கடன் தொல்லையால் பெண் தூக்குபோட்டு தற்கொலை

மனம் உடைந்து காணப்பட்ட பார்வதி சேலையால் தூக்குபோட்டு கொண்டார்.கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடன் தொல்லையால் பெண் தூக்குபோட்டு தற்கொலை
Published on

கோபி:

கோபிசெட்டிபாளையம் நஞ்சப்பா வீதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி பார்வதி (வயது 56). பார்வதி மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இதனால் அவருக்கு அதிக கடன் ஏற்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து பணம் கட்ட முடியாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடன் கட்டுவதற்காக பணம் கிடைக்க வில்லை என கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட அவர் திடீரென நேற்று இரவு சேலையால் தூக்கு போட்டு கொண்டார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோ தனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com