என் மலர்
ஈரோடு
- டி.என்.பாளையம் அருகே குடும்பத்தகராறில் மாமனார், மைத்துனரை கத்தியால் குத்தியவரை சிறையில் அடைத்தனர்
- இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.என்.பாளையம்,
டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் இந்திரா நகரை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகள் தமிழக்கொடிக்கும் டி.என்.பாளையத்தை சேர்ந்த பெரியவன் என்பவரது மகன் வெற்றிவேல் (வயது 40) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தாரணி (9) என்ற மகளும், சித்தார்த் (8) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக தமிழ்க்கொடி கணவனை பிரிந்து குழந்தை களுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 19-ந்தேதி தமிழ்க்கொடியின் பெற்றோர் வீட்டிற்கு சென்ற வெற்றிவேல் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதை ரங்கசாமி மற்றும் அவரது மகன் சந்தோஷ் (36) தட்டி கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த வெற்றி வேல் மறைத்து வைத்து இருந்த கத்தியால் ரங்கசாமி யை குத்தி உள்ளார். இதை தடுக்க வந்த சந்தோஷையும் வெற்றி வேல் குத்தி உள்ளார். இதில் காயமடைந்த ரங்கசாமி மற்றும் சந்தோசை அருகில் இருந்தவர்கள் மீட்டு சத்தி யமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகி ச்சைக்காக அனுமதி த்தனர். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிந்து வெற்றி வேலை கைது செய்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
- கோபிசெட்டிபாளையம் பகுதி கடைகளில் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்
- 20 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பறிமுதல்
கோபி,
கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் புகையிலை பொரு ட்கள் விற்கப்ப டுகிறதா என பொது சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். சுகாதார பணி துணை இயக்குநர், ஈரோடு மற்றும் கோபி செட்டிபாளையம் நகராட்சி ஆணை யாளர்கள் உத்தரவி ன்படி, வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் செல்வம் தலைமை யிலான குழுவினர் மற்றும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செந்தி ல்குமார் தலைமையிலான குழு வினரும் கடைவீதி மற்றும் அனுமந்தராயன் கோயில் வீதிகளில் உள்ள மொத்த விற்பனை கடை களில் ஆய்வு செய்தனர். இதில் தடை செய்ய ப்பட்ட பிளாஸ்டிக் பொரு ட்கள் ஒரு கடையில் விற்ப னைக்கு வைக்க ப்பட்டி ருந்தது கண்டறி யப்பட்டு சுமார் 20 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகள் கைப்ப ற்றப்ப ட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் ரூ.4 ஆயிரம் வரை அபராதம் விதித்தனர். தடை செய்யப்பட்ட புகை யிலைப் பொருட்கள் எதுவும் ஆய்வில் கண்டறி யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஈரோடு புறநகர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சசிகலா நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
- சசிகலா கவுந்தப்பாடியில் நால்ரோடு, கோபிசெட்டிபாளையம் எம்.ஜி.ஆர். திடல் மற்றும் கணக்கம்பாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் தனது ஆதரவாளர்களையும், பொதுமக்களையும் சந்தித்து பேசுகிறார்.
ஈரோடு:
தமிழகம் முழுவதும் சசிகலா சுற்றுப்பயணம் செய்து தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் ஈரோடு புறநகர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அவர் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
நாளை காலை 11 மணி அளவில் தி.நகர் வீட்டில் இருந்து புறப்படும் சசிகலா கோவை வழியாக ஈரோடு புறநகர் மாவட்டத்தில் உள்ள பவானி-அந்தியூர் பிரிவுக்கு மாலை 4 மணி அளவில் வருகிறார். அங்கு அவருக்கு ஆதரவாளர்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.
அங்கிருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்கும் சசிகலா கவுந்தப்பாடியில் நால்ரோடு, கோபிசெட்டிபாளையம் எம்.ஜி.ஆர். திடல் மற்றும் கணக்கம்பாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் தனது ஆதரவாளர்களையும், பொதுமக்களையும் சந்தித்து பேசுகிறார்.
