என் மலர்tooltip icon

    ஈரோடு

    • லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு நடுப்பாளையம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த சித்தோடு நடுப்பாளையம் பகுதியை சேர்ந்த நடராஜ் மகன் ரமேஷ் (வயது 57), அதே பகுதியை சேர்ந்த மணி மகன் ஆனந்தன் (51) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட செல்போன் மற்றும் ரூ.300 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரி நடந்து சென்று கொண்டிருந்த சக்திவேல் மீது மோதியது.
    • இதில் சம்பவ இடத்திலேயே சக்திவேல் இறந்தார்.

    ஈரோடு:

    கொடுமுடியை அடுத்த ஒத்தக்கடை தழுவம்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (54). தச்சுத்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று சாலைப்புதூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கரூரில் இருந்து மணல் லோடு ஏற்றி்க்கொண்டு முத்தூர் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்து. சாலைப்புதூர் ரோட்டில் லாரி வந்த போது நடந்து சென்று கொண்டிருந்த சக்திவேல் மீது மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே சக்திவேல் இறந்தார். இது குறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவயிடத்திற்கு வந்து சக்திவேல் உடலை மீட்டு பிரதே பரிேசாதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மது பாட்டில்களை சிலர் சாலையோரம் வீசியும், உடைத்தும் செல்லுகின்றனர்.
    • யானைகளுக்கு சாலையோரம் கிடக்கும் துண்டு பாட்டில்களால் காயம் ஏற்படும் அபாயம் உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தி யமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி இயற்கை எழில் நிறைந்த பகுதியாகும். இந்த வழியாக செல்லும் ரோட்டின் இரு புறமும் மரங்கள், செடிகள் வளர்ந்து பசுமை யாக காட்சியளிக்கும்.

    இது ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதி என்ப தால் இந்த வழித்தடத்தில் சாலையின் ஓரத்தில் வாகன ஓட்டிகள் வாகனத்திலிருந்து மது அருந்துகின்றனர். பின்னர் அந்த மது பாட்டில்களை சிலர் சாலையோரம் வீசியும், உடைத்தும் செல்லுகின்றனர்.

    இதனால் அந்த வழியே நடந்து செல்லும் வனவி லங்குகள் பெரும் துன்பத்தி ற்கு ஆளாகின்றன. பண் ணாரி, திம்பம், ஆசனூர், காரப்பள்ளம், தாளவாடி, தலமலை, கேர்மாளம் செல் லும் வழியில் ஏராளமான யானைகள் தினமும் உணவு மற்றும் தண்ணீர் தேடி ரோட்டை கடந்து செல்கி ன்றனர்.

    அவ்வாறு கடந்து செல்லும் யானைகளுக்கு சாலையோரம் கிடக்கும் துண்டு பாட்டி ல்களால் காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. மது அருந்துபவர்கள் வன விலங்குகளின் வாழ்விடத்தை பற்றி அக்கறை கொள்வதில்லை. யானைகள் இருந்தால் தான் காடுகள் வளம் பெறும். வனப்பகுதி செழிப்பாக இருந்தால் தான் மழைப்பொ ழிவும் அதிகமாகும். இதனால் வனப் பகுதி யில் சிதறி கிடக்கும் மது பாட்டில்க ளை அப்புறப்ப டுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண் டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

    • பண்ணாரி சோதனை சாவடி அருகே இரவு நேரங்களில் யானை கூட்டம் உலா வருகின்றன.
    • லாரிகளை வழிமறித்து கரும்புகளை சாப்பிட்டு வருகின்றன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தி யமங்கலம் புலிகள் காப்ப கத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட் டெருமை, மான்கள் உள்பட ஏராளமான வனவிலங்கு கள் வசித்து வருகின்றன.

    இந்நிலையில் சத்தி யமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனை சாவடி அருகே கடந்த சில நாட்க ளாக இரவு நேரங்களில் யானை கூட்டம் உலா வரு கின்றன.

    பண்ணாரி சோத னை சாவடி அருகே கர்நாட காவில் இருந்து தமிழக த்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

    இதைப்போல் தமிழகத் தில் இருந்தும் கர்நாடகாவு க்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் கரும்பு களை ஏற்றி சென்று வரும் லாரிகளை கடந்த சில நாட்களாக யானை கூட்டங்கள் வழிமறித்து கரும்புகளை தின்று வருவதை தொடர்கதையாகி வருகிறது.

