என் மலர்tooltip icon

    ஈரோடு

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.37 அடியாக உள்ளது.
    • அணையில் இருந்து 1,055 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டம் மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர் வரத்து குறைய தொடங்கியது. அதேநேரம் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மீன் பிடிப்பு பகுதியில் மழை செய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.37 அடியாக உள்ளது.

    நேற்று அணைக்கு வினாடிக்கு 594 கனஅடி வீதம் தண்ணீர் வந்த நிலையில் இன்று 1,084 கன அடியாக அதிகரித்து தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

    கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 900 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 1,055 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் அங்குள்ள பாலத்தின் சுவற்றில் மோதி விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் துரை தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

    அம்மாபேட்டை:

    சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா, குட்டப்பட்டி அருகே உள்ள தண்ணீர் குட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் துரை (வயது 29). டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் துரைக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்தனர். அதற்கு முன் பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்ய வேண்டும் என ஜோதிடர் கூறியதால் அதற்காக சம்பவத்தன்று காலை துரை, அவரது தாய் புஷ்பா, ஜோதிடர் மற்றும் அவரது உறவினர் வைத்தியநாதன் ஆகியோர் பவானி கூடுதுறைக்கு வந்தனர்.

    பின்னர் பரிகார பூஜைகள் செய்து விட்ட பின்னர் தாயையும், ஜோதிடரையும் பஸ் ஏற்றி வைத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் துரை ஓட்ட அவரது உறவினர் வைத்தி யநாதன் (31) பின்னால் அமர்ந்து கொண்டு பவானி மேட்டூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.

    சுமார் 12 மணியளவில் அம்மாபேட்டை அருகே நெரிஞ்சிப்பேட்டை அடுத்துள்ள மீன் பண்ணை அருகே சென்றபோது துரை அணிந்திருந்த ஹெல்மட்டை கழற்ற முயன்றதாக கூறப்படுகிறது.

    அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் அங்குள்ள பாலத்தின் சுவற்றில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் துரை தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். பின்னால் அமர்ந்திருந்த வைத்தியநாதன் லேசான காயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் துரையை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலே துைர இறந்து விட்டதாக தெவித்தார்.

    இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    திருமணத்திற்காக பரிகாரம் செய்ய சென்ற நிலையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டே ஹெல்மெட்டை கழட்டி யதால் கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • கிளினிக் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக ஈரோடு மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை இணை இயக்குநர் அம்பிகாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • சோதனையில் மருந்துகள், ஊசிகள், மாத்திரைகள் என ஏராளமானவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள ஆர்.என்.புதூரில் பாவா கிளினிக் என்ற பெயரில் கடந்த சில ஆண்டுகளாக கிளினிக் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கிளினிக் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக ஈரோடு மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை இணை இயக்குநர் அம்பிகாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இணை இயக்குநர் அம்பிகா தலைமையிலான மருத்துவத்துறையினர் ஆர்.என்.புதூரில் உள்ள சம்மந்தப்பட்ட கிளினிக்கிற்கு சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மருந்துகள், ஊசிகள், மாத்திரைகள் என ஏராளமானவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பைரோஸ் (35) என்பவர் கடந்த பல ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மருந்துகளை பாதுகாப்பற்ற முறையில் கையாண்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கிளினிக் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    இது தொடர்பாக சித்தோடு போலீசில் சுகாதாரத்துறை சார்பில் புகார் அளிக்கபட உள்ளது. மேலும் பைரோஸ் முறையாக மருத்துவ படிப்பு படித்து தான் கிளினிக்கை நடத்தி வந்தாரா? என்பது குறித்தும் மக்கள் நல்வாழ்வு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு யானைகள் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.
    • கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக யானைகள் கணக்கெடுப்பு நடைபெறவில்லை.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், விளாமுண்டி, பவானிசாகர், ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, கெட்டவாடி, ஜீரகள்ளி, கடம்பூர், மெட்டல்வாடி ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன.

    இந்த வனப்பகுதியில் ஏராளமான யானை, சிறுத்தை, புலி, மான் உள்ளிட்ட வனவிலங்குகளும், விலை உயர்ந்த மரங்களும், மூலிகை செடிகளும் நிறைந்து காணப்படுகிறது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு யானைகள் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. இன்று காலை பண்ணாரி சாலையில் காட்டு பண்ணாரி என்ற இடத்தில் வனச்சரகர் பழனிச்சாமி, வனவர் தீபக்குமார் மற்றும் வனக்காப்பாளர்கள் துப்பாக்கி பாதுகாப்புடன் யானைகள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கினர். மொத்தம் இந்த பணியில் 76 பேர் ஈடுபட்டுள்ளனர்.

    முதல் நாளான இன்று பரப்பளவு வாரியாகவும், நாளை நேர்கோட்டு பாதையிலும், நாளை மறுநாள் நீர்நிலைகளில் இருக்கும் யானைகளும் கணக்கெடுக்கப்படுகிறது. கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு யானைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. அப்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 866 யானைகள் இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக யானைகள் கணக்கெடுப்பு நடைபெறவில்லை.

    இந்த நிலையில் இந்த ஆண்டு யானைகள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்ததும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள யானைகள் எண்ணிக்கை குறைந்துள்ளதா? அல்லது அதிகரித்துள்ளதா? என்று தெரிய வரும்.

    • சிலிண்டரில் இருந்து கியாஸ் நிரப்பிய போது மின் கசிவு ஏற்பட்டு கார் முழுவதும் தீப்பிடித்து.
    • கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் பவானி மூன்றோடு பகுதி யை சேர்ந்தவர் ரங்கசாமி நாயக்கர். விசைத்தறி தொழில் செய்து வருகி ன்றார். இந்த நிலையில் தயாரிக்கப்பட்ட துண்டு களை அந்தியூரில் விற்பனைக்கு கொண்டு சென்று விட்டு ஒலகடம் வழியாக பவானி ரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஒலகடம் பேரூராட்சி செல்லும் வீதியின் முன்பு கார் வந்த கொண்டிருந்த போது கார் எரிபொருள் இல்லாமல் நின்று விட்டது. இதனையடுத்து வீட்டு சிலிண்டரை கொண்டு காரின் பேட்டரி உதவியுடன் சிலிண்டரில் இருந்து கியாஸ் நிரப்பிய போது மின் கசிவு ஏற்பட்டு கார் முழுவதும் தீப்பிடித்து.

    அப்போது அருகில் இருந்த ரங்கசாமி நாயக்கர் கார் தீப்பிடிப்பதை கண்டு அங்கிருந்து சிறிதுரம் நகர்ந்து நின்றார். உடனடி யாக அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    தீயணைப்பு நிலைய வாகனம் வருவதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இதில் ரங்கசாமி நாயக்கர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியினார்.

    இது குறித்து வெள்ளி திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விசாரணை நடத்தி வருகின்றார்கள். இதனால் ஒலகடம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • யானையின் கணக்கெடுப்பு எவ்வாறு எடுக்க வேண்டும்.
    • யானையின் இனப்பெருக்கம் எவ்வாறு உள்ளது உள்ளிட்டவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரக அலுவ லகத்தில், ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு 2023-க்கான பயிற்சி சத்திய மங்கலம், புலிகள் காப்பகம் மற்றும் ஈரோடு வனக்கோ ட்டம் ஆகிய பயிற்சியாளர்களை கொண்டு

    அந்தியூர் பர்கூர், தட்டகரை, சென்னம்பட்டி மற்றும் சேலம் வனக்கோட்டம் மேட்டூர் வனச்சரக வனப்ப ணி யாளர்கள் உள்ளிட்டர்களுக்கு யானையின் கணக்கெடுப்பு எவ்வாறு எடுக்க வேண்டும்.

    அதன் வழித்தடங்களை ஆய்வு செய்து கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு யானையின் இனப்பெருக்கம் எவ்வாறு உள்ளது உள்ளிட்டவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