பின்னர் திருப்பூர் செல்லும் சசிகலா அன்று இரவு அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார். அதன் பின்னர் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு திருப்பூர் மாவட்டம் வளர்மதி பஸ் நிறுத்தத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கும் சசிகலா திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகம், அவிநாசி புதிய பஸ் நிலையம் அருகே ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பேசுகிறார். சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளை ஈரோடு, திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- ஆகஸ்ட் 15 -ந் தேதி அன்று கீழ்பவானி கால்வாயில் பாசன நீர் திறந்து விட வேண்டும்.
- முடிக்கப்படாத கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
சென்னிமலை:
கீழ்பவானி வாய்க்காலில் காங்கிரீட் அமைக்க பாசனதாரர்கள், குடிநீர் ஆதாரம் பெறும் கிராம மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நீர்வளத் துறை சார்பில் வாய்க்காலில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
அதில் அரசு அறிவிப்புக்கு மாறாக மண்கரைகளை சேதப்படுத்தி வருவதை கண்டித்து ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த கீழ்பவானி பாசன பாதுக்காப்பு இயக்கத்தினர் இன்று முதல் தினம் ஒரு பகுதியில் வாய்க்காலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி முதல் நாளான இன்று காலை ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட கீழ்பவானி வாய்க்காலின் 83-வது மைலில் உள்ள ஓட்டக்குளம் பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆகஸ்ட் 15 -ந் தேதி அன்று கீழ்பவானி கால்வாயில் பாசன நீர் திறந்து விட வேண்டும். நல்ல நிலையில் இருந்த மண் கரைகளை சேதப் படுத்தி அந்த இடங்களில் கட்டுமானங்களை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் நீர்வளத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முடிக்கப்படாத கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். உண்மையான பாசன விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமல் தயாரித்த மோகன கிருஷ்ணன் அறிக்கையை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். கான்கிரீட் திட்டம் கோரும் அரசாணை எண். 276-ஐ அரசு ரத்து செய்ய வேண்டும்.
68 ஆண்டுகளாக உள்ள மக்களுக்கான மண் கரை மற்றும் மண் அணையை பாதுகாக்க வேண்டும். கரைகளில் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களை பாதுகாக்க வேண்டும்.
வாய்க்கால் கரையில் மண் திருட்டு, மர திருட்டு, நீர் திருட்டு, பவானி ஆறு மாசுபடுதல் உள்ளிட்ட செயல்களுக்கு காரணமானவர்கள் மற்றும் துறை அதிகாரிகள் மீது உறுதியான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமையில் ஓட்டக்குளம் பகுதி கீழ்பவானி பாசன தாரர்கள், குடிநீர் ஆதாரம் பெறும் கிராம மக்கள் என 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
- உற்பத்தி செய்யப்படும் ரயான் துணிகள் வடமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
- ஓபன் என்ட் மில்களில் காட்டன் நூல் வாங்கி தறிகளை இயக்கி வந்தனர்.
ஈரோடு:
ஈரோட்டில் வீரப்பன் சத்திரம், லக்காபுரம், சித்தோடு உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 20 ஆயிரம் தறிகளில் ரயான் துணிகளும், 10 ஆயிரம் தறிகளில் பருத்தி நூல் துணிகளும் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.
இங்கு உற்பத்தி செய்யப்படும் ரயான் துணிகள் வடமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
கடந்த 6 மாதங்களாக ரயான் துணிகளுக்கான தேவை குறைந்ததாலும், மழையின் காரணமாகவும் ஈரோட்டில் உற்பத்தியாகும் ரயான் துணிகள் தேக்கமடைந்தன. இதனால் பலரும் ஓபன் என்ட் மில்களில் காட்டன் நூல் வாங்கி தறிகளை இயக்கி வந்தனர்.
