என் மலர்
ஈரோடு
- மாநிலங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர்.
- 10 நாட்களே இருப்பதால் பள்ளி சீருடைகள் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
ஈரோடு,
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஈரோடு ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி கடைகள் வார கடைகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கி ழமை மாலை வரை ஜவுளி சந்தை நடைபெற்று வரு கிறது. இந்த ஜவுளி சந்தை உலகப் புகழ்பெற்றது.
இதில் மகராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள். மற்ற இடங்களை காட்டிலும் இங்கு விலை குறைவாக இருப்பதால் இங்கு எப்போது மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்களில் கூட்டம் அலைமோதும். கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
நேற்று மாலை முதல் வழக்கம் போல் ஜவுளி வார சந்தை கூடியது. சென்ட்ரல் தியேட்டர் அருகே உள்ள வளாகத்திலும் வாரச்சந்தை கூடியது. ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர். கேரளாவில் இருந்து குறைந்த அளவிலும் , தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் வியாபாரி கள் வந்திருந்தனர்.
தற்போது கோடை விடுமுறை முடிய இன்னும் 10 நாட்களே இருப்பதால் பள்ளி சீருடைகள் விற்பனை சூடுபிடிக்க தொடங்கி யுள்ளது. கடந்த வாரத்தி லிருந்து பள்ளி சீருடையை வியாபாரிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதே போல் இந்த வாரமும் பள்ளி சீருடை வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியது. வெளி மாநில வியாபாரிகள் பள்ளி சீருடைகளை மொத்த மாக வாங்கி சென்றனர்.
இதனால் இன்று மொத்த வியாபாரம் 40 சதவீதம் நடைபெற்றது. இதைப்போல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் இன்று சில்லரை விற்பனையும் 35 சதவீதம் நடைபெற்றது. கடும் வெயிலையும் பொருட்படு த்தாமல் வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் கோட்டை தலைவர் அருண்குமார் தலைமை தாங்கினார்.
- ரெயில் ஓட்டுநர்களையும் சேர்த்து காலி பணி யிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
ஈரோடு,
அகில இந்திய ரெயில் ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக அனைத்து கோட்ட அளவிலான ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று ஈரோடு ரெயில் நிலையத்தில் ஈரோடு ஓட்டுனர் அலுவலகம் முன்பு ரெயில் ஓட்டு நர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் கோட்டை தலைவர் அருண்குமார் தலைமை தாங்கினார். மண்டல துணைச் செயலாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்து கண்டன உரையாற்றினார்.
விருப்ப மாறுதல் வேண்டி பதிவு செய்தவர்களை கடந்த 4 வருடமாக பணி மாற்றம் செய்யாததை கண்டித்தும், வந்தே பாரத் உட்பட பல புதிய ரெயில்களை ஓட்ட போதுமான ரெயில் ஓட்டுநர்களையும் சேர்த்து காலி பணி யிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
பெண் ரெயில் ஓட்டுநர்க ளுக்கான அடிப்படை வசதிகளை உடனே ஏற்ப டுத்தி தர வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை வலி யுறுத்தி ரெயில் ஓட்டுநர்கள் கோஷத்தில் ஈடுபட்டனர்.
- திருப்பூர் மாவட்டம் காங்கேய த்துக்கு மற்றொரு லாரி சென்று கொண்டு இருந்தது.
- 2 லாரிகளும் எதிர்பாராத விதமாக மோதி க்கொண்டன.
சென்னிமலை,
மதுரையில் இருந்து ஒரு லாரி பழைய இரும்பு பொருட்களை ஏற்றி கொண்டு சென்னிமலை அருகே ஈங்கூரில் உள்ள ஒரு தனியார் இரும்பு தொழிற்சாலைக்கு லாரி சென்று கொண்டிருந்தது.
இந்த லாரியை நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே சோழசிராமணியை சேர்ந்த பழனிசாமி (வயது 39) என்பவர் ஓட்டி வந்தார். சென்னிமலை அருகே காங்கேயம் ரோட்டில் பசுவபட்டி பிரிவு என்ற இடத்தில் லாரி சென்று கொண்டு இருந்தது.
அப்போது அந்த வழியாக திருப்பூர் மாவட்டம் காங்கேய த்துக்கு மற்றொரு லாரி சென்று கொண்டு இருந்தது. சென்னிமலை அருகே வந்த போது அந்த 2 லாரிகளும் எதிர்பாராத விதமாக மோதி க்கொண்டன.
இந்த விபத்தில் 2 லாரிகளின் முன் பகுதியும் அப்பளம் போல் நொறுங்கி யது. இதில் இடிபாடுகளுக்கு இடையே லாரி டிரைவர் பழனிசாமியின் கால் சிக்கி கொண்டது. இதனால் காலை வெளியே எடுக்க முடியாமல் அவர் வலியால் அலறி துடித்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் வந்து 20 நிமிடம் போராடி பழனிசாமியை மீட்டனர். காலில் காயம் ஏற்பட்டிருந்ததால் பழனிசாமியை மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்த்தனர். விபத்து ஏற்பட்டதும் மற்றொரு லாரியின் டிரைவர் அங்கிரு ந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது. இதுகுறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
- ஜல்லி க்குட்டை நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்
- நீர் நிலையை சுற்றி சுற்றுச்சூழல் மாசுபடுகிறது
பு.புளியம்பட்டி,
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்து மாதம்பாளையம் பகுதியில் உள்ள ஜல்லி க்குட்டை நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என ஜல்லிக்குட்டையில் கள ஆய்வு நடத்திய சப்-கலெக்டரிடம் பாரதிய ஜனதா விவசாய அணியினர் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஒருங்கிணைப்பு குழு ஆகிய அமைப்பினர் மனு அளித்தனர்.
மேற்படி 70 ஆண்டு களுக்கு மேல் பழமையான ஜல்லிக்குட்டு நீர் நிலைக்கு அதன் அருகில் உள்ள தேவகிரி மலையில் இருந்து வரும் அதிகப்ப டியான மழை நீரானது கால்வாய் வழியாக நெடுஞ்சாலை துறையால் கட்டப்பட்டிருக்கும் நீர்வழிப் பாலத்தின் வழியே சென்று ஜல்லி குட்டை நீர் நிலையை வந்தடைகிறது. மேலும் இதன் மதகு வழியே வெளியேறும் நீரானது பல சிறு குளங்களை கடந்து நல்லூர் மற்றும் புங்கம்பள்ளி குளத்தை அடைகிறது.
இந்த ஜல்லிக் குட்டையில் தேங்கும் நீரானது அப்பகுதி சுற்றியுள்ள சுமார் 850 ஏக்கர் நிலத்தடி நீர் உயர்ந்து விவசாயத்திற்கு உதவும் என கூறுகின்றனர்.
இந்த ஜல்லி குட்டையில் உள்ளூர் மற்றும் வெளியூர்ல் இருந்து இறந்தவர்களின் உடலை புதைத்து வருவதால் இந்த நீர் நிலையை சுற்றி சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
ஜல்லி குட்டையில் நீர் நிலையை நம்பி அப்பகுதி விவசாயிகள் உள்ளதால் குட்டையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி தருமாறும் மற்றும் ஜல்லிக்குட்டையில் இறந்த வர்களின் உடலை புதைக்க கூடாது என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
- பாதிப்பு 9 வரை பதிவாகி வந்த நிலையில் தற்போது பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது.
- மாவட்டத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் கடந்த மாதம் கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வந்தது. கடந்த மாதம் தினசரி பாதிப்பு 9 வரை பதிவாகி வந்த நிலையில் தற்போது பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. பாதிப்பை காட்டிலும் குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 890 ஆக உள்ளது.
இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 152 ஆக உள்ளது. மாவட்டத்தில் இதுவரை 736 பேர் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் 2 பேர் மட்டுமே கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
- 30 லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதா ரமாக கொண்டு உள்ளார்கள்.
- ஒரு கோடி 73 லட்சம் சேலை உற்பத்தி செய்யப்படுகிறது.
ஈரோடு,
தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனு அனுப்பி உள்ளார்.
தமிழகத்தில் விவசா யத்துக்கு அடுத்த படியாக ஜவுளி தொழிலில் விசை த்தறி தொழில் பெரும் பங்கு வகித்து வருகிறது. தமிழ கத்தில் 6 லட்சத்துக்கு மேற்பட்ட விசைத்தறிகளும் அதனை சார்ந்து நேரடியாக வும், மறைமுகமாகவும் 30 லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதா ரமாக கொண்டு உள்ளார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக ஜவுளி தொழில் மிகவும் மோசமடைந்து குறிப்பாக நூல் விலை ஏற்றம், இறக்கம் காரணமாக விசைத்தறிகள் விற்பனைக்கு மற்றும் உடைக்கப்பட்டு இரும்பு வியாபாரத்திற்கும் சென்று கொண்டிருந்த தருவாயில் தமிழக அரசு நூல் விலை கட்டுப்பாடு தொடர்பாக மத்திய அரசுக்கு வலியுறு த்தல் அதன் விளைவாக தற்போது நூல் விலை நிலையாக உள்ளது.
அதேபோல் செஸ்வரி போன்றவை விலக்கு மூலம் ஜவுளி உற்பத்தியாளர்கள் தமிழகத்தில் பெரும் பயன் பெற்று வந்தார்கள்.
மேலும் விசைத்தறி யாளர்களின் வாழ்வாதா ரத்தை மேம்படுத்த தமிழக அரசு சார்பில் விலையில்லா வேட்டி சேலை உற்பத்தி, பள்ளி சீருடை உற்பத்தி போன்றவை தமிழகத்தில் உள்ள 225 விசைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் மூலம் 63 ஆயி ரத்துக்கு மேற்பட்ட விசைத்தறி களின் மூலம் உற்பத்தி செய்து வரப்படுகிறது.
கடந்த ஆண்டு வேட்டி, சேலை வடிவத்தில் சில மாறுதல் செய்யும் கார ணத்தால் சற்று தாமதமாக உற்பத்தி தொடங்கி கடந்த மார்ச் மாதம் ஒரு கோடியே 77 லட்சம் வேட்டி மற்றும் ஒரு கோடி 73 லட்சம் சேலை உற்பத்தி செய்யப்பட்டு இதன் மூலம் பல விசைத்தறி உரிமையாளர்கள் தங்களு டைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தியும் அழிந்து வரும் விசைத்தறி தொழிலை மீட்டு அதன் பின் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களை கூட்டமைப்பின் தேர்தல் வாக்குறுதி கோரிக்கையை ஏற்று அதை நிறைவேற்றும் பொருட்டாக இலவச மின்சாரம் 750-ல் இருந்து 1000 யூனிட் ஆக வழங்க வேண்டும்.
கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்ட மின் கட்ட ணத்தை கடந்த மார்ச் மாதம் பாதியாக குறைத்து விசை த்தறியாளர்களின் வாழ்வா தாரத்தில் விளக்கேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
வேட்டி, சேலை உற்பத்தி முடிந்த பின் பள்ளிச் சீருடை விற்பனை உற்பத்தி தொடங்கும். அதேபோல் இந்த வருடம் விசைத்தறியில் உற்பத்தி செய்ய கேஸ்மட் ரகம் மட்டும் 59,63077 மீட்டர்கள் வந்துள்ளது. இந்த உற்பத்தி என்பது விசைத்தறியாளர்கள் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்து விடுவார்கள்.பின் ஜூன் மாதத்தில் இருந்து விசைத்தறியாளர்களுக்கு வேலை வாய்ப்பு பாதிக்கப்படும்.
