பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி கொண்டிருந்தனர்.இதையடுத்து 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த பணம், சீட்டு கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் செம்புளிச்சாம்பாளையம் கசாப் கடை வீதியில் அந்தியூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சிலர் பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி கொண்டிருந்தனர்.

அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் அதேபகுதியை சேர்ந்த பழனிசாமி (52), கணேசன் (31), ஒட்டபாளையம் அய்யண்ணார் (48), முனுசாமி (52), கண்ணையன் (48) ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.530 ரொக்கம் மற்றும் சீட்டு கட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com