என் மலர்tooltip icon

    ஈரோடு

    • காந்தி நகரில் சிலர் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
    • காந்தி நகரில் சிலர் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

    ஈரோடு, 

    சித்தோடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சித்தோடு அடுத்த செங்குந்தபுரம் காந்தி நகரில் சிலர் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். சித்தோடு போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    அப்போது அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (68), கோவிந்தராஜ் (60), ரஞ்சித் குமார்(33), கோவிந்தன்(40), அபிமன்னன்(34), மணிகண்டன்(32), மூர்த்தி (50), குப்புசாமி (53), கார்த்தி (30) ஆகிய 9 பேர் என தெரிய வந்தது

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து 9 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டு, பணம் ரூ.2500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் இடமாறுதல் பெறுவத ற்கான கலந்தாய்வு தொடங்கியது.
    • அவர்களுக்கு வேண்டிய பள்ளிகளில் இடம் மாறுதல் பெற்று சென்றனர்.

    ஈரோடு, மே.15 -

    தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு இடமாறுதலுக்கான கலந்தாய்வு கடந்த 8-ந் தேதி தொடங்கப்படுவதாக இருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக இந்த கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டது.

    கலந்தாய்வு

    இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. இதன்படி ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் இன்று காலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் இடமாறுதல் பெறுவத ற்கான கலந்தாய்வு தொடங்கியது.

    இதற்காக இன்று காலை முதலே முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு தலைமை ஆசிரியர்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர். இன்று காலை அவர்க ளுக்கான இடம் மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு தொடங்கியது.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குழந்தை ராஜன் தலைமை யில் இந்த கலந்தாய்வு நடந்தது. தலைமை ஆசிரி யர்கள் இதில் கலந்து கொண்டு அவர்களுக்கு வேண்டிய பள்ளிகளில் இடம் மாறுதல் பெற்று சென்றனர்.

    இதைத் தொடர்ந்து நாளை(செவ்வாய்க்கிழமை) நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வும், அரசு மேல்நி லைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களில் இடம் மாறுதல் பெறு வதற்கான கலந்தாய்வும் நடக்கிறது. முதுகலை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் மாவட்ட த்திற்குள் இடம் மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு நாளை மறுநாளும், வெளி மாவட்டம் இட மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு வருகிற 18-ந் தேதியும் நடக்கிறது.

    பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியத்து க்குள் மாறுதலு க்கான கலந்தாய்வு 19-ந் தேதியும், வெளி மாவட்ட த்துக்கான கலந்தாய்வு 20-ந் தேதியும், உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட த்துக்குள் மாறுதலுக்கான கலந்தாய்வு 19-ந் தேதியும், வெளி மாவட்டத்து க்கான மாறுதல் 20-ந் தேதியும் நடைபெறுகிறது. பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியத்துக்குள் மாறுதலுக்கான கலந்தாய்வு 22-ந் தேதியும், தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு 23-ந் தேதியும் நடைபெற உள்ளது.

    கலை, இசை, தையல், இடைநிலை ஆசிரியர்க ளுக்கு மாவட்ட த்துக்குள் இடமாறு தலுக்கான கலந்தாய்வு 23-ந் தேதியும், வெளி மாவ ட்டத்துக்கான கலந்தாய்வு 24-ந் தேதியும் நடக்கிறது. இடைநிலை ஆசிரியர் ஒன்றியத்துக்குள் கலந்தா ய்வு 24-ந் தேதியும், பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் இடமாறுதல் கலந்தாய்வு 25-ந் தேதியும், வெளி மாவட்டத்திற்கான கலந்தாய்வு 26-ந் தேதியும் நடைபெற உள்ளது.

    • காலை 7 மணிக்கே வெயிலின் தாக்கம் தொடங்கி விடுகிறது.
    • மதியம் 12 மணி முதல் 5 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த மாதம் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்தது. அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கும் முன்பே மாவட்டத்தில் அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெயில் பதிவாகியிருந்தது.

    இதனால் வாகன ஓட்டிகள் குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதி வந்தனர்.

    இந்நிலையில் கடந்து சில நாட்களாக இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சத்தியமங்கலம், தாளவாடி, கோபி, கொடு முடி போன்ற புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாநகர பகுதி களிலும் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வந்தது.

    இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக மாவட்ட த்தில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கிய பிறகு ஓரளவு மழை பெய்ததால் வெப்பம் தெரியாமல் இருந்து வந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக மீண்டும் வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது.

    காலை 7 மணிக்கே வெயிலின் தாக்கம் தொடங்கி விடுகிறது. பின்னர் நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகமாகி வருகிறது. குறிப்பாக மதியம் 12 மணி முதல் 5 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது.

    இந்த நேரத்தில் அனல் காற்றுடன் வெயில் கொளுத்துவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வீட்டில் இருக்கும் குழந்தைகள் பெரியவர்கள் புழுக்கத்தால் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் 103 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் மோர், இளநீர், கரும்பு பால் ஆகியவற்றை விரும்பி பருகி வருகின்றனர். இதேபோல் தர்பூசணி, வெள்ளரிக்காய் வியாபாரமும் விறு விறுப்பாக நடந்து வருகிறது.

    வெயில் அதிகமாகி உள்ளதால் குழந்தைகளுக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் அதிக அளவில் வருகிறது. உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    முடிந்த அளவு குழந்தைகள், முதிய வர்களை வெளியே அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

    எனினும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் எப்போது அக்னி நட்சத்திரம் வெயில் முடியும் என மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிரு க்கின்றனர்.

    • கடந்த 5 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.
    • அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    கோபி, 

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நஞ்சக்கவுண்ட ன்பாளை யத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் நவனீதன் (24) என்ஜினீயர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் கந்த சாமி. இவரது மகள் ரிஷிகா (20).

    நவனீதனின் தந்தை ஜெகநாதனும், ரிஷிகாவின் தந்தை கந்தசாமியும் நண்பர்கள். இதனால் நவனீதன்-ரிஷிகா இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 5 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியேறிய நவனீதன் ரிஷிகா ஆகியோர் இன்று காலை குன்ன த்தூர்-கோபிசெட்டிபாளையம் ரோட்டில் உள்ள முனியப்பன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு கோபி செட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    இன்ஸ்பெக்டர் தெய்வ ராணி அவர்களிடம் விசா ரணை நடத்தி வருகிறார்.

    • குப்பை களை அகற்ற 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழி யர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • நாள் ஒன்றுக்கு ரூ.442 ஊதியமாக வழங்க ப்பட்டு வருகிறது.

    கோபி, 

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இந்த பகுதியில் தேங்கும் குப்பைகளை அகற்ற 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழி யர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.442 ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு இன்று பணியை புறக்கணித்தனர். இதையடுத்து கோபிசெட்டிபாளையம் பகுதியில் தேங்கிய குப்பைகள் நிரந்த ஊழியர்கள் மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது. 

    • காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.53 அடியாக உள்ளது.
    • பவானிசாகர் அணையில் இருந்து 1,055 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு, 

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.53 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,057 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடியும், தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 900 கனஅடியும், குடிநீரு க்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 1,055 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேப்போல் குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் 34.90 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 27.43 அடியா கவும், வரட்டுபள்ளம் அணையின் நீர்ம ட்டம்-34.90 கன அடியாகவும் உள்ளது.

    • கிலோ கணக்கில் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
    • தாளவாடி போலீசார் கோகுல் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவின் பேரில் போலீசார் இதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.

    பிடிப்பட்டவர்களிடமிருந்து கிலோ கணக்கில் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில்தாளவாடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடசாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தாளவாடியில் ஒரு வீட்டின் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஒரு நபர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தார்.

    அவரை பிடித்து விசாரித்ததில் அவர் பெயர் கோகுல் (25) என்பதும் வீட்டு அருகே சோதனை செய்தபோது 30 கிராம் கஞ்சாவை சட்ட விரோதமாக பதுக்கி விற்பனைக்காக வைத்திருந்ததை ஒப்புக்கொண்டார்.

    இது குறித்து தாளவாடி போலீசார் கோகுல் மீது வழக்கு பதிவு செய்தனர். அவரிடமிருந்து 30 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் தாளவாடி போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணி அண்ணா நகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஒரு வாலிபர் வீட்டின் அருகில் நின்று கொண்டு இருந்தார்.

    சோதனை செய்தபோது 30 கிராம் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த மாது (19) என்று தெரிய வந்தது.