எனவே தமிழக முதல்- அமைச்சர் 2023-24-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலை உற்பத்தி திட்டத்தை ஜூன் மாதத்தில் தொடங்கி டிசம்பர் மாதத்துக்குள் முடித்து தரும் வகையில் மே மாத இறுதி க்குள் உற்பத்தி தொடக்கம் தொடர்பாக அரசாணை அறிவித்து அதன் பின் உற்பத்தி தொடர்பான நூல் டெண்டர், சைசிங் டெண்டர் போன்றவற்றை நிறைவு செய்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் உள்ள 225 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் விசைத்தறி யாளர்களுக்கு உற்பத்தி ஆணை வழங்கி போர்க்கால அடிப்படையில் உற்பத்தியை தொடங்க தாங்கள் ஆணை பிறப்பித்து வாழ்வா தாரத்தை மேம்படுத்த பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரசு செலவில் 5 நாட்கள் கண்டுகளிக்க அழைத்துச் செல்லப்பட்டனர்.
- காலை, மதியம் வகுப்புகள், மாலையில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.
ஈரோடு,
பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவ- மாணவி களுக்கு சிறார் திரைப்பட போட்டி, குழு போட்டிகள், தனித் திறன் போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் சிறப்பிடம் பிடித்த மாணவ- மாணவிகளை கோடை கொண்டாட்டம் என்ற தலைப்பில் நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை அரசு செலவில் 5 நாட்கள் கண்டுகளிக்க அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதில் ஈரோடு மாவட்ட த்தில் 27 அரசு பள்ளி மாணவ -மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டத்தில் 12 மாணவிகள், 7 மாணவர்கள் என 19 பேரும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 8 மாணவ - மாணவிகள் என மொத்தம் 27 பேர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கோடை கொண்டாட்டத்திற்காக நேற்று சிறப்பு அரசு பஸ்சில் ஈரோட்டில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.
இவர்கள் இன்று முதல் வரும் 27-ந் தேதி வரை 5 நாட்களுக்கு ஊட்டியில் தங்க வைக்கப்பட்டு, காலை, மதியம் வகுப்புகள், மாலை யில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. 27 மாணவ -மாணவிகளை கண்காணிக்க மாவட்ட பசுமை படை ஒருங்கிணைப்பாளர் கீதா தலைமையில் 3 ஆசிரியை ஆசிரியர்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
- ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
- பிரேமா அடிக்கடி செத்துப் போய் விடுவதாக கூறிவந்துள்ளார்.
கோபி,
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த பொலவக்காளி பாளையம், பூசாரி வலசு பகுதியைச் சேர்ந்தவர் பிரேமா (60). கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பிரேமா வீட்டில் தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் இடது பக்க இருப்பில் பலத்த அடிபட்டு கோபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மாவு கட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.
எனினும் வலி பொறுக்க முடியாமல் பிரேமா அடிக்கடி செத்துப் போய் விடுவதாக கூறிவந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வலி தாங்க முடியாமல் வீட்டிலிருந்த சாணிபவுடரை (விஷம்) குடித்து வாந்தி எடுத்தார். அக்கம் பக்கத்தி னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி பிரேமா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரு மில் ஒன்றில் தங்கி வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார்.
- 3 மணியளவில் குப்புற விழுந்த நிலையில் பேச்சு மூச்சின்றி கிடந்து ள்ளார்.
ஈரோடு,
ஈரோடு அருகே உள்ள நாதகவுண்டம்பாளையம், ஆலுச்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி (73). இவர், மோளகவுண்ட ம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மில் ஒன்றில் தங்கி வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 2 நாள்களாக உடல் நிலை சரி இல்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் மில்லுக்குள் சாம்பல் கொட்டும் இடத்தில் முத்துசாமி நேற்று மதியம் 3 மணியளவில் குப்புற விழுந்த நிலையில் பேச்சு மூச்சின்றி கிடந்து ள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே முத்துசாமி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து, முத்துசாமியின் மகன் சக்திவேல் அளித்த புகாரின் பேரில் ஈரோடு தாலு கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக அடுத்த மாதம் 9-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
- ஒவ்வொரு துறைகளிலும் 60 மாணவர்கள் வீதம் சேர்க்கப்பட உள்ளனர்.
ஈரோடு,
பெருந்துறை அரசு தொழிற் நுட்பக் கல்லூரியில், 2023- 2024 -ம் கல்வி ஆண்டுக்கான முதலாமாண்டு முழுநேர பட்டயப் படிப்பில் சேர மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக அடுத்த மாதம் 9-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இக்கல்லூரியில் அமைப்பியல், எந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் மற்றும் கணினி பொறியியல் ஆகிய 5 முழுநேரப் பாடப்பிரிவுகளில் ஒவ்வொரு துறைகளிலும் 60 மாணவர்கள் வீதம் சேர்க்கப்பட உள்ளனர்.
இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யும் பொதுப்பிரிவினர் ரூ.150 பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். பழங்குடி-பட்டியல்(எஸ்.சி.-எஸ்.டி) பிரிவினருக்கு விண்ணப்ப பதிவுக் கட்டணம் இல்லை.
முதலாமாண்டு டிப்ளமோ சேர விரும்பும் மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மது குடித்து வந்த ராஜனுக்கு கடந்த 13-ந் தேதி உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
- மேம்பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மீண்டும் மது குடித்துள்ளார்.
ஈரோடு, நீலகிரி மாவட்டம், கூடலூர், கோத்ராவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (44). இவரது மனைவி லைலா (38). இவர்களுக்கு 17,18 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
ராஜன், மதுவுக்கு அடிமையானதால் கருத்துவேறுபாடு ஏற்பட்டு மனைவி, குழந்தைகளைப் பிரிந்து ஈரோட்டுக்கு வந்து தனியாக வசித்து வந்துள்ளார்.
அதிக அளவில் மது குடித்ததால் ராஜனுக்கு குடல் மற்றும் உடலின் உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்துள்ளார். ஆனாலும், டாக்டரின் அறிவுரையை ஏற்காமல் தொடர்ந்து மது குடித்து வந்த ராஜனுக்கு கடந்த 13-ந் தேதி உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவ மனையில் உள் நோயாளியாக ராஜன் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன் தினம் மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்த ராஜன், மேம்பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மீண்டும் மது குடித்துள்ளார். இதை யடுத்து, அவர் அங்கேயே இறந்துவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த ராஜன் மனைவி லைலா, நேற்று ஈரோடு வந்து அவரது உடலை பெற்றுக் கொண்டார்.
இதுகுறித்து, ஈரோடு அரசு மருத்துவமனை புறக் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தினம் ஒரு உள்வட்டத்தில் உள்ள கிராம மக்கள் பங்கேற்கும் வகையில் நடைபெறும்.
- 31-ந் தேதி சென்னிமலை உள்வட்ட கிராமங்களுக்கும் ஜமா பந்தி நடைபெறவுள்ளது.
ஈரோடு,
ஈரோடு வருவாய்க் கோட்டாட்சியர் தலைமையில் பெருந்துறை உள்வட்டத்தில் ஜமா பந்தி நடைபெற உள்ளது. இந்த ஜமா பந்தியில் பொது மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்கள் மூலமாக வழங்கி உடனடித் தீர்வு பெறலாம்.
இந்த ஜமா பந்தி நிகழ்ச்சி 25-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரை தினம் ஒரு உள்வட்டத்தில் உள்ள கிராம மக்கள் பங்கேற்கும் வகையில் நடைபெறும். அதன்படி, 25-ந் தேதி பெருந்துறை உள்வட்டத்தைச் சேர்ந்த கிராமங்களுக்கும், 26-ந் தேதி திங்களூர் உள்வட்டத்துக்கும், 29-ந் தேதி காஞ்சிக்கோயில் உள்வட்டத்துக்கும், 30-ந் தேதி வெள்ளோடு உள்வட்டத்துக்கும், 31-ந் தேதி சென்னிமலை உள்வட்ட கிராமங்களுக்கும் ஜமா பந்தி நடைபெறவுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட உள்வட்டத்தில் உள்ள மக்கள் அந்தந்த தேதியில் தங்கள் பகுதிக்கு நடைபெறவுள்ள ஜமா பந்தியில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம்.






