் குடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேலும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 83.53 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,012 கனஅடி விதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.
கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக நேற்று வரை 800 கனஅடி தண்ணீர் திறந்து விட்ட நிலையில் இன்று 900 கனஅடியாக அதிகரித்தது.
குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 1055 கன அடி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
- வேலை வாய்ப்பு முகாம் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரும் 19-ந் தேதி நடத்தப்பட உள்ளது.
- இம்முகாமில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட நிர்வாகம், ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளியில் வரும் 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட உள்ளது.
இம்முகாமில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார். இவ்வேலை வாய்ப்பு முகாமில் 50-க்கும் மேற்பட்ட தனியார் துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு 1000-க்கும் மேற்பட்ட காலிப்பணி யிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.
இம்முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ்-2 தேர்ச்சி, பட்டதாரி கள், பட்டய ப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, தொழில் கல்வி பெற்ற வர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்கு பவர்கள், தையல் கற்றவ ர்கள் என அனைத்து வித தகுதியுள்ள மாற்றுத்திற னாளி, வேலை நாடுநர்களும் கலந்து கொள்ளலாம்.
முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவ சமானதாகும். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு க்கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி களுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்க ளுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் குறித்த வழி காட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.
ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துடன் இணைந்து நடத்தப்படும் இவ்வேலை வாய்ப்பு முகாம், வேலை நாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.
எனவே தனியார் துறை யில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைத்து மாற்றுத்தி றனாளிகளும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும், இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணிய மர்த்தம் செய்யப்படும் வேலை நாடுநர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவுஎண் ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் கலெக்டர் கிருஷ்ணணுண்ணி தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலகம் மற்றும் ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண்: 9499055942, 94990 55943, 04242275860 அல்லது மின்னஞ்சல் முகவரி: erodemegajobfair@gmail.com வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.
- நெல் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
- விதிமீறும் விதை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசன நீர் பகுதிக்கு கடந்த மாதம் 26-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.கோபி, டி.என்.பாளையம் உட்பட பல பகுதிகளில் குறுவை நெல் சாகுபடி 25,000 ஏக்கரில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனைத்தொடர்ந்து குறுவை நெல் சாகுபடி குறித்து, இப்பகுதி நெல் விதை உற்பத்தியாளர்களு க்கும், விதை விற்பனை யாளர்களுக்கும் தீவிர விழிப்புணர்வு வழங்க, நெல் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
குறுவை நெல் சாகுபடி குறித்த தொழில் நுட்பங்கள், ஏற்ற நெல் ரகங்கள், அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பரிந்து ரைக்கப்பட்ட இப்பரு வத்துக்கு ஏற்ற குறுகிய கால ரகங்களை மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய யோசனை தெரிவிக்க ப்பட்டுள்ளது.
ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் பெ.சுமதி, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:
விதை விற்பனை நிலையங்களில் விதைகள் வாங்கும்போது, விவசாயி கள் தரமான சான்று பெற்ற விதைகளை பார்த்து வாங்க வேண்டும். அதன் காலாவதி நாளை கவனித்து வாங்க வேண்டும். விதை விற்பனை யாளரிடம் இருந்து விற்பனை க்கான பில் பெற வேண்டும்.
விதை விற்பனை யாளர்கள் விதைகளை விற்பனை செய்யும்போது, பட்டத்துக்கு ஏற்ற விதை களை விற்பனை செய்வது டன், அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ற ரகங்களை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்.
உரிய ஆவணங்கள் இன்றி விதை விற்பனை செய்வது விதை சட்டம் மற்றும் விதைகள் கட்டுப்பாட்டு ஆணைப்படி விதி மீறலாகும். விதிமீறும் விதை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விதைகள் குறித்த புகார்களை கோபி விதை ஆய்வாளர் சுமையா, 99448 43823 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தாலுகா போலீசார் ரோந்து சென்றனர்.
- அப்போது சட்டவிரோதமாக மது விற்ற விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு சென்னிமலை ரோடு பகுதியில் தாலுகா போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டு சட்டவிரோதமாக மது விற்ற திங்களூா் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் சோலார் டாஸ்மாக் கடை அருகே நின்றுகொண்டு சட்டவிரோதமாக மது விற்ற சாஸ்திரி நகரை சேர்ந்த சிவக்குமாரை தாலுகா போலீசாரும்,
ஈரோடு ரெயில்நிலையம் அருகில் மதுவிற்ற சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த பாண்டியராஜூவை (31) சூரம்பட்டி போலீசாரும்,
சூளை குப்புக்காடு பகுதியில் மது விற்ற சுக்கிரமணியன் வலசை சேர்ந்த சொக்கலிங்கம் (47) என்பவரை வீரப்பன்சத்திரம் போலீசாரும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
- விஷ மாத்திரை சாப்பிட்டு விட்டதாக கூறி மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.
- பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறை குன்னத்தூர்ரோடு பஜனை கோவில் வீதியை சேர்ந்தவர் சரவணன் (35). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவிலலை.
இவர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். இதையடுத்து அவர் வீட்டில் இருந்தவர்களிடம் நான் கடையில் வைத்திருந்த விஷ மாத்திரை சாப்பிட்டு விட்டதாக கூறி மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.
