வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

பிரசாந்த் வீட்டின் அறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு சாஸ்திரி நகர் வாய்க்கால்மேடு சடையப்பம்பாளையம் சாலையை சேர்ந்தவர் பிரசாந்த் (29). கட்டிட தொழிலாளி. பிரசாந்த்திற்கு திருமணத்திற்காக அவரது பெற்றோர் வரன் பார்த்து வந்தனர்.

இருப்பினும் வரன் சரியாக அமையவில்லை. இதனால் பிரசாந்த் கடந்த சில தினங் களாக மனவேதனையுடன் இருந்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரசாந்த் வீட்டின் அறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் பிரசாந்த்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு பிரசாந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com