search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
    X

    நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

    • ஜல்லி க்குட்டை நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்
    • நீர் நிலையை சுற்றி சுற்றுச்சூழல் மாசுபடுகிறது

    பு.புளியம்பட்டி,

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்து மாதம்பாளையம் பகுதியில் உள்ள ஜல்லி க்குட்டை நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என ஜல்லிக்குட்டையில் கள ஆய்வு நடத்திய சப்-கலெக்டரிடம் பாரதிய ஜனதா விவசாய அணியினர் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஒருங்கிணைப்பு குழு ஆகிய அமைப்பினர் மனு அளித்தனர்.

    மேற்படி 70 ஆண்டு களுக்கு மேல் பழமையான ஜல்லிக்குட்டு நீர் நிலைக்கு அதன் அருகில் உள்ள தேவகிரி மலையில் இருந்து வரும் அதிகப்ப டியான மழை நீரானது கால்வாய் வழியாக நெடுஞ்சாலை துறையால் கட்டப்பட்டிருக்கும் நீர்வழிப் பாலத்தின் வழியே சென்று ஜல்லி குட்டை நீர் நிலையை வந்தடைகிறது. மேலும் இதன் மதகு வழியே வெளியேறும் நீரானது பல சிறு குளங்களை கடந்து நல்லூர் மற்றும் புங்கம்பள்ளி குளத்தை அடைகிறது.

    இந்த ஜல்லிக் குட்டையில் தேங்கும் நீரானது அப்பகுதி சுற்றியுள்ள சுமார் 850 ஏக்கர் நிலத்தடி நீர் உயர்ந்து விவசாயத்திற்கு உதவும் என கூறுகின்றனர்.

    இந்த ஜல்லி குட்டையில் உள்ளூர் மற்றும் வெளியூர்ல் இருந்து இறந்தவர்களின் உடலை புதைத்து வருவதால் இந்த நீர் நிலையை சுற்றி சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.

    ஜல்லி குட்டையில் நீர் நிலையை நம்பி அப்பகுதி விவசாயிகள் உள்ளதால் குட்டையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி தருமாறும் மற்றும் ஜல்லிக்குட்டையில் இறந்த வர்களின் உடலை புதைக்க கூடாது என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

    Next Story
    ×