தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.அணையின் நீர்மட்டம் 83.53 அடியாக உள்ளது.
தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
Published on

ஈரோடு:

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டம் மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாக நீர் குடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேலும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 83.53 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,012 கனஅடி விதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக நேற்று வரை 800 கனஅடி தண்ணீர் திறந்து விட்ட நிலையில் இன்று 900 கனஅடியாக அதிகரித்தது.

குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 1055 கன அடி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com