போதை மாத்திரை-கஞ்சா விற்ற பெண் உள்பட 5 பேர் கைது

ஒரு பெண் உள்பட 5 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தனர்.அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.
கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

ஈரோடு:

ஈரோடு மதுவிலக்கு டி.எஸ்.பி. பவித்ரா தலை மையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது வீரப்பன்சத்திரம் கைகட்டிவலசு பகுதியில் ஒரு பெண் உள்பட 5 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் வீரப்பன்சத்திரம் கருப்பன் தெருவை சேர்ந்த சுதர்சன் (21), பெரியேசேமூர் பகுதி சேர்ந்த விக்னேஷ் (26), சூளை பகுதியை சேர்ந்த ஞானபிரகாஷ் (24), அதே பகுதியை சேர்ந்த இளங்கோ (25), வெட்டுக்காட்டுவலசு பகுதியை சேர்ந்த 20 வயது பெண் ஆகியோர் என்பது தெரிய வந்தது.

அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அவர்களிட மிருந்து 86 போதை மாத்திரைகள், 2 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை யடுத்து அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்ட னர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படு த்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர். 

X

Maalai Malar
www.maalaimalar.com