என் மலர்
நீங்கள் தேடியது "WOMAN KILLED IN"
- மொபட்டும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதி கொண்டது.
- இதில் கண்ணம்மாள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 65).
கணவன்-மனைவி இருவரும் மொபட்டில் சென்று கொண்டு இருந்தனர். கண்ணம்மாள் மொபட்டின் பின் பகுதியில் அமர்ந்து இருந்தார்.
அப்போது எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்து கொண்டு இருந்தது. அப்போது மொபட்டும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதி கொண்டது.
இதில் கண்ணம்மாள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளை யம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் (30) என்பவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