    கரும்பு கட்டுடைகளை ஏற்றி வரும் லாரி டிரைவர்கள் சில நேரம் பாரங்கள் அதிகமாக இருப்பதால் வனப்பகுதியில் உள்ள சாலையோரம் கரும்பு கட்டுகளை தூக்கி வீசி விட்டு சென்று விடுகின்றனர்.

    இதனால் அந்த வழியாக செல்லும் யானைகள் கரும்புகளை தின்று பழக்கப்ப ட்டதால் அதன் காரணமாக தினமும் அந்த பகுதியில் யானைகள் வருகின்றன.

    கரும்புகளை ஏற்றி வரும் லாரிகளுக்காக யானைகள் காத்திருக்கின்றன. பின்னர் கரும்புகளை ஏற்றி வரும் லாரிகளை வழிமறித்து கரும்புகளை சாப்பிட்டு வருகின்றன.

    இதனால் இந்த வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் அந்தப் பகுதியை கடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.

    இது குறித்து வனத்து றையினர் கூறும் போது, பண்ணாரி சோதனை சாவடி அருகே கடந்த சில நாட்களாக இரவு நேர ங்களில் யானை கூட்டம் உலா வருகின்றன. கரும்பு கட்டுகளை சாப்பிடுவதற்காக யானைகள் வருகின்றன.

    எனவே இரவு நே ங்க ளில் வரும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வே ண்டும். தேவையி ல்லாமல் சாலையில் இறங்கி நடமாட வேண்டாம். அதைப்போல் யானை கூட்டங்களை செல் போனில் படம் எடுக்கக் கூடாது என எச்சரித்தனர்.

    • 3-வது நாளாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
    • கொடுமுடியில் அதிகபட்சமாக 8 சென்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. அக்னி நட்சத்திரம் வெயில் போன்று வெயில் பதிவாகி வந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கடந்த 2 நாட்க ளாக பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    இந்நிலை யில் நேற்று 3-வது நாளாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மதிய முதல் இரவு வரை இடியுடன் கூடிய கன மழை பெய்தது.

    குறிப்பாக கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை 2 மணி நேரம் இடைவிடாது இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    மாவட்டத்தில் கொடு முடியில் அதிகபட்சமாக 86 மில்லி மீட்டர் அதாவது 8 சென்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது.

    இதேபோல் நம்பியூரில் சுமார் மாலை 2 மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ஈரோடு மாநகரா ட்சி பகுதியில் நேற்று மதியம் 2 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது அதன் பிறகு கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது.

    சுமார் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் மாநகரின் பல்வேறு பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. மாநகராட்சியில் தற்போது பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இடங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    ஈரோடு நாச்சியப்பா வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, மேட்டூர் ரோடு, மீனாட்சி சுந்தரனார் சாலை ஆர்.கே.வி.ரோடு, பெருந்துறை ரோடு பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    ஈரோடு வ.உ.சி. மார்க்கெட் பகுதி சேரும், சகதிவுமாக காட்சியளிக்கிறது. இதனால் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் வியாபாரிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதேப்போல் பெருந்துறை, வரட்டுபள்ளம், கோபி, கவுந்தப்பாடி, தாளவாடி, குண்டேரி பள்ளம், மொடக்குறிச்சி, அம்மா பேட்டை போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. 3 நாட்களாக மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று ஈரோடு மாவட்டத்தில் கனத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    அந்தியூர் அருகேயுள்ள எண்ணமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில், ஏராளமான விவசாயிகள் நேந்திரம், கதலி, மொந்தன், பூவன் உள்ளிட்ட வாழை சாகுபடி செய்துள்ளனர்.

    இந்நிலையில் எண்ணமங்கலம் சுற்று வட்டார பகுதியில் சூறாவளி காற்று டன் கனமழை பெய்தது. இதில், அப்பகுதி யில் சாகுபடி செய்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த, இரண்டாயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    கொடுமுடி-86.80, நம்பியூர்-48, ஈரோடு-37, பவானி-32.80, பெருந்துறை-28, வரட்டுபள்ளம்-11.40, கோபி-9.20, கவுந்தப்பாடி-4.20, தாளவாடி-3.10, குண்டேரி பள்ளம்-3.40, மொடக்கு றிச்சி-3, அம்மா பேட்டை-2.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
    • அணையில் இருந்து 3,100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

    ஆனால் கீழ்பவானி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்புப் பணிகள் முடிவடையாததால் சிறிது நேரத்தில் தண்ணீர் மீண்டும் நிறுத்தப்பட்டது.

