என் மலர்
நீங்கள் தேடியது "The driver fell into the"
- பிரதீப் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி கிடந்துள்ளார்.
- உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த புள்ளப்பநாயக்கன் பாளையம் வேட்டுவன் புதூர் ரோடு, காந்தி வீதியை சேர்ந்தவர் பிரதீப் (27). இவர் டிராக்டர் ஓட்டும் வேலை செய்து கொண்டு, டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த கோபால் என்பவரது தோட்டத்தில் தங்கி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று காலை சுமார் 7 மணியளவில் கோபால் தோட்டத்தில் உள்ள 12 அடி ஆழம் உள்ள நிலத்தடி தண்ணீர் தொட்டி அருகே வந்த போது பிரதீப் அந்த தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி கிடந்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த கோபால் பிரதீபின் உறவினர்களுக்கு போனில் தகவல் கொடுத்துள்ளார். உறவினர்கள் வந்து தண்ணீர் தொட்டியில் மூழ்கி கிடந்த பிரதீப் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பிரதீப் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் விசாரணையில் பிரதீப் குளிக்க சென்ற போது எதிர்பாராமல் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து? நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.