இந்நிலையில் ஓபன் என்ட் மில்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் கழிவு பஞ்சில் இருந்து உற்பத்தியாகும் நூல்களுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் ஈரோட்டில் விசைத்தறியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 ஆயிரம் தறிகளில் 10 ஆயிரம் தறிகள் நிறுத்தப்பட்டுள்ளன. எஞ்சிய தறிகள் பகுதி நேரம் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் 40 சதவீதம் அளவிற்கு தொழில் முடங்கி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக விசைத்தறியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதே நிலை தமிழ்நாடு முழுவதும் நிலவுவதால் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.
விசைத்தறி தொழில் முடங்கியதால் தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர். வாரத்திற்கு பாதி நாட்கள் கூட வேலை கிடைப்பதில்லை என்றும், வாரத்திற்கு 2,500 ரூபாய் ஊதியம் பெற்று வந்த தங்களுக்கு அது ஆயிரம் ரூபாய் பெறுவதே சிரமமாக இருப்பதாகவும், கூலி தொகை பாதியாக குறைந்ததால் குடும்பத்தை நடத்த முடியாத சூழலில் தவிப்பதாகவும் தெரிவித்தனர்.
இலவச வேட்டி சேலைக்காக இ-டெண்டர் அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், இலவச, வேட்டி சேலை உற்பத்திக்கான நூல்களை தமிழக அரசு விரைந்து வழங்க வேண்டும் என ஈரோடு விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரயான் மற்றும் காட்டன் நூல் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள நெசவாளர்களுக்கு, இலவச வேட்டி- சேலை ஆர்டர்கள் கை கொடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
- கிணற்றில் தண்ணீர் இல்லாததால் சிறுத்தை தவறி விழுந்ததில் இருந்து அங்குமிங்குமாக உறும்பி கொண்டு ஓடிக்கொண்டு இருந்தது.
- ஏராளமான பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையை பார்க்க குவிய தொடங்கினர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புதுகுய்யனூர் பிரிவு உள்ளது. இந்த பகுதி வனப்பகுதியையொட்டி உள்ளது. இங்கு ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவ்வப்போது யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் புதுகுய்யனூர் பிரிவு அருகே மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் 100 அடி ஆழத்தில் கிணறு ஒன்று உள்ளது. புதர்களால் நிறைந்து கிடக்கும் இந்த கிணற்றில் தண்ணீர் எதுவும் இல்லை.
இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று அந்த பகுதியாக வந்தபோது எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளது. சுமார் 100 அடி ஆழம் கொண்ட இந்த கிணற்றில் தண்ணீர் இல்லாததால் சிறுத்தை தவறி விழுந்ததில் இருந்து அங்குமிங்குமாக உறும்பி கொண்டு ஓடிக்கொண்டு இருந்தது.
இதனையடுத்து இன்று காலை அந்த வழியாக வந்தவர்கள் சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்டு கிணற்றுக்குள் எட்டி பார்த்த போது சிறுத்தை கிணற்றுக்குள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதன் பேரில் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையை மீட்பது குறித்து ஆலோசனை நடத்தினர். சிறுத்தை கிணற்றுக்குள் விழுந்த செய்தி அறிந்து புதுப்பீர்கடவு, ராஜன்நகர், பண்ணாரி ஆகிய பகுதிகளில் உள்ள ஏராளமான பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையை பார்க்க குவிய தொடங்கினர்.
பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வருவதால், வனத்துறையினர் அனைவரையும் வெளியேறும்படி அறிவுறுத்தினர். கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை கடும் சீற்றத்துடன் உள்ளது. எனவே மயக்க ஊசி செலுத்தி சிறுத்தை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு முன்னர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இதே கிணற்றில் கரடி ஒன்று விழுந்தது. அதனை தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் ஆகியோர் மயக்க ஊசி செலுத்தி அதனை மீட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் கொண்டு விட்டது குறிப்பிடத்தக்கது.
- பாசனத்திற்காக தண்ணீர் திறக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.
- குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து மலர்கள் தூவி தண்ணீர் திறந்து விட்டப்பட்டது.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி குண்டேரிப் பள்ளம் அணைக்கு குன்றி, விளாங்கோம்பை, மல்லிய துர்கம், கடம்பூர் உள்ளிட்ட வன பகுதியில் பெய்யும் மழை நீர், காட்டாறுகள் வழியாக அணையில் தேக்கி வைக்கப்படுகிறது.
குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து வினோபாநகர், வாணிப்புத்தூர், மோதூர், கொங்கர்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் ஆண்டு முழுவதும் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்நிலையில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.
அதைத்தொடர்ந்து இன்று குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து இடது மற்றும் வலது கரை என இரு வாய்க்கால்களிலும் பொதுப்பணித்துறை சார்பில் அணையில் பூஜை செய்து மலர்கள் தூவி தண்ணீர் திறந்து விட்டப்பட்டது.
இன்று முதல் வரும் ஆகஸ்ட் மாதம் 13-ந் தேதி வரை பாசனத்திற்காக தண்ணீர் வழங்கப்படுகிறது. இதில் வலது கரையில் 18 கனஅடி தண்ணீரும்,
இடது கரையில் 6 கன அடி தண்ணீர் என மொத்தம் 24 நாட்கள் தொடரில் 20 நாட்கள் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டும். 4 நாட்கள் தண்ணீர் நிறுத்தம் செய்யப்படும் என்றும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரத்தனகிரி, குண்டேரிப்பள்ளம் பாசன விவசாயிகள் சங்க தலைவர் குப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- காய்கறி விலைவாசி உயர்வை கண்டித்தும், ஊழலை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
ஈரோடு:
காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்பட அத்தி யாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், ஊழலை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க அரசை கண்டித்தும் இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி ஈரோடு ஒருங்கிணைந்த அ.தி.மு.க. சார்பில் இன்று வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பா ட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார்.
எம்.எல்.ஏ.க்கள் ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ். தென்னரசு, சிவசுப்பிரமணி, ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் எம்.எல்.ஏ., கருப்பணன் எம்..எல்.ஏ. ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காய்கறி விலைவாசி உயர்வை கண்டித்தும், ஊழலை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
இதில் முன்னாள் எம்.பி. செல்வகுமார சின்னையன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி. பழனிச்சாமி, பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஷ், கோவிந்தராஜன், மாநகராட்சி எதிர்க்கட்சித்தலைவர் தங்கமுத்து, மாணவர் அணி மாவட்ட செயலாளர் ரத்தன் பிரித்வி, மாணவர் அணி தலைவர் சிவக்குமார்,
தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோபால் கிருஷ்ணன், பெரியார் நகர் பகுதி அவை தலைவர் மீன்ராஜா, மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் துரை சக்திவேல், சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் பொன் சேர்மன், பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி கே.செல்வராஜ், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், முருகானந்தம், மாதையன், பிரதிநிதி கஸ்தூரி, சூரிய சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சுமை தூக்கும் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று 8-வது நாளாக நீடித்து வருகிறது.
- ரூ.700 கோடி மதிப்பிலான சரக்குகள் தேங்கி கிடப்பதால் லாரி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் அவதி அடைந்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோட்டில் உள்ள லாரி புக்கிங் மற்றும் டெலிவரி குடோன்களில் சுமை தூக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13-ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
6 வருடங்களாக கூலி உயர்வு வழங்கப்படாததை கண்டித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஈரோடு பார்க் ரோட்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் சரக்கு லாரி புக்கிங் சங்க நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நேற்று தினம் மாலையில் நடைபெற்றது.
இதில் இரு தரப்பினரும் தங்களது தரப்பு விளக்கத்தை அமைச்சரிடம் தெரிவித்தனர். இருதரப்பு விவரங்களையும் கேட்டறிந்த பிறகு லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகம் தரப்பில் 6 பேரும், தொழிற்சங்க நிர்வாகிகள் 6 பேரும் பொது நபராக ஒரு வக்கிலும் என 13 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் இந்த குழுவின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த குழுவினர் நேற்று அமைச்சர் முன்னிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொழிற்சங்கம் சார்பிலும், லாரி டிரான்ஸ்போர்ட் சார்பிலும் அமைக்கப்பட்ட குழுவில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது லாரி டிரான்ஸ்போர்ட் நிர்வாகம் சார்பில் தொழிலாளர்கள் கேட்ட ஊதிய உயர்வில் இருந்து பாதி தருவதாக கூறினர்.
