என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    100 அடி கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை வனப்பகுதியில் விடப்பட்டது
    X

    100 அடி கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை வனப்பகுதியில் விடப்பட்டது

    • 10 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது
    • சிறுத்தை தெங்குமரஹாடா, மங்கள வனப்பகுதியில் விடப்பட்டது

    சத்தியமங்கலம்,

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புதுகுய்யனூர் பிரிவு அருகே மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் 100 அடி ஆழத்தில் கிணறு ஒன்று உள்ளது. புதர்களால் நிறைந்து கிடக்கும் இந்த பாழும் கிணற்றில் தண்ணீர் எதுவும் இல்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதி யில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று அந்த பகுதியாக வந்த போது எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளது.

    சுமார் 100 அடி ஆழம் கொண்ட இந்த கிணற்றில் தண்ணீர் இல்லா ததால், சிறுத்தை தவறி விழுந்ததில் இருந்து அங்குமி ங்கும் ஆக உறும்பி கொண்டு ஓடிக்கொண்டு இருந்தது. அந்த வழியாக வந்தவர்கள் சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்டு கிணற்றுக்குள் எட்டிப் பார்த்த போது சிறுத்தை கிணற்றுக்குள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக சத்தியமங்கலம் வனத்துறை யினருக்கு தகவல் அளித்த னர். அதன் பேரில் வனத்து றை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தை யை மீட்பது குறித்து ஆலோ சனை நடத்தினர்.

    சிறுத்தை கிணற்றுக்குள் விழுந்த செய்தி அறிந்து புதுப்பீர்கடவு, ராஜன்நகர், பண்ணாரி ஆகிய பகுதி களில் உள்ள ஏராளமான பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தை யை பார்க்க குவிய தொட ங்கினர். பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வருவதால், வனத்து றையினர் அனைவரையும் வெளியேறும்படி அறிவு றுத்தினர். முதலில் சிறு த்தைப் புலியை உயிருடன் பிடிக்க கிரேனில் கூண்டை கட்டி உள்ளே கோழியை கிணற்றுக்குள் இறக்கினர். ஆனால் சிறுத்தை புலி கூண்டுக்குள் வரவில்லை.

    இதைத் தொடர்ந்து நீளமான ஏணியை விட்ட னர். ஆனால் அப்போதும் சிறுத்தை வரவில்லை. இறுதியாக கூண்டுக்குள் உயிருடன் ஒரு ஆட்டை போட்டு மூடி மீண்டும் கிணற்றுக்குள் உள்ளே இறக்கினார்கள். அதைப் பார்த்து சிறுத்தை ஆட்டை பிடிப்பதற்காக கூண்டுக்குள் வந்து சிக்கிக்கொண்டது. இதையடுத்து வனத்துறை, தீயணைப்பு துறையினர் கூண்டை மேலே இழுத்தனர். பின்னர் அங்கு தயார் நிலையில் இருந்த வாகன த்தில் கூண்டை ஏற்றி சிறுத்தையை தெங்குமர ஹாடா, மங்கள வனப்பகுதி யில் பத்திரமாக விட்டனர். கூண்டை திறந்ததும் சிறுத்தை வனப் பகுதிக்குள் ஓடி சென்றது. இதனால் கிட்டத்தட்ட 10 மணி நேரம் போராட்டம் முடிவுக்கு வந்தது.

    Next Story
    ×