இதை கண்ட அவரது உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பி வைக்கப்பட்டது. இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் எனபது குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
- 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 141 ஆக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நேற்று சுகாதார துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 888 ஆக உள்ளது.
மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 141 ஆக உள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 736 பேர் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்து ள்ளனர்.
தற்போது மாவட்டம் முழுவதும் 11 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- பெண் தான் மூளையாக செயல்பட்டு வாலிபர்களை அனுப்பி கொள்ளையடிக்க காரணமாக இருந்தது தெரிய வந்தது.
- இச்சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
பவானி:
பவானி அருகில் உள்ள லட்சுமி நகர் பஸ் நிறுத்தம் அருகில் தனியாருக்கு சொந்தமான கட்டிடம் ஒன்றில் ஈரோடு அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த கீர்த்தன் என்பவர் ஆயுர்வேத சிகிச்சை மையம் (மசாஜ் சென்டர்) ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த சிகிச்சை மையத்தில் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். இங்கு தினசரி ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் வந்து மசாஜ் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சிகிச்சை மையத்திற்கு உள்ளே நேற்று முன்தினம் இரவு கிரிக்கெட் பேட் மற்றும் கத்தியுடன் புகுந்த கொள்ளை கும்பல் ஒன்று அங்கு பணியாற்றி கொண்டிருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகி யோரை கத்தியை கழுத்தில் வைத்தும் பேட்டை கொண்டு அடித்து மிரட்டி பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளை யடித்து சென்றனர்.
இந்த தகவலை அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சியின் மூலம் பார்த்த உரிமையாளர் கீர்த்தன் உடனடியாக சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தகவலறிந்து சித்தோடு போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மசாஜ் சென்டரில் சாத்தப்பட்டு இருந்த ஷட்டரை திறக்கும் போது உள்ளே இருந்த 6 பேர் கொண்ட கும்பல் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட்டம் பிடித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து சாமர்த்தியமாக சித்தோடு போலீசார் 2 பேரை மடக்கி பிடித்தனர். அந்த 2 பேரையும் சித்தோடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் வசிக்கும் கார்த்தி (22), ஈரோடு பெரியவலசு பகுதியில் வசிக்கும் கவுதம் (24) என்பது தெரியவந்தது. இந்த வழக்கில் தப்பிய ஓடிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் பவானியில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் உள்ள பெருமாள்மலை மங்களகிரி காவிரி ஆற்று படித்துறை பகுதியில் 2 பேர் தலைமறைவாக இருப்பதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் விதமாக இருந்த 2 பேரையும் பிடித்து வந்து போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில் 17 வயதுடைய சிறுவன் மற்றும் பவானி லட்சுமி நகர், கோணவாய்க்கால் இந்திரா நகர் பகுதி சேர்ந்த தேவிகாஸ்ரீ என்பதும் லட்சுமி நகர் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் நடந்த சம்பவத்தில் இந்த பெண் தான் மூளையாக செயல்பட்டு வாலிபர்களை அனுப்பி நகை மற்றும் ரொக்க பணம் கொள்ளை யடிக்க காரணமாக இருந்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து சித்தோடு போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் தேவிகாஸ்ரீ மெகந்தி ஆர்டிஸ்ட் ஆக உள்ளதாகவும், போதிய வருமானம் இல்லாததால் குடும்பத்தை நடத்த முடியவில்லை என்பதால் தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மசாஜ் சென்டரில் புகுந்து கொள்ளையடிக்க திட்டமிட்டது தெரிய வந்தது. கைது செய்ய பட்ட இருவரிடமிருந்து கொள்ளை சம்பவத்திற்க்கு பயன்படுத்திய 2 மொபட் மற்றும் கிரிக்கெட் பேட், கத்தி ஆகியவற்றை போலீ சார் பறிமுதல் செய்தனர்.
பலமுறை மசாஜ் சென்டருக்கு சென்று வந்ததாகவும் வருவதால் கடையின் உரிமையாளர் போலீசில் புகார் அளிக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் கொள்ளை சம்பவத்தை அரங்கே ற்றியதும் தெரிய வந்தது.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் ஈரோடு வீரப்பன்ச த்திரம் பகுதியில் தலை மறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து ஈரோடு வீரப்பன்சத்திரம் திருமலை வீதியில் சோதனை மேற்கொ ண்டனர்.
அப்பகுதியில் வசிக்கும் பிரவீன் என்கிற டக்டர் என்பவரின் வீட்டில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து வீரப்ப ன்சத்திரம் போலீ சார் பிரவீனை கைது செய்தனர்.
மேலும், இச்சம்ப வத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்ற னர்.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு கைது செய்ய ப்பட்ட கார்த்திக், கவுதம், பிரவீன் ஆகிய 3 பேரும் ஈரோடு சிறையிலும், முக்கிய மூளையாக செய ல்பட்ட தேவிகாஸ்ரீ கோவை மத்திய சிறையி லும், சிறுவன் கோவை சீர்திருத்த சிறை ச்சாலையிலும் அடைக்கப்ப ட்டனர்.






