search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kamatsiyamman Temple"

    • சென்னிமலை காமாட்சி அம்மன் பொங்கல் விழா வருகிற 18-ந் தேதி நடக்கிறது.
    • ஆண்களும், பெண்களும் பய பக்தியுடன் பால் குடங்களை சுமந்து வந்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை காமாட்சி அம்மன் பொங்கல் விழா வருகிற 18-ந் தேதி நடக்கிறது. அதை முன்னிட்டு விழா கடந்த 10-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    இன்று காலை 7 மணிக்கு பால் குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு சென்னிமலை நான்கு ரத வீதிகளில் மேளதாளத்துடன் ஊர்வலமாக வலம் வந்து காமாட்சி யம்மன் கோவிலையடைந்தது.

    இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் பய பக்தியுடன் பால் குடங்களை சுமந்து வந்தனர். பால் குடங்கள் கோவிலை அடைந்த பின்பு காமாட்சி யம்மனுக்கு பால் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

    பின்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கி ழமை) மாலை 6 மணிக்கு கும்பம் பாலித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    17-ந் தேதி காமாட்சியம்மன் மாவிளக்கு க்குடன் திருவீதி களில் பவனி வந்து தீபாராதனை நடக்கிறது. 18-ந் தேதி வியாழன் காலை 6 மணிக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    அன்று மாலை 3 மணிக்கு மேலப்பாளையம், மாதேஸ்வரநகரில் இருந்து அலகு தேர் ஊர்வலமாக புறப்பட்டு திருக்கோவிலை வந்துசேரும்.

    மாலை 4 மணிக்கு களத்துக்காட்டில் இருந்து மாவிளக்கு ஊர்வ லம் புறப்பட்டு ஜென்டை மேளம் முழங்க கோவிலை வந்தடையும். 19-ந் தேதி இரவு 7 மணிக்கு மஞ்சள் நீர், மறு பூஜை உடன் விழா நிறைவு பெறுகிறது.

    ×