    • கோழி பண்ணை அருகே மர்ம விலங்கு ஒன்று தோட்டப்பகுதியில் செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
    • வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் சிறுத்தை? போன்ற வனவிலங்கு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகேயுள்ள கொங்க ர்பாளையம் வினோபா நகர் அருகில் செந்தில்குமார் என்பவர் தனது விவசாய தோட்டத்தில் பண்ணை அமைத்து கோழிகள் மற்றும் வாத்துகளை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் தோ ட்டத்தில் வளர்க்கப்பட்ட வாத்து ஒன்று காணாமல் போய் உள்ளது. இதனை யடுத்து நேற்று மதியம் விவசாய தோட்டத்தில் உள்ள பண்ணையில் கோழிகள் மற்றும் வாத்து களுக்கு செந்தில்குமார் தீனி வைக்க சென்றுள்ளார். அப்போது கோழி பண்ணை அருகே மர்ம விலங்கு ஒன்று தோட்டப்பகுதியில் செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    இது குறித்து செந்தில்கு மார் டி.என்.பாளையம் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின்பேரில் வனச்சரகர் கணேஷ் பாண்டியன் தலைமையிலான வனத்து றையினர் செந்தில்குமார் தோட்டத்திற்கு சென்று மர்ம விலங்கு குறித்து விசாரித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    கோழி பண்ணை மற்றும் தோட்டத்தை சுற்றிலும் கால் தடங்கள் உள்ளதா? எனவும், மர்ம விலங்கின் நடமா ட்டத்தின் அடையாளங்கள் ஏதேனும் உள்ளதா? எனவும் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். இதனையடுத்து தோட்டத்திற்குள் புகுந்த மர்ம விலங்கு குறித்து கண்டறிய அப்பகுதியில் 3 தானியங்கு கேமிராக்கள் பொருத்தப்பட்டு வனத்து றையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற னர்.

    விவசாய தோட்டம் உள்ள இடம் வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் சிறுத்தை? போன்ற வனவிலங்கு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    • ஒரு பெண் உள்பட 5 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தனர்.
    • அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மதுவிலக்கு டி.எஸ்.பி. பவித்ரா தலை மையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

    அப்போது வீரப்பன்சத்திரம் கைகட்டிவலசு பகுதியில் ஒரு பெண் உள்பட 5 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் வீரப்பன்சத்திரம் கருப்பன் தெருவை சேர்ந்த சுதர்சன் (21), பெரியேசேமூர் பகுதி சேர்ந்த விக்னேஷ் (26), சூளை பகுதியை சேர்ந்த ஞானபிரகாஷ் (24), அதே பகுதியை சேர்ந்த இளங்கோ (25), வெட்டுக்காட்டுவலசு பகுதியை சேர்ந்த 20 வயது பெண் ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் அவர்களிட மிருந்து 86 போதை மாத்திரைகள், 2 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை யடுத்து அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்ட னர்.

    பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படு த்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர். 

    • கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா வியாபாரிகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
    • தகவல் தெரிவிப்பவர்கள் பெயர், விபரங்கள் உள்ளிட்டவைகள் ரகசியம் காக்கப்படும்.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் செட்டியார் குப்பம் பகுதியில் கடந்த 3 நாட்க ளுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் வரை இறந்துள்ளனர். மேலும் பலர் சிகிச்சைக்காக மருத்து வமனையில் அனுமதிக்க ப்பட்டுள்ளனர்.

    இதையடு த்து மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை செய்ததாக 1,558-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டி.ஜி.பி. சைலே ந்திரபாபு தெரிவித்து ள்ளார்.

    இதனிடையே ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மதுவிலக்கு அமலாக்கபிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை செய்து வருகின்ற னர்.

    வரப்பா ளையம், கடத்தூர், பங்களாப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மதுவிலக்கு போலீசார் நடத்திய ரெய்டில் 4 பேர் கள்ளச்சாராயம் விற்றதாக கைது செய்யப்ப ட்டுள்ள தோடு 100 லிட்டர் கள்ளச்சா ராயம் பறிமுதல் செய்யப்ப ட்டுள்ளது.

    மேலும் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா வியாபாரிகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இது குறித்து ஈரோடு மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி. பவித்ரா கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் கள்ளச்சாராயம், சட்டவி ரோத மதுவிற்பனை மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

    மதுவிலக்கு அமலா க்கபிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொதுமக்கள் தங்களது பகுதியில் கள்ளச்சாராயம், சட்டவிரோத மது விற்பனை, கஞ்சா விற்ப னையில் ஈடுபடுபவர்கள் குறித்து 9003681542 என்ற செல்போன் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

    தகவல் தெரிவிப்பவர்கள் பெயர், விபரங்கள் உள்ளிட்டவைகள் ரகசியம் காக்கப்படும். போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ஈரோடு:

    ஈரோடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதியில் மின் வினியோகம் இருக்காது. பூசாரி சென்னிமலை வீதி 1, 2, 3, 4, 5, என்.ஜி.ஜி.ஓ., காலனி 1 முதல் 8 வரை, உழவன் நகர், நாராயணசாமி சாலை, பெரியார் சாலை, மாரப்பா வீதி 1, 2, 3, ஜகநாதபுரம் காலனி 1 முதல், 5 வரை, எஸ்.கே.சி. பிரதான சாலை, கிராமடை 1 முதல் 7 வீதி, தேவா வீதி, வரதராஜன் வீதி, லட்சுமணன் வீதி, மாகாளியம்மன் கோவில் வீதி.

