என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கூட்டத்தில் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
    • சிலை 9 அடிக்கும் மேல் உயரம் இருக்கக் கூடாது.

    பெருந்துறை:

    பெருந்துறையில் விநாயகர் சதுர்த்தியை விழாவின் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறி முறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் பெருந்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு பெருந்து றை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் தலைமை வகித்தார். கூட்டத்தில் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    சிலை 9 அடிக்கும் மேல் உயரம் இருக்கக் கூடாது. சென்ற ஆண்டு சிலை வைத்தவர்களுக்கு மட்டுமே இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படும். சென்ற ஆண்டு ஊர்வலம் நடத்தி யவர்களுக்கு மட்டும் இந்த ஆண்டு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்படும்.

    சிலை வைக்கப்படும் நபர்கள் சிலையை பாதுகாப்பாகவும், அரசு வழிகாட்டு நெறிமுறை பின்பற்றி வைக்க வேண்டும் என்பது உட்பட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    இதில் பெருந்துறை, சென்னிமலை மற்றும் காஞ்சிக்கோவில் ஆகிய போலீஸ் நிலையம் பகுதிகளில் விழா ஏற்பாடு செய்பவர்கள் மற்றும் இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர்.

    • பிரசாந்த் வீட்டின் அறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சாஸ்திரி நகர் வாய்க்கால்மேடு சடையப்பம்பாளையம் சாலையை சேர்ந்தவர் பிரசாந்த் (29). கட்டிட தொழிலாளி. பிரசாந்த்திற்கு திருமணத்திற்காக அவரது பெற்றோர் வரன் பார்த்து வந்தனர்.

    இருப்பினும் வரன் சரியாக அமையவில்லை. இதனால் பிரசாந்த் கடந்த சில தினங் களாக மனவேதனையுடன் இருந்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரசாந்த் வீட்டின் அறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் பிரசாந்த்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு பிரசாந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது 10 அடி உயரத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
    • இதில் சரவணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெரியசேமூர் ஜீவா நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 46). இவர் கட்டிட வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ஒரு வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது 10 அடி உயரத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் சரவணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

    இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இது குறித்து அவரது மனைவி லீலாவதி ஈரோடு வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை பற்றி வருகின்றனர்.

    • பாரம்பரிய வேளாண் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • பயிற்சியில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ஈரோடு:

    அம்மாபேட்டை வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் இழுப்பிலி கிராமத்தில் பாரம்பரிய வேளாண் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இப்பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் ராஜமோகன் தலைமையேற்று விவசாயி களை வரவேற்று மானிய திட்டங்கள் குறித்து பேசினார்.

    பயிற்சியில் வேளாண்மை அலுவலர் ஜெயக்குமார் பாரம்பரிய ரகங்கள் பற்றியும், அங்கக வேளா ண்மையின் முக்கியத்து வம் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்து ரைத்தார்.

    மேலும் அங்கக வேளா ண்மை சாகுபடியில் உயிர் உரங்கள் பயன்பாடு விரிடி, சூடோமோனஸ் போன்ற உயிர்காரணிகள் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது.

    விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை சான்று பெறுவதன் முக்கியத்துவம், அதை இணைய வழியில் பதிவு செய்தல் மற்றும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

    பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவ லர்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாட்டி னை ராஜேந்திரன் மற்றும் கயல்விழி ஆகியோர் செய்திருந்தனர்.

    • இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.
    • மின் மயானத்தில் 21 குண்டுகள் முழங்க போலீசார் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    கோவை மாவட்டம் சிறுமுகை பழத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் கண்ணா (வயது 50). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர்.

    ரமேஷ் கண்ணா திருவாரூர் மாவட்டம் பரவக்கோட்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தார்.

    இந்நிலையில் இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியி ல்லாமல் சிறுமுகை பழத்தோட்டத்தில் உள்ள தனது சொந்த வீடு மற்றும் பகுத்தம்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்து வந்தார்.

    அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் ரமேஷ் கண்ணா நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.

    இதனையடுத்து மறைந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா உடலுக்கு இறுதி மரியாதை காவல் துறையின் சார்பில் சத்திய மங்கலம் மின் மயானத்தில் 21 குண்டுகள் முழங்க போலீசார் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதில் போலீஸ் துணை சூப்பிரண்டு ஐமன் ஜமால் உள்பட போலீசார் இறுதி மரியாதை செலுத்தினர்.

    • கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த செல்வன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • விற்பனைக்காக வைத்திருந்த 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் சப்-இன்ஸ்பெ க்டர் ஈஸ்வரன் மற்றும் போலீசார் அந்தியூர்-பவானி ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுப ட்டனர்.

    அப்ேபாது அங்கு போதை பொருளான கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த அந்தியூர் காமராஜர் சாலை பகுதியை சேர்ந்த பூவண்ணன் மகன் செல்வன் (வயது 63) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் விற்பனை க்காக வைத்திருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல் விஜயமங்கலம் பஸ் ஸ்டாப் அருகே அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்த ராமநாதபுரம் மாவ ட்டம் அரக்கோட்டை பகுதியை சேர்ந்த சுந்தரம் மகன் செல்லத்துரை என்பவரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பழைய கட்டுமானத்தில் ஏற்பட்ட கசிவு நீரால் தண்ணீர் அதிக அளவில் வெளியேறியது.
    • தடுக்கும் பணி 2-வது நாளாக தீவிரமாக நடந்து வருகிறது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்து காளி குளம் 11-வது மைல்கல் அருகே கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது. இதன் இடது கரையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதன் வழியாக கசிவு நீர் வெளி யேறி கொண்டு இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக கீழ்பவானியில் வாய்க்காலில் கரைகளின் 2 பக்கமும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடை பெற்று வந்தது.

    இந்த நிலையில் கடந்த 20-ந் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை 3 இடங்களில் கசிவு நீர் வெளியேறி வருகிறது. இதை யடுத்து மணல் மூட்டைகள் கொண்டும், ஜே.சி.பி. எந்திரம் மூலம் மணல் கொட்டி கரை பலப்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று காளி குளம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் 11 மைல் இடத்தில் பழைய கட்டுமானத்தில் ஏற்பட்ட கசிவு நீரால் தண்ணீர் அதிக அளவில் வெளியேறியது.

    அதை தொடர்ந்து நீர்வளத் துறை அதிகாரிகள் உடனடி யாக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீரின் அளவை குறைத்தனர்.

    அதைத்தொ டர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் நீர்வள துறை அதிகா ரிகள் உடனடியாக மணல் மூட்டைகள் கொண்டும் ஜே.சி.பி. எந்திரங்களை வரவழைத்து கசிவு நீர் வெளி யேறாமல் தடுத்து வரும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதை தொடர்ந்து வாய்க்கா லில் கசிவு நீர் வெளியேறும் பகுதியில் இன்று மண் மூட்டைகள் அடுக்கி வைத்து கசிவு நீர் வெளியேறுவதை தடுக்கும் பணி 2-வது நாளாக தீவிரமாக நடந்து வருகிறது.

    • தமிழகத்தில் தவறு செய்து கொண்டிருப்பவர்களை கவர்னர் கேட்கிறார்.
    • நாட்டின் ஒரு திட்டத்தை கொண்டு வரும் போது ஆரோக்கியமாக விவாதிக்க வேண்டும்.

    ஈரோடு:

    ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று ஈரோடு வந்தார். முன்னதாக சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ஜார்கண்ட் மாநில மக்கள் அணுகுமுறை அருமையாக உள்ளது. 3 மாதங்களில் 24 மாவட்டங்களில் மக்களை சந்தித்து உள்ளேன். 8 ஆயிரம் தரை வழி போக்குவரத்து பயணம் செய்துள்ளேன். பொருளாதார வளர்ச்சிக்கு விரைவில் முன்னேற்றம் அடையும்.

    ஒரே நாடு, ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம். ஜனநாயகம் தலைத்து ஒங்கவும், முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கின்ற நாடு முன்னேற்றம் அடைய அடிக்கடி தேர்தல் வராமல் ஒரு முறை தேர்தல் வர வேண்டும்.

    தமிழகத்தில் தவறு செய்து கொண்டிருப்பவர்களை கவர்னர் கேட்கிறார். இந்த கவர்னரை போன்று இதுவரை தமிழகத்திற்கு கவர்னர் கிடைக்கவில்லை. நீட் தேர்வு மாற்றி அமைக்க வேண்டும் என தி.மு.க. விரும்பினால் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டுமே தவிர கவர்னர் மீது குறை சொல்லக்கூடாது.

    தமிழக அரசு எந்த மசோதாவை அனுப்பினாலும் கவர்னர் நிறைவேற்ற வேண்டும் என்பதில்லை. அரசியல் சாசனத்திற்கு உட்பட தான் இருந்தால் மட்டுமே கவர்னர் ஒப்புதல் தருவார்.

    இந்திய தண்டனை சட்டத்தின் பெயருக்கு எவ்வளவு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்களோ அந்த அளவிற்கு ஆதரவும் உள்ளது. மேலும் நாட்டின் ஒரு திட்டத்தை கொண்டு வரும் போது ஆரோக்கியமாக விவாதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் 2 நாட்களாக அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து வருகிறது.
    • தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் 2 நாட்களாக அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.81 அடியாக உள்ளது. அனைத்து வினாடிக்கு 1,927 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் சத்தியமங்கலம் அருகே நீர் கசிவு காரணமாக கீழ்பவானி வாய்க்காலுக்கு பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீர்கசிவு ஏற்பட்ட இடத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முகாமிட்டு சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் மாலை தண்ணீர் திறக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதேநேரம் காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • குணசேகரனின் இடது பக்க இடுப்பு பகுதிக்கு மேல் மின் கம்பி எதிர்பாராதவிதமாக உரசியதில் மின்சாரம் தாக்கி 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.
    • குணசேகரனை தனியார் ஆம்புலன்சு மூலம் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வேலம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (44). இவர் அவல்பூந்துறை உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் ஓயர்மேனாக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் அவல் பூந்துறை-ஈரோடு சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பீஸ் நிற்காததால் வந்த புகாரை தொடர்ந்து குணசேகரன் அங்கு பழுதினை சரி செய்ய அவருடன் பணியாற்றும் கம்பியாளரான பழனிசாமி என்பவருடன் சென்றார். குணசேகரன் சோளிபாளையம் பெட்ரோல் பங்க் அருகே 30 அடி உயரமுள்ள இரும்பு மின் கம்பத்தில் ஏறிய பழுதினை சரி செய்து கொண்டார்.

    அப்போது குணசேகரனின் இடது பக்க இடுப்பு பகுதிக்கு மேல் மின் கம்பி எதிர்பாராதவிதமாக உரசியதில் மின்சாரம் தாக்கி குணசேகரன் 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதைப்பார்த்த பழனிசாமி உதவி செயற்பொறியாளர் சென்னிகிருஷ்ணனுக்கு தகவல் அளித்தார்.

    இதையடுத்து குணசேகரனை தனியார் ஆம்புலன்சு மூலம் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு குணசேகரன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு மாவட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது.
    • மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய், மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. அக்னி நட்சத்திரம் வெயில் போன்று வெயில் பதிவாகி வந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர். இதைடுயத்து ஈரோடு மாவட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வந்தது. இதனால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    இந்நிலையில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய், மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    பெரிய அக்ரஹாரத்தில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தாய் சாரம்மா (34), மகன் முகமது அக்தர் (12) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர்.

    உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரவு நேரம் என்பதால் ஆட்கள் இல்லாத காரணத்தால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
    • தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்துள்ள ஊத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேல். இவர் அதே பகுதியில் கார் பழுது நீக்கும் மையத்தை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார். இந்த மையத்தில் 40-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    இவரது கார் பழுது நீக்கும் மையத்தின் பின்பகுதியில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான திருமண மண்டபம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. திருமண மண்டபத்தின் பின்பகுதியில் 40 அடி உயரத்தில் மதில் சுவர் கட்டப்பட்டு திருமண மண்டபம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு சித்தோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த கனமழை காரணமாக 40 அடி மதில் சுவர் இடிந்து விழுந்தது. இதில் குழந்தைவேல் கார் பழுது நீக்கும் மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 கார்கள் மீது மதில் சுவர் விழுந்ததில் கார்கள் முற்றிலுமாக நசுங்கி சேதமடைந்தது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரம் என்பதால் ஆட்கள் இல்லாத காரணத்தால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான கார்கள் சேதம் அடைந்துள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

    ×