    இது குறித்து தாளவாடி போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து 30 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் அந்தியூர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜெபஸ்டின் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கிருஷ்ணாபுரம் பகுதியில் கஞ்சாவை பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட சண்முகசுந்தரம் என்கிற ராகுல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. 

    • திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. 3 வயதில் ஒரு மகள் உள்ளார்.
    • ஒரு லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்தானது.

    சத்தியமங்கலம்,

    ஈரோடு மாவட்டம் கடம்பூர் சுஜில்கரையை சேர்ந்தவர் மாதன். இவரது மகன் பட்டான் (33). டிரைவர். இவரது மனைவி ரம்யா.

    இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. 3 வயதில் ஒரு மகள் உள்ளார். தற்போது இவர்கள் சத்தியமங்கலம் கொழிஞ்சனூர் பகுதியில் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று பட்டான் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு மளிகை கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறி விட்டு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது கெஞ்சனூர் பிரிவு பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டு இருந்த போது ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்தானது. இதில் கீழே விழுந்த பட்டானுக்கு படுகாயம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை பட்டானை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அப்போது பட்டானை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரமேசும், கிஷோரும் திடீரென நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டனர்.
    • மகன், தந்தை நீரில் மூழ்கினர். சிறிது நேரத்தில் ரமேஷ் உடல் மீட்கப்பட்டது

    கொடுமுடி, 

    திருப்பூர் மாவட்டம் ஜவஹர் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (48). இவர் திருப்பூரில் சொந்தமாக பனியன் கம்பெனி நடத்தி வந்தார். இவரது மகன் நந்த கிஷோர் (19). கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ரமேஷ் அவருடைய அண்ணன் பாலமுருகன், அக்கா லதா ஆகியோர் குடும்பத்துடன் ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே கருவேலம்பாளையத்தில் உள்ள காவிரி ஆற்றுக்கு சென்று குளிக்க முடிவு செய்திருந்தனர்.

    இதைத் தொடர்ந்து ரமேஷ் அவரது மகன் நந்த கிஷோர் உட்பட குடும்பத்தினர் 14 பேர் காரில் புறப்பட்டு நேற்று மதியம் கருவேலம்பாளையம் வந்தனர். பின்னர் குழந்தைகள் தவிர அனைவரும் அங்குள்ள காவிரி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர்.

    அப்போது ரமேசும், அவரது மகன் நந்தகிஷோரூம் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. இந்நிலையில் ரமேசும், கிஷோரும் திடீரென நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டனர்.

    இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர். அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்கள் அவர்களைக் காப்பாற்ற முயன்றனர். எனினும் மகன், தந்தை நீரில் மூழ்கினர். சிறிது நேரத்தில் ரமேஷ் உடல் மீட்கப்பட்டது.

    ஆனால் நந்திகிஷோர் என்ன ஆனார் என தெரியவில்லை. இது குறித்து கொடுமுடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தேடினர்.

    நீண்ட போராட்டத்துக்குப் பிறகு நந்தகிஷோர் உடலும் மீட்கப்பட்டது.

    இவரது உடல்களையும் பார்த்து அவர்களது உறவினர்கள் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    பின்னர் இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்ப ட்டது. இன்று பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படு கிறது.

    இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • 100 டிகிரிக்கு மேல் தொடர்ந்து வெயில் பதிவாகி வருகிறது.
    • கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    கோபி, 

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் ஈரோடு மாவட்டம் மட்டு மின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    மேலும் விடுமுறை நாட்களில் பொதுமக்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படும். இதனால் கொடிவேரி அணை பகுதியில் எப்போதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த நிலையில் கடந்த 2 மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 100 டிகிரிக்கு மேல் தொடர்ந்து வெயில் பதிவாகி வருகிறது. கடந்த வாரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியாக காணப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி சுட்டெரித்து வருகிறது. மேலும் பள்ளி விடுமுறை நாட்கள் என்ப தால் சுற்றுலா தலங்கள் மற்றும் நீர் நிலைகளில் பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள்.

    இதே போல் கொடிவேரி தடுப்ப ணையிலும் தொடர்ந்து மக்கள் குடும்பத்துடன் வந்து அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களும் கொடிவேரிக்கு சுற்றுலா பயணிகள் வழக்கத்தை விட அதிகளவில் வந்திருந்தனர்.