    இதேப்போல் கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரண மாக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதியில் மின்வினியோகம் இருக்காது.

    கவுந்தப்பாடி, கொளத்து பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பா ளையம், எல்லீ ஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெரு ந்தலை யூர் , வெள்ளா ங்கோ யில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தருமாபுரி, கவுந்தப்பாடி புதூர், மாரப்பம் பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம், சந்தி ராபுரம், பெருமா பாளை யம், தன்னாசி பட்டி, பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, ஓடமேடு, கருக்கம்பாளையம், கண்ணாடி புதூர், மாணி க்கவலசு, அய்யன்வலசு, மணிபுரம், விராலிமேடு, தங்கமேடு, பி. மேட்டுப்பா ளையம், செந்தாம் பா ளையம், செட்டிபாளையம், ஆவரங்காட்டு வலசு, ஆலந்தூர், கவுண்ட ன்பாளையம் மற்றும் செரயாம்பாளையம்.

    இதேபோல் ஈரோடு-காசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதியில் மின்வினியோகம் இருக்காது. சூரம்பட்டி வலசு, அணைக்கட்டு ரோடு, சங்க நகர், சேரன் நகர், மாதவி வீதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, கோவலன் வீதி, காமராஜர் வீதி 1, 2, 3, நேரு வீதி, தாத்துக்காடு, நேதாஜி வீதி 1, 2, 3, சாஸ்திரி சாலை 1, 2 ரயில் நகர், கேகே நகர், சென்னிமலை ரோடு, ரங்கம் பாளையம், இரணியன் வீதி, பெரிய சடையம்பாளையம், சிவம் நகர், அண்ணா நகர், சேனாதி பாளையம், இண்டஸ்டிரியல் எஸ்டேட், காசிபாளையம், சாஸ்திரி நகர், ஜீவா நகர், மூலப்பாளையம், நாடார் மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில் நகர் காந்திஜி ரோடு இது என் ரோடு முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பேஸ் 1 முதல் 8, அம்பிகை நகர், அன்னை நகர், நல்லியம்பாளையம், பாலாஜி நகர், ஜீவானந்தம் ரோடு, தங்கப்பெருமாள் வீதி, ஈஸ்வரன் பிள்ளை வீதி, கள்ளுக்கடை மேடு மற்றும் பழைய ெரயில் நிலைய பகுதி.

    இந்த தகவலை ஈரோடு மின் பகிர்மான வட்டம் செயற்பொறியாளர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் நடந்த இந்த துணிகர கொள்ளை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு நாச்சிப்பா வீதியில் பிரிண்டிங் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு போஸ்டர் டிசைன், பிரிண்டிங், பேனர் டிசைன், திருமண பத்திரிக்கை டிசைன், லேசர் கட்டிங் மற்றும் அனைத்து வகையான டிசைன்கள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த பிரிண்டிங் கடை அருகே குடோனும் செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் உரிமையாளர் புஷ்பநாதன் (74). இவர் ஈஸ்வரன் கோவில் அருகே தெப்பக்குளம் வீதியில் வசித்து வருகிறார். இந்த கடை கடந்த 15 வருடமாக செயல்பட்டு வருகிறது.

    இங்கு மேலாளர், பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கடையின் மேல் தளத்தில் உரிமையாளர் அறையும், கேசியருக்கான அறையும் உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு ஊழியர்கள் கதவை பூட்டி விட்டு சென்று விட்டனர்.

    இந்நிலையில் இன்று காலை கடையில் வேலை பார்க்கும் ஊழியர் கடை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இது குறித்து உரிமையாளர் புஷ்பநாதனுக்கு தகவல் தெரிவித்தார்.

