என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு அரசு"

    • அரசு செலவில் 5 நாட்கள் கண்டுகளிக்க அழைத்துச் செல்லப்பட்டனர்.
    • காலை, மதியம் வகுப்புகள், மாலையில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.

    ஈரோடு,

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவ- மாணவி களுக்கு சிறார் திரைப்பட போட்டி, குழு போட்டிகள், தனித் திறன் போட்டிகள் நடத்தப்பட்டது.

    இதில் சிறப்பிடம் பிடித்த மாணவ- மாணவிகளை கோடை கொண்டாட்டம் என்ற தலைப்பில் நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை அரசு செலவில் 5 நாட்கள் கண்டுகளிக்க அழைத்துச் செல்லப்பட்டனர்.

    இதில் ஈரோடு மாவட்ட த்தில் 27 அரசு பள்ளி மாணவ -மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டத்தில் 12 மாணவிகள், 7 மாணவர்கள் என 19 பேரும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 8 மாணவ - மாணவிகள் என மொத்தம் 27 பேர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கோடை கொண்டாட்டத்திற்காக நேற்று சிறப்பு அரசு பஸ்சில் ஈரோட்டில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.

    இவர்கள் இன்று முதல் வரும் 27-ந் தேதி வரை 5 நாட்களுக்கு ஊட்டியில் தங்க வைக்கப்பட்டு, காலை, மதியம் வகுப்புகள், மாலை யில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. 27 மாணவ -மாணவிகளை கண்காணிக்க மாவட்ட பசுமை படை ஒருங்கிணைப்பாளர் கீதா தலைமையில் 3 ஆசிரியை ஆசிரியர்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். 

    ×