பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,084 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.37 அடியாக உள்ளது.அணையில் இருந்து 1,055 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,084 கன அடியாக அதிகரிப்பு
Published on

ஈரோடு:

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டம் மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர் வரத்து குறைய தொடங்கியது. அதேநேரம் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மீன் பிடிப்பு பகுதியில் மழை செய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.37 அடியாக உள்ளது.

நேற்று அணைக்கு வினாடிக்கு 594 கனஅடி வீதம் தண்ணீர் வந்த நிலையில் இன்று 1,084 கன அடியாக அதிகரித்து தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 900 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 1,055 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com