    அவர் உள்ளே சென்று பார்த்த போது கள்ளாப்பெட்டி திறந்து இருந்தது. மற்றும் கடையின் மேல் தளத்தில் உள்ள அறை, கேசியருக்கான அறையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. 2 அறையிலும் இருந்த கள்ளாப்பெட்டி சாவியை திறந்து ரூ.3 லட்சம் ரொக்க பணத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்பநாய் வீராவும் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த கடை மற்றும் அருகே உள்ள குடோன் வரை ஓடி சென்று திரும்பி வந்துவிட்டது.

    போலீசார் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது இன்று நள்ளிரவு 2.20 மணி அளவில் மர்ம நபர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே செல்வது பதிவாகியுள்ளது.

    சி.சி.டி.வி. கேமிராவில் தனது முகம் பதிவாகாமல் இருப்பதற்காக அவர் முகத்தில் துணி வைத்து மறைத்து இருந்தார். பின்னர் 3 மணிக்கு அந்த நபர் கடையில் இருந்து வெளியே செல்வது பதிவாகியுள்ளது. கடையில் எந்தெந்த இடத்தில் பணம் இருந்துள்ளது என்பது அந்த நபருக்கு நன்றாக தெரிந்துள்ளது.

    எனவே இந்த கடையை பற்றி நன்கு தெரிந்தவர் தான் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் சந்தேகிக்கின்றனர்.

    இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் நடந்த இந்த துணிகர கொள்ளை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கோபிசெட்டிபாளையம் அருகே உக்கடம் பகுதியில் கடத்தூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
    • பழைய சாராய வியாபாரிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

    ஈரோடு:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், மீனவ கிராமம், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் சாராயம் விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும்படி தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின்பேரில் போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் மாவட்டம் முழுவதும் சாராயம் விற்பனை நடைபெறுகிறதா? என்பதை தீவிரமாக கண்காணித்தனர். ஈரோடு, கோபி, பெருந்துறை, பவானி, சத்தியமங்கலம் ஆகிய 5 சப்-டிவிஷனில் அந்தந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக வனப்பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    மாவட்டத்தில் ஏற்கனவே சாராய விற்பனை சந்தேக பகுதிகளான வரபாளையம், ராயர்பாளையம் பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது நம்பியூர் அருகே ராயர்பாளையம் பகுதியில் நாட்டு சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து நம்பியூர் இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ராயர்பாளையம் பகுதியில் உள்ள கந்தசாமி (33) என்பவர் வீட்டில் வரபாளையம் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் அவரது வீட்டில் இருந்து 5 லிட்டர் விஷ வாடையுடன் கூடிய நாட்டு சாராயம் மற்றும் சாராயம் தயார் செய்ய வைத்திருந்த 40 லிட்டர் ஊறல் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    போலீசார் வருவதை தெரிந்து கொண்டு கந்தசாமி வீட்டிலிருந்து தப்பிவிட்டார். வீட்டில் இருந்த அவரது மனைவி ரஞ்சிதாவை (27) போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தப்பி ஓடிய கந்தசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதேபோல் கோபிசெட்டிபாளையம் அருகே உக்கடம் பகுதியில் கடத்தூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்ததில் அவரிடம் இருந்து 5 லிட்டர் பிடிக்கக்கூடிய 2 பிளாஸ்டிக் கேன்களில் 10 லிட்டர் சாராயம் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

    விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த செல்வம் (40) என தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் செல்வத்தை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    இதைபோல் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் சாராயம் விற்றதாக 6 பேரை கைது செய்து உள்ளனர். அவர்களிடமிருந்து 70 லிட்டர் சாராய ஊறல் மற்றும் விற்பனைக்கு வைத்திருந்த 5 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மதுவிலக்கு போலீசார் ஏற்கனவே சாராய விற்பனை சந்தேகப்பகுதிகளான வரபாளையம், ராயர்பாளையம் பகுதிகளில் சோதனை நடத்தி வழக்கு பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் சம்பவத்தை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் சாராயம் விற்பனை செய்யப்படுகிறதா? சாராய ஊறல் உள்ளதா? கடத்தப்படுகிறதா? என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    பழைய சாராய வியாபாரிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அவர்களின் தற்போதைய தொழில் வேலை குறித்தும் விசாரித்து வருகிறோம். முன்பு கடம்பூர், சத்தியமங்கலம், தாளவாடி பகுதியில் சாராயம் விற்பனை நடைபெற்றது. தற்போது மலைப்பகுதிகளில் சாராயம் காய்ச்சுதல் குறைந்துள்ளது. சாராயம் குறித்து பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×