    பின்னர் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து கடந்த மாதம் 19-ந் தேதி முதல் மீண்டும் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் 200 கனஅடி திறக்கப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக நீர்திறப்பு அதிகரித்தது.

    இந்த நிலையில் இன்று காலை பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2,300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    105 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 78.89 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,433 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

    தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 400 கனஅடி, காளிங்கராயன் பாசனத்திற்கு 300 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 3,100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணையின் நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதேபோல் மாவட்டத்தின் மற்ற அணைகளின் நீர்மட்டமும் சரிந்து வருகிறது.

    குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.95 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 15.75 அடியாக உள்ளது. வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21.49 அடியாக உள்ளது.

    • ஜல்ஜீவன் மிஷன் பயிற்சி முகாம் நடந்தது.
    • மாநில ஊரக விரிவாக்க பயிற்றுநர் சந்திரமோகன் பயிற்சி அளித்தார்.

    கொடுமுடி:

    கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் கிராம ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சி செயலர்,

    கிராம குடிநீர் மற்றும் சுகாதாரக்குழு, பாணி சமிதி குழுவினருக் கான ஜல்ஜீவன் மிஷன் 2023-2024-க்கான பயிற்சி முகாம் நடந்தது.

    இதனை மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி திட்ட அலுவலர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். கொடு முடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மநாபன், கல்பனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் பவானிசாகர் அரசு பயிற்சி நிறுவனத்தின் மாநில ஊரக விரிவாக்க பயிற்றுநர் சந்திரமோகன் பயிற்சி அளித்தார்.

    • புஞ்சை புளியம்பட்டியில் வாரச்சந்தை புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் கூடுகிறது.
    • ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானதாக என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் வாரச்சந்தை புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் கூடுகிறது. இது தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தையாகும்.

    இந்த சந்தையில் கர்நாடகா மற்றும் கேரளா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளி மாவட்டங்களான திருப்பூர், நாமக்கல், கரூர், தாராபுரம் மற்றும் புளியம்பட்டி சுற்று பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை விற்பதும் வாங்கி செல்வதும் வழக்கம்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களில் கூடிய மாட்டு சந்தையில் ஜெர்சி மாடுகள் ரூ.52 ஆயிரத்துக்கும், சிந்து இன மாடுகள் ரூ.42 ஆயிரத்துக்கும், எருமைகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்றது.

    இதில் நாட்டு மாடுகள் ரூ.57 ஆயிரத்துக்கும் மற்றும் வளர்ப்பு கன்றுகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது.

    அதேபோல் வெள்ளாடுகள் ரூ.15 ஆயிரம் முதல் மற்றும் செம்மறியாடுகள் ரூ.12ஆயிரம் வரையும் விற்றது.

    இதில் மொத்தம் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானதாக என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • மேம்பாலங்கள் அமைக்க ஆன்லைன்னில் ஒப்பந்தப் புள்ளி கோரி ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • இதை பொதுமக்கள் வரவேற்று நன்றி தெரிவித்துள்ளனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை புறவழிச் சாலையில் மேம்பாலங்கள் அமைக்க ஆன் லைன்னில் ஒப்பந்தப் புள்ளி கோரி ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில், பெருந்துறை பகுதியில் உள்ள காஞ்சிக்கோவில், பெத்தாம்பாளையம், துடுப்பதி, வாய்ப்பாடி சாலை சந்திப்புகளில் ஏதா வது ஒரு இடத்தில் சாலையை கடக்கும் நபர்கள் மற்றும் வாகனங்கள் விபத்து களை சந்தித்து வருகின்றன.

    இதில் சிலர் உயிரிழந்துள்ளர். பலர் காயமடைந்துள்ளனர். ஆகவே அப்பகுதிகளில் மேம்பாலம் அமைக்க மக்கள் பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர்.