ஆனால் முழு தொகையை வழங்க வேண்டும் என்று தொழிலா ளர்கள் வலியுறுத்தினார். இதனால் பேச்சு வார்த்தை முடிவுக்கு வராமல் இழுபறியாக இருப்பது.
இதனையடுத்து இன்று மாலை மீண்டும் இரு தரப்புக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுமை தூக்கும் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று 8-வது நாளாக நீடித்து வருகிறது.
இன்று ஸ்டார் தியேட்டர் அருகே அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நிர்வாகிகள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்ட தர்ணா போராட்டம் நடைபெற்றது.
தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் ஈரோட்டில் இருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு ஜவுளி, மஞ்சள், எண்ணெய் வகைகள் அனுப்ப முடியாமல் குடோன்களில் தேங்கி இருக்கின்றன.
கிட்டத்தட்ட ரூ.700 கோடி மதிப்பிலான சரக்குகள் தேங்கி கிடப்பதால் லாரி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் அவதி அடைந்துள்ளனர்.
இன்று நடைபெறும் பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு ஏற்படுமா? என எதிர்பா ர்க்கப்படுகிறது.
- பையை சோதனை செய்த போது அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
- கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் சித்தராஜை கைது செய்தனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த எரகனள்ளி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது கல்மண்டிபுரம் குட்டை அருகே ஒரு வாலிபர் பையுடன் நின்று கொண்டு இருந்தார். போலீசாரை கண்டதும் அவர் அங்கிருந்து செல்ல முயன்றார்.
பின்னர் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.
பின்னர் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் கல்மண்டிபுரம் கிராமத்தை சேர்ந்த சித்தராஜ் (28) என்பதும்,
விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. சுமார் 750 கிராம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் சித்தராஜை கைது செய்தனர்.
- பைக் திருடிய சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
- போலீசார் வெங்கடேஷ் கைது செய்து பவானி கிளை சிறையில் அடைத்துள்ளனர்.
பவானி:
பவானி போலீசார் பழைய பஸ் நிலையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அவர் முன்னுக்கு பின் பதில் அளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பவானி போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் பவானி அருகில் உள்ள காலிங்கராயன்பாளையம், வெத்தலை மார்க்கெட் வீதியில் வசிக்கும் வெங்கடேஷ் (24) ஆட்டோ டிரைவர் என்பதும்,
கடந்த சில தினங்களுக்கு முன்பு பவானி வர்ணபுரம் 1-வது வீதியில் கட்டிட கூலி தொழிலாளி ஜக்கையன் என்பவருக்கு சொந்தமான பைக் திருடிய சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து போலீசார் வெங்கடேஷ் கைது செய்து பவானி கிளை சிறையில் அடைத்துள்ளனர்.
- மது விற்றதாக வெங்கடேஷ் என்பவரை கைது செய்தனர்.
- மது அருந்த அனுமதித்தாக 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சிங்கிரிபாளையத்தில் டாஸ்மாக் கடை மூடிய நேரத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக கோவை சூலூர் காமாட்சிபுரத்தை சேர்ந்த ரகுபதி (31) என்பவரை போலீசார் கைது செய்து 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு கொல்லம்பாளையத்தில் மது விற்றதாக பச்சப்பாளியை சேர்ந்த வெங்கடேஷ்(49) என்பவரை கைது செய்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பெருந்துறையில் மது விற்றதாக கவுரிசங்கர் (31) என்பவரை போலீசார் கைது செய்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் அரசு அனுமதியின்றி மது அருந்த அனுமதித்தாக புளியம்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (43), பாண்டியன் (72), பெருந்துறையில் தனபாலன் (34), பழனிசாமி (60), ஈஸ்வரன் மனைவி புஷ்பா (53) ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.