    காலை நேரத்தில் பொது மக்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டாலும் நேரம் செல்ல, செல்ல கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. கொடிவேரிக்கு குடும்பம், குடும்பமாக வந்த சுற்றுலா பயணிகள் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் வெயிலின் தாக்கத்தால் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என பலர் நீண்ட நேரம் கொட்டும் தண்ணீரில் குளித்த மகிழ்ந்தனர்.

    இதனால் கொடிவேரி தடுப்பணை பகுதியில் எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாக காணப்பட்டது. பொதுமக்கள் கார், வேன், இரு சக்கர வாகனங்களில் அதிகளவில் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை போலீசார் சரி செய்து அனுப்பி வைத்தனர்.

    நேற்று ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்து 500 பேர் கொடிவேரி அணைக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர். இதன் மூலம் ரூ.62 ஆயிரத்து 500 வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 2 வாலிபர்களில் ஒரு வாலிபர் வீட்டுக்குள் சென்றுள்ளார்
    • மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார்

    கொடுமுடி, 

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள பாசூர் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் செங்கோட்டையன். இவரது மனைவி பாவாத்தாள் ( 80 ). இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் பாவாத்தாள் வீட்டின் திண்ணையில் அமர்ந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மூதாட்டியிடம் குடிக்க தண்ணீர் கேட்டனர்.

    அருகில் உள்ள குடிநீர் பைப்பில் குடிக்குமாறு கூறிவிட்டு பாவாத்தாள் வீட்டிற்குள் சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து 2 வாலிபர்களில் ஒரு வாலிபர் வீட்டுக்குள் சென்றுள்ளார்.

    திடீரென அந்த வாலிபர் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத அந்த மூதாட்டி திருடன்.. திருடன் என கூச்சலிட்டார்.

    ஆனால் அந்த வாலிபர் வெளியே மோட்டார் சைக்கிளில் தயாராக நின்று கொண்டிருந்த மற்றொரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டார்.

    மூதாட்டி இதுகுறித்து ஈரோட்டில் உள்ள அவரது மகனுக்கு தகவல் தெரிவித்தார். அவரது மகன் வீட்டுக்கு விரைந்து வந்து நடந்த சம்பவம் குறித்து மலையம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

    • காமாட்சிபுரம், தம்மரெட்டி பாளையம் ஆகிய ஊராட்சி களின் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.
    • ஐகோர்ட்டு உத்தரவிட்ட தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்,

    சென்னிமலை, 

    கீழ்பவானி பாசன விவசாயிகள் கூட்டம் சென்னிமலை அடுத்துள்ள ஒரத்துப்பாளையம் அணை அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒரத்துப்பா ளையம் பழனிசாமி தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு இயற்கை வாழ்வுரிமை இயக்க அமைப்பாளர் மே.கு.பொடாரன் மற்றும் திருப்பூர் மாவட்டம், காங்கயம் ஒன்றியத்தை சேர்ந்த மறவபாளையம், காமாட்சிபுரம், தம்மரெட்டி பாளையம் ஆகிய ஊராட்சி களின் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், கீழ்பவானி விவசாயிகள் சங்க தலைவர் செ.நல்லசாமி, தமிழக விவசாயிகள் சங்க செயலாளர் செங்கோ ட்டையன், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் மு.ரவி ஆகியோர் கலந்து கொண்டு கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக பேசினார்கள்.

    பின்னர், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பது குறித்து ஐகோர்ட்டு உத்தரவிட்ட தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும், அரசாணை எண் 276-ல் திருத்தம் செய்து சட்ட பாதுகாப்பு வழங்குவதுடன் பழைய கட்டுமான பணிகளை மட்டுமே செய்ய வேண்டும் என்றும், புதிய கட்டுமான பணிகளுக்கு எதிராக அறவழி போராட்டம் நடத்துவது என்றும்,

    பவானிசாகர் அணை முதல் கடைமடையான மங்களப்பட்டி வரை குடிநீரை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து கீழ் பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க கூடாது என தனித்தனியே மனு எழுதி வருகிற 22-ந் தேதி (திங்கட்கிழமை) அன்று காலை 10 மணிக்கு ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    இந்தக் கூட்டத்தில் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாசனப்பகுதி விவசாயிகளான ஆண்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் சொக்கநாதபாளையம் கலைவாணி பாஸ்கர் நன்றி கூறினார். 

    ×