விஷ மாத்திரை சாப்பிட்டு வாலிபர் சாவு

விஷ மாத்திரை சாப்பிட்டு விட்டதாக கூறி மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
விஷ மாத்திரை சாப்பிட்டு வாலிபர் சாவு
Published on

பெருந்துறை:

பெருந்துறை குன்னத்தூர்ரோடு பஜனை கோவில் வீதியை சேர்ந்தவர் சரவணன் (35). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவிலலை.

இவர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். இதையடுத்து அவர் வீட்டில் இருந்தவர்களிடம் நான் கடையில் வைத்திருந்த விஷ மாத்திரை சாப்பிட்டு விட்டதாக கூறி மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.

இதை கண்ட அவரது உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பி வைக்கப்பட்டது. இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் எனபது குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com