காதல் திருமண ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கடந்த 5 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
காதல் திருமண ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
Published on

கோபி, 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நஞ்சக்கவுண்ட ன்பாளை யத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் நவனீதன் (24) என்ஜினீயர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் கந்த சாமி. இவரது மகள் ரிஷிகா (20).

நவனீதனின் தந்தை ஜெகநாதனும், ரிஷிகாவின் தந்தை கந்தசாமியும் நண்பர்கள். இதனால் நவனீதன்-ரிஷிகா இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 5 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியேறிய நவனீதன் ரிஷிகா ஆகியோர் இன்று காலை குன்ன த்தூர்-கோபிசெட்டிபாளையம் ரோட்டில் உள்ள முனியப்பன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு கோபி செட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

இன்ஸ்பெக்டர் தெய்வ ராணி அவர்களிடம் விசா ரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com