என் மலர்
ஈரோடு
- முக்கிய நிகழ்ச்சியான திருவிழா இன்று நடந்தது.
- அக்னி கும்பம் எடுத்து வருதல், பக்தர்கள் அலகு குத்துதல் நிகழ்ச்சிகள் நடந்தன.
கோபி:
கோபி கடைவீதியில் பிரசித்தி பெற்ற சாரதா மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வருட ந்தோறும் சித்திரை மாதம் சித்திரை பெருந்தி ருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான பூச்சாட்டுதல் விழா கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. 10-ந் தேதி திருக்கம்பம் நடுதல் நிகழ்ச்சியும், 15-ந் தேதி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும் நடைபெற்றது.
தொடர்ந்து 16-ந் தேதி 108 விளக்கு பூஜை, பூச்சொரிதல் நிகழ்ச்சி மற்றும் பட்டுபோர்த்தி ஆடு தல் நிகழ்ச்சியும் நடந்தன. 17-ந் தேதி பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், மலர் பல்லக்கில் அம்மை அழைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான திருவிழா இன்று நடந்தது. பெண்கள் மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சியும், பக்தர்கள் பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடை பெற்றது.
அதைத்தொ டர்ந்து அக்னி கும்பம் எடுத்து வருதல், பக்தர்கள் அலகு குத்துதல் நிகழ்ச்சிகள் நடந்தன.
தொடர்ந்து இரவு கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சி நடை பெறுகிறது. அதை த்தொடர்ந்து பூத வாகன காட்சி நடக்கிறது. நாளை மஞ்சள் நீர் உற்சவம், அம்மன் சிம்ம வாகனத்தில் காட்சியளிக்கிறார்.
நாளை மறுநாள் மஞ்சள் நீர் உற்சவம், ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியோடு இந்த ஆண்டுக்கான திருவிழா நிறைவு நடைபெறுகிறது.
- கர்நாடகா மாநில மதுவை வாங்கி வந்து விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.
- தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து பசுண்ணாவை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் அனுமதி இன்றி மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழு வதும் போலீசார் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி தாளவாடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தாள வாடி சி ஹெச் நகர் ரோடு, சோதனை சாவடி அருகே ஒரு நபர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார்.
அவரை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கர்நாடகா மாநில மதுவை வாங்கி வந்து விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரிடமிருந்த 12 மது பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர் தாளவாடி அடுத்த திகினாரை, அம்பேத்கர் தெருவை சேர்ந்த பசுண்ணா (38) என்ன தெரிய வந்தது.
இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து பசுண்ணாவை கைது செய்தனர்.
இதேப்போல் சித்தோடு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையி லான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது சித்தோடு அடுத்த வாய்க்கால் மேடு பகுதியில் அரசு அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த மோகனசுந்தரம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்த 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- சென்னிமலை வட்டார காங்கிரஸ் தலைவர் மாநில தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
- குடும்பச்சூழல் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கொள்றேன்.
சென்னிமலை:
சென்னிமலை வட்டார காங்கிரஸ் தலைவராக உள்ள சி.சி.ராஜேந்திரன் கட்சியில் இருந்து விலகுவதாக மாநில தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழகிரிக்கு சி.சி.ராஜேந்திரன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நான் 1996-ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், விவசாய பிரிவில் மாநில கொள்கை பரப்பு செயலாளர், ஈரோடு தெற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர்,
திருப்பூர் வடக்கு மாவட்ட பொது செயலாள ராகவும், மாநில பேச்சாளர், சென்னி மலை வட்டார காங்கிரஸ் தலைவர் உட்பட பல்வேறு பொறுப்பு களில் கடந்த 28 ஆண்டு காலம் பணியாற்றி வந்துள்ளேன்.
தற்போது குடும்பச்சூழல் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கொள்றேன்.
இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
- ஆக்கிரமிப்புகள் குறித்து முடிவெடுக்க அதிகாரிகள் குழு அமைக்கப்படடது.
- இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.
