search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Private Sector Employment Camp"

    • வேலை வாய்ப்பு முகாம் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரும் 19-ந் தேதி நடத்தப்பட உள்ளது.
    • இம்முகாமில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட நிர்வாகம், ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளியில் வரும் 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட உள்ளது.

    இம்முகாமில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார். இவ்வேலை வாய்ப்பு முகாமில் 50-க்கும் மேற்பட்ட தனியார் துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு 1000-க்கும் மேற்பட்ட காலிப்பணி யிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.

    இம்முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ்-2 தேர்ச்சி, பட்டதாரி கள், பட்டய ப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, தொழில் கல்வி பெற்ற வர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்கு பவர்கள், தையல் கற்றவ ர்கள் என அனைத்து வித தகுதியுள்ள மாற்றுத்திற னாளி, வேலை நாடுநர்களும் கலந்து கொள்ளலாம்.

    முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவ சமானதாகும். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு க்கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி களுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்க ளுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் குறித்த வழி காட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.

    ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துடன் இணைந்து நடத்தப்படும் இவ்வேலை வாய்ப்பு முகாம், வேலை நாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

    எனவே தனியார் துறை யில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைத்து மாற்றுத்தி றனாளிகளும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும், இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணிய மர்த்தம் செய்யப்படும் வேலை நாடுநர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவுஎண் ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் கலெக்டர் கிருஷ்ணணுண்ணி தெரிவித்துள்ளார்.

    மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலகம் மற்றும் ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண்: 9499055942, 94990 55943, 04242275860 அல்லது மின்னஞ்சல் முகவரி: erodemegajobfair@gmail.com வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

    • ஓமலூர் அருகே உள்ள பத்மவாணி மகளிர் கல்லூரியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
    • சேலம் மாவட்ட ஆட்சி தலைவர் கார்மேகம் துவக்கி வைத்துள்ள இந்த முகாமில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பெண்கள் பங்கேற்றுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பத்மவாணி மகளிர் கல்லூரியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் சுமார் 320-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றனர்.

    குறிப்பாக தங்க நகை விற்பனை மற்றும் உற்பத்தி, அடகு நிறுவனங்கள், சிமெண்ட், ரப்பர், செப்பல், கார், மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனங்கள், சிறு ஹோட்டல்கள் முதல் ஹோட்டல் நிறுவனங்கள், விமான உதிரிபாக உற்பத்தி நிறுவனம், மருத்துவமனைகள், ஆசிரியர் என பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. சேலம் மாவட்ட ஆட்சி தலைவர் கார்மேகம் துவக்கி வைத்துள்ள இந்த முகாமில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பெண்கள் பங்கேற்றுள்ளனர்.

    ஒவ்வொருவரும் தாங்கள் படித்த படிப்புக்கேற்ற வேலை வழங்கும் நிறுவனங்களை அணுகி வேலையை பெற்று வருகின்றனர். மேலும், இந்த முகாமில் 8-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டம், முதுநிலை பட்டம், பொறியியல், செவிலியர், கேட்டரிங், உணவு தயாரிப்பு வரையிலான வேலைக்கு, அவர்களின் படிப்புக்கு ஏற்ற வேலை வழங்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், தருமபுரி ஆகிய அண்டை மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பெண்களும் கலந்து கொண்டுள்ளனர்.

    மேலும், இந்த வேலை வாய்ப்பு முகாமிற்கு வருபவர்களை, முக்கிய நகரங்களில் இருந்து இலவசமாக அழைத்து வருவதற்கு பள்ளி கல்லூரி பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து முகாமில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் பணி ஆணைகளை வழங்கினார்.

    சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஓமலூர் அருகே மெகா வேலைவாய்ப்பு முகாமில் தனியார் 320 கம்பனிகளில் வேலை வாய்ப்பை பெறுவதற்கு 20 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு கம்பெனியும் தங்களுக்கு தேவையான ஆட்களை நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுத்து வருகின்றனர். இந்த முகாமில் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நிகழ்ச்சியில் வேலை வாய்ப்பு பயிற்சி இயக்குனர் வீரராகவராவ், மாவட்ட கலெக்டர் கார்மேகம், மேயர் ராமச்சந்திரன், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம், மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், தொழிலக பாதுகாப்பு துறை இயக்குனர் ஜெகதீசன், மாவட்ட வருவாய் அதிகாரி மேனகா, வேலைவாய்ப்பு மண்டல இயக்குனர் லதா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • கரூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.
    • தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது.

    கரூர்

    கரூர் தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

    இவ்வாரத்திற்குரிய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, கணினிப்பயிற்சி மற்றும் பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களின் கல்வி சான்றிதழ்கள் மற்றும் சுயவிவர குறிப்புகளுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்றுக் கொள்ளலாம்.

    தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணி காலியிடங்களில் தகுதிவாய்ந்த பதிவுதாரர்களை தேர்வு செய்து கொள்ளலாம். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்குபெற விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுவோர் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது.

    (மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 04324-223555) வேலை தேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கரூர் மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பெரம்பலூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
    • 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது :

    பெரம்பலூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

    பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த சிறு, குறு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளை கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப்பணியே ஆகும். மேலும் முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த 10-க்கும் மேற்பட்ட பிரபல தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யவுள்ளனர்.

    எனவே 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

    எனவே இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும், தனியார் துறை நிறுவனங்களும் முகாமில் கலந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×