என் மலர்
ஈரோடு
- லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த விஜயகுமார் என்பது தெரியவந்தது.
- போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக கருங்க ல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் தாஜ் நகரைச் சேர்ந்த சரவணன் மகன் விஜயகுமார் (வயது 34) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகள், செல்போன் மற்றும் ரூ. 220 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- ஈச்சர் வேன் மொபட்டின் பின்புறம் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
- தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே மணி உயிரிழந்தார்.
ஆப்பக்கூடல்:
அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர், ஆயமரத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மணி (55). இவர் பெருந்துறை குடிநீர் வடிகால வாரியத்தில் மின் பணியாள ராக வேலை செய்து வந்து ள்ளார். மணிக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்,
இந்நிலையில் மணி சம்பவத்தன்று மதியத்திற்கு மேல் தனது மொபட்டில் சக்தியமங்கலத்தில் இருந்து வெள்ளித்திருப்பூர் வருவதற்காக அத்தாணி வழியாக வந்து கொண்டி ருந்தார்.
அத்தாணி செம்புளிச்சா ம்பளையம் பிரிவு அருகே வரும்போது அவருக்கு பின்னால் வாழைக்காய் லோடு ஏற்றி வந்த ஈச்சர் வேன் மணி ஓட்டி வந்த மொபட்டின் பின்புறம் மோதியதில் நிலை தடுமாறி மணி கீழே விழுந்தார்.
அப்போது பின்னால் வந்த ஈச்சர் வேன் மணியின் உடல் மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே மணி உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆப்பக்கூடல் போலீசார் மணி உடலை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர்.
அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்திய வாழைக்காய் ஏற்றி வந்த ஈச்சர் வேன் டிரைவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து போலீசார் விசாரணையில் ஈச்சர் வேனை ஒட்டி வந்தவர் கோபி கணேசன் புதூர் அம்மாபாளை யம் பகுதியை சேர்ந்த செல்ல முத்து என்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து வேன் டிரைவர் செல்லமுத்து மீது வழக்கு பதிவு செய்த ஆப்பக்கூடல் போலீசார் விசார ணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் தலைமையில் தீ மற்றும் தொழில் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
- ஈரோடு நகரப்பகுதிகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஈரோடு:
கிருஷ்ணகிரி, விருநகர் மாவட்டங்களில் சமீபத்தில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தை தொடர்ந்து, வெடிபொருள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் பட்டாசு இருப்பு வைத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் இதர வெடி மருந்து நிறுவனங்கள் ஆகியவற்றில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை செயல்படுத்திடவும், வெடி மருந்து உரிமம் பெற்ற இடங்களில் முறையான பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்திடவும், மாநில, மாவட்ட அளவிலான தீ மற்றும் தொழில் பாதுகாப்பு குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இக்குழுக்களானது தீ தடுப்பு மற்றும் தொழில் பாதுகாப்பினை உறுதி செய்யும் நடவடிக்கைகளை கண்காணிக்கும். மேற்படி அரசாணையின்படி ஈரோடு மாவட்டதில் மாவட்ட கலெக்டர் தலைமையில் தீ மற்றும் தொழில் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
வெடி மருந்து உரிமம் பெற்ற நிறுவனங்கள் மற்றும் உரிமதாரர்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்று வதை உறுதி செய்திடவும், வெடி மருந்து உரிமம் பெற்ற இடங்களில் முறை யான பாதுகாப்பு அம்ச ங்களை உறுதிசெய்தி டவும், வருவாய் துறை, காவல்து றை, தீயணைப்பு துறை மற்றும் தொழிற்பாது காப்புதுