என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை
    X

    மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை

    • ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • பிரேமா அடிக்கடி செத்துப் போய் விடுவதாக கூறிவந்துள்ளார்.

    கோபி,

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த பொலவக்காளி பாளையம், பூசாரி வலசு பகுதியைச் சேர்ந்தவர் பிரேமா (60). கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பிரேமா வீட்டில் தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் இடது பக்க இருப்பில் பலத்த அடிபட்டு கோபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மாவு கட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    எனினும் வலி பொறுக்க முடியாமல் பிரேமா அடிக்கடி செத்துப் போய் விடுவதாக கூறிவந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வலி தாங்க முடியாமல் வீட்டிலிருந்த சாணிபவுடரை (விஷம்) குடித்து வாந்தி எடுத்தார். அக்கம் பக்கத்தி னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி பிரேமா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×