சென்னிமலை:
சென்னிமலையில் காங்கேயம் ரோடு, அரச்சலூர்ரோடு, நான்கு ராஜா வீதிகள், பெருந்துறை ரோடு, ஊத்துக்குளி ரோடு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து முடிவெடுக்க அதிகாரிகள் குழு அமைக்கப்படடது.
இக்குழு வும் அறிக்கை தாக்கல் செய்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும், இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வில்லை.
இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.
எனவே மாவட்ட கலெக்டர் நேரடி யாக தலையிட்டு ஆக்கிரமிப்பு க்களை அகற்றி, சாலை விரிவாக்க த்துக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பவானிசாகர் தனித்தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பண்ணாரி என்பவர் வெற்றி பெற்றார்.
- பொதுமக்கள் அரசின் திட்டங்கள், அடிப்படை வசதிகள், ரேசன் கார்டு, உதவித் தொகை உள்ளிட்டவை பெற பண்ணாரி எம்.எல்.ஏ.வை தினமும் சந்தித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் கடந்த தேர்தலில் கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் (தனி), பவானி, பெருந்துறை ஆகிய 4 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அ.தி.மு.க. கூட்டணியில் மொடக்குறிச்சி தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 8 தொகுதிகளில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி 5 தொகுதிகளிலும், தி.மு.க. கூட்டணி 3 தொகுதியிலும் வெற்றி பெற்றது.
இதில் பவானிசாகர் தனித்தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பண்ணாரி என்பவர் வெற்றி பெற்றார். இந்த தொகுதி கிராமங்கள் நிறைந்த பகுதியாகும். இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அரசின் திட்டங்கள், அடிப்படை வசதிகள், ரேசன் கார்டு, உதவித் தொகை உள்ளிட்டவை பெற பண்ணாரி எம்.எல்.ஏ.வை தினமும் சந்தித்து வருகின்றனர். இவர் பொதுமக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வான தன்னை யாரும் மதிப்பதில்லை என்று பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து பண்ணாரி எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
பவானிசாகர் தொகுதியில் கடந்த 2 தேர்தல்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. 2011 தேர்தலில் எங்கள் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. மேலும் இத்தொகுதியில் அதிக முறை அ.தி.மு.க. வெற்றி பெற்று உள்ளது. இந்நிலையில் இந்த தொகுதியில் இதுவரை நடக்காத ஒன்று கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. எனது தொகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக எந்த திட்டபணிகளும் முறையாக நடைபெறவில்லை.
நான் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்று 2 ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்த காலத்தில் பொதுமக்களின் கோரிக்கையான பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அரசின் உதவி கேட்டு என்னிடம் வந்த 2 ஆயிரம் மனுக்களை பரிந்துரை செய்து வருவாய்த்துறைக்கு அனுப்பி உள்ளேன். ஆனால் நான் பரிந்துரைக்கும் மனுக்களை வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. என்னையும், என் பரிந்துரைகளையும் அதிகாரிகள் புறக்கணிக்கிறார்கள்.
நேரில் சென்று கேட்டால் கூட இதோ செய்து விடுகிறேன் என்று கூறுவார்கள் ஆனால் செய்ய மாட்டார்கள். பொதுவாக என்னை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளமாட்டார்கள். பெயரளவுக்கு மட்டும் தான் நான் எம்.எல்.ஏ.வாக உள்ளேன். வி.ஏ.ஓ. முதல் தாசில்தார் வரை என்னை யாரும் மதிப்பதில்லை. மேலும் போலீசார், ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் என்னை புறக்கணிக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. என்ற முறையில் எனது உத்தரவுகள் மதிக்கப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் நான் அருந்ததியினர் வகுப்பை சார்ந்தவன் என்பது தான்.
இதனால் என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு என்னால் எந்த நன்மையும் செய்ய முடியவில்லை. எனக்கு முன் இந்த பதவியில் இருந்தவர்களுக்கு இந்த பிரச்சனை இருந்திருக்காது. அதற்கு அ.தி.மு.க. ஆட்சி தான் காரணம். அரசு விழாக்களுக்கு அழைக்க தவறினால் விசயம் வெளியே தெரிந்து விடும் என்பதால் அரசு விழாக்களுக்கு எனக்கு அழைப்பு வருகிறது.