    இந்த நிலை யில் தேசிய நெடுஞ்சா லை சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சா லையில் சுமார் ரூ.92.60 கோடி மதிப்பீட்டில் சித்தோடு மற்றும் பெருந்துறை புறவழிச்சாலையில் காஞ்சிக்கோயில் மற்றும் துடுப்பதி சாலை சந்திப்புகளில் மேம்பாலங்கள் மற்றும் பெத்தாம்பாளையம், விஜயமங்கலம் –வாய்பாடி சந்திப்பு சாலைகளில் சர்வீஸ் ரோடுகள் அமைக்க ஒப்பந்த புள்ளி கோரி ஆன்லைன்னில் ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இதை பொதுமக்கள் வரவேற்று திருப்பூர் சுப்பரா யன் எம்.பி. மற்றும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

    • சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அடுத்த சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் பா.ஜ.க. மற்றும் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    இதில் பா.ஜ.க. மாவட்ட பொது செயலாளர் சரவண குமார் தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் சக்திவேல், வர்த்தக அணி பிரிவு மாவட்ட துணை தலைவர் சண்முகம், சத்தியமங்கலம் நகரத்தலைவர் செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் ஜெய் பாரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பவானிசாகர் கோடே பாளையம், அண்ணா நகர் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டு மனை கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    பவானிசாகர் கோடே பாளையம், அண்ணாநகர், பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இலவச வீட்டு மனை கேட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பவானிசாகர் கோடேபாளை யம் பகுதியில் போராட்டம் நடத்தினோம். அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வீட்டு மனை கேட்டு வழங்க ப்பட்ட மனுவை பரிசீலனை செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

    ஆனால் மக்கள் கொடுத்த மனு மீது எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. மேலும் சில மாதங்களாகவே வீட்டு மனை பட்டா வழங்க காலதாமதமாகி வருவதால் 2 நாட்களுக்கு முன்பு கோபி கோட்டாட்சியரிடம் சென்று மனு கொடுத்தோம்.

    இதை தொடர்ந்து தற்போது போராட்டம் நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது பற்றி தகவல் அறிந்த தும் அதிகாரிகள், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கபடும் என அதிகாரிகள் உறுதி அளித்தனார்.

    இந்த பேச்சு வார்த்தை உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் ஆண்கள், பெண் கள் என சுமார் 40-க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்ட பத்தில் தங்கவைத்தனர் பின்பு இரவு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    • இந்து முன்னணியின் செயற்குழு கூட்டம் கவுந்தப்பாடியில் நடந்தது.
    • இதில் நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணியின் செயற்குழு கூட்டம் கவுந்தப்பாடியில் நடந்தது.

    மாவட்ட தலைவர் குருசாமி தலைமை யில், மாவட்ட செயலாளர் பாலமுருகன் முன்னிலையில், பவானி ஒன்றிய செயலாளர் இந்து செல்வம் வரவேற்றார்.

    மாநில செயலாளர் வி.எஸ்.செந்தில்குமார் கலந்து கொண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதை பற்றி பேசினார்.

    அதில் வருகிற 18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது எனவும்,

    மாவட்ட அளவில் 22 ஒன்றிய ங்களில் 1008 விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு அந்தந்த பகுதிகளில் விழா சிறப்பாக நடத்தி ஊர்வலமாக எடுத்து சென்று விசற்சனம் செய்யப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில் மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளை கமிட்டி நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • யானை ஒன்று வேலியை தாண்டி விவசாய தோட்டத்திற்குள் புகுந்து தென்னை மரம் ஒன்றை வேரோடு பிடுங்கி போட்டது.
    • வனத்துறையினர் வந்து சத்தமிட்டு யானையை காட்டுக்குள் விரட்டினர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பங்களாப்புதூர் அருகே எருமைக்குட்டை அண்ணா நகர் பகுதியில் வனத்தையொட்டி ஆறுமுகம் என்பவர் 1½ ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். விவசாய தோட்டத்தை சுற்றி கம்பி வேலி அமைத்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று காலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று வேலியை தாண்டி விவசாய தோட்டத்திற்குள் புகுந்து தென்னை மரம் ஒன்றை வேரோடு பிடுங்கி போட்டது.

    அதனைத்தொடர்ந்து கரும்பு தோட்டத்திற்குள் புகுந்த யானை கரும்புகளை உடைத்துதின்றது. இதனையடுத்து இது குறித்து டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வந்து சத்தமிட்டு யானையை காட்டுக்குள் விரட்டினர்.

    சுமார் கால் ஏக்கர் கரும்புகளை சேதப்படுத்தியதாகவும், தனது விவசாய தோட்டத்திற்கு இந்த காட்டுயானை தினமும் வருவதாகவும் விவசாய நிலத்தின் உரிமையாளர் ஆறுமுகம் தெரிவித்தார்.

    மேலும் விவசாய நிலத்திற்கு காட்டுயானை வராமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆறுமுகம் உள்ளிட்ட அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×