என் மலர்
உள்ளூர் செய்திகள்

பனை மரங்கள் அனுமதியின்றி வெட்டப்பட்டதால் பரபரப்பு
- அழிந்து வரும் மரங்களின் பட்டியலில் பனைமரம் இருந்து வருகிறது.
- தாலுகா அலுவலகத்துக்கு வரவேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கெட்டி சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளப் பிள்ளையார் கோவில் அருகே 10-க்கு மேற்பட்ட பனை மரங்கள் விவசாய நிலத்தின் ஓரமாக உள்ளது.
அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் அவரது நிலத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி அந்த மரங்களை பணியாளர்கள் மூலம் வெட்டிக் கொண்டு இருந்த னர். இது குறித்து அந்தியூர் நில வருவாய் ஆய்வாளர் சுதாகருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு நில வருவாய் ஆய்வாளர் சுதாகர் வந்து விசாரணை நடத்தினார். இதை தொடர்ந்து அவர் அழிந்து வரும் மரங்களின் பட்டியலில் பனைமரம் இருந்து வருகிறது.
அவற்றை வெட்டக்கூடாது என்றும், மேலும் பச்சை மரங்களை வெட்டுவது என்றால் அதற்கு முறைப்படி அனுமதி பெற்று மரங்களை வெட்ட வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.
இதையடுத்து அவர் சென்றவுடன் மீண்டும் அவர்கள் பனை மரங்களை வெட்ட தொடங்கினர். மேலும் இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் சென்று பார்த்தார்.
அப்போது அங்கிருந்து மரம் வெட்டி கொண்டு இருந்தவர்கள் சென்று விட்டனர். இதில் 2 மரங்கள் மட்டும் வெட்டப்பட்டது. மற்ற மரங்கள் வெட்டப்படா மல் அப்படியே இருந்தது.
இதில் சம்பந்தப்பட்ட வர்கள் விசாரணைக்காக தாலுகா அலுவலகத்துக்கு வரவேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அந்த பகுதியில் மீண்டும் மரங்கள் வெட்ட ப்படுகிறதா என அதிகாரி கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.