அதிகாரிகள் என்னை மக்கள் பிரதிநிதியாக பார்க்கவில்லை. சாதி ரீதியாக தான் பார்க்கிறார்கள்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர் நம்மை என்ன செய்து விடுவார் என்று அதிகாரிகள் இருப்பதை பார்த்து இருக்கிறேன். என்னிடம் அதிகாரிகள் நடந்து கொள்ளும் விதம் குறித்து பலமுறை கலெக்டரிடம் முறையிட்டு உள்ளேன். இந்த விவகாரத்தில் இதுவரை நான் கட்சி தலைமைக்கு கொண்டு செல்லவில்லை. மக்கள் விண்ணப்பித்த மனுக்கள் மீது 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தை நடத்த உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எண்டோஸ்கோப்பி மூலம் அறுவை சிகிச்சை பெருந்துறை ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்டது.
- காப்பீடு திட்டத்தன் மூலம் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பெருந்துறை:
பவானியை அடுத்துள்ள குருவரெட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் பவுனாயாள் (48). இவர் கடந்த 3 மாதமாக மூளை நீர் வலது மூக்கு வழியாக தன்னிச்சையாக வருவதாகவும் கடுமையான தலை வலியாலும் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். அவருக்கு நவீன முறையில் சி.டி. ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்ததில் அவருக்கு மூக்கின் வழியாக மூளை தண்டுவட நீர் கசிவு நோய் இருப்பதாக கண்டறியப்பட்டது.
அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய போதிய உபகரணங்கள் இல்லாத காரணத்தினால் டாக்டர்கள் உதவியுடன் அமெரிக்காவாழ் தமிழ் மருத்துவர்கள் சங்கம் சார்பாக உபகரணங்கள் வாங்கப்பட்டு அவருக்கு அதிநவீன அறுவை சிகிச்சை முறையில் வெளிபுறம் ஏதும் காயமின்றி மூக்கின் வழியாக உள்நோக்கும் கருவி மூலமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் எண்டோஸ்கோப்பி வழியாக மூளை தண்டுவட நீர் கசிவை அடைத்தல் அறுவை சிகிச்சை முதன் முறையாக பெருந்துறை ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சை கல்லூரி முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி அறிவுறுத்துத்தலின் படி மருத்துவ கண்காணிப்பாளர் சிவராமரன் தலைமையில் காது, மூக்கு, தொண்டை மருத்துவக் குழு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் மயக்கவியல் துறை மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்த அறுவை சிகிச்சையை முடித்தனர்.
மேலும் கடந்த 12 நாட்களாக சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளார். பவுனாயாள் தற்போது மூளை நீர் வருவது நின்று தலைவலி குறைந்து நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் கூறினர். இந்த அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் செய்தால் ரூ.2 லட்சம் வரை செலவாகும். அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தன் மூலம் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
- அரிசி ஆலையில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
- புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு ரேஷன் அரிசியை கடத்தும் கும்பலை பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் அருண் உத்தரவின் பேரில் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி, ஈரோடு சரக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் ஈரோடு மாவட்ட இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் சென்னிமலையில் உள்ள தமிழ்நாடு அரசு நுகர் பொருள் வாணிபக்கழக அரிசி ஆலையில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து மற்ற பகுதியில் உள்ள அரிசி ஆலைகளிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரேஷன் அரிசி சம்பந்தமாக முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் இருக்க அரிசி உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
இது தொடர்பாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.
- விவசாயிகள் 6,581 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
- தேங்காய்கள் 68 ஆயிரத்து 445 ரூபாய்க்கு விற்பனையானது.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 6,581 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.
இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 52 காசுக்கும், அதிகபட்ச விலையாக 26 ரூபாய் 1 காசுக்கும், சராசரி விலையாக 24 ரூபாய் 24 காசுக்கும் ஏலம் போனது.
மொத்தம் 2,898 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 68 ஆயிரத்து 445 ரூபாய்க்கு விற்பனையானது.
- புதிய தாசில்தாராக பெரியசாமி இன்று பொறுப்பேற்று கொண்டார்.
அந்தியூர்:
அந்தியூர் தாசில்தாராக பணியாற்றி வந்த தாமோதரன் தற்போது ஈரோடு கேபிள் டி.வி. தாசில்தாராக பணி மாறுதலாகி சென்றார்.
இதனையடுத்து புதிய தாசில்தாராக பெரியசாமி இன்று பொறுப்பேற்று கொண்டார்.
இவர் இதற்கு முன் நம்பியூரில் தாசில்தாராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது.
பெருந்துறை:
பெருந்துறை சென்னி மலை ரோடு விக்னேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 47). இவர் திருப்பூரில் தனியாக கம்பெனி நடத்தி வருகிறார்.
இவர் தனது மாமனாரின் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். இதையடுத்து சேகர் மட்டும் தனது வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதை தொடர்ந்து அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் பீரோவை உடைத்து அதில் இருந்த 6 பவுன் தங்க செயின் உள்பட மொத்தம் 11 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது.
இதேபோல் அதே பகுதி யை சேர்ந்தவர் துர்க்கைராஜ் என்பவர் பழனி கீரனூர் சென்றார். இதையடுத்து மீண்டும் அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் கதவு திறந்திரு ப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 1/2 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.
ஒரே பகுதியில் 2 வீடுகளில் நகை கொள்ளை போன சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- மழையால் சென்னிமலையில் மலை பகுதி பச்சை போர்வை போர்த்தியது போல் காட்சி அளிக்கிறது.
- பக்தர்கள் வனப்பகுதி இயற்கை அழகையும் கண்டு ரசித்து செல்கின்றனர்.
சென்னிமலை:
சென்னிமலை மலை வனப்பகுதி 1,400 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த மலை முற்றிலும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கடந்த 3 மாதங்களாக கடும் கோடை வெயிலின் தாக்கத்தால் மலை பகுதியில் உள்ள மரங்கள் எல்லாம் வாடி இலைகள் உதிர்ந்து வறண்டு கிடந்தது. இதனால் சென்னிமலை மலையினை பார்த்தால் வறண்ட பாலைவனம் போல் ஆங்காங்கே பாறைகள் தெரிய கிடந்தது.
இந்த நிலையில் கடந்த வாரத்தில் பெய்த மழையால் சென்னிமலையில் மலை பகுதியில் இருந்த மரம், செடி, கொடிகள் நன்கு துளிர் விட்டு செழித்து வளர்ந்துள்ளதால் தற்போது பார்பதற்கு மலை பச்சை பசேல் என பச்சை போர்வை போர்த்தியது போல் காட்சி அளிக்கிறது.
சென்னிமலை முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் தற்போது மலையின் வனப்பகுதி இயற்கை அழகையும் கண்டு ரசித்து செல்கின்றனர்.
இதில் மான்களும், குரங்குகளும், மயில்களும், முயல்களும், பல ரக பறவைகளும் குதூகளித்து விளையாடுவது பொதுமக்களை மேலும் பரவச படுத்துகிறது.
- பிரதீப் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி கிடந்துள்ளார்.
- உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த புள்ளப்பநாயக்கன் பாளையம் வேட்டுவன் புதூர் ரோடு, காந்தி வீதியை சேர்ந்தவர் பிரதீப் (27). இவர் டிராக்டர் ஓட்டும் வேலை செய்து கொண்டு, டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த கோபால் என்பவரது தோட்டத்தில் தங்கி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று காலை சுமார் 7 மணியளவில் கோபால் தோட்டத்தில் உள்ள 12 அடி ஆழம் உள்ள நிலத்தடி தண்ணீர் தொட்டி அருகே வந்த போது பிரதீப் அந்த தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி கிடந்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த கோபால் பிரதீபின் உறவினர்களுக்கு போனில் தகவல் கொடுத்துள்ளார். உறவினர்கள் வந்து தண்ணீர் தொட்டியில் மூழ்கி கிடந்த பிரதீப் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பிரதீப் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் விசாரணையில் பிரதீப் குளிக்க சென்ற போது எதிர்பாராமல் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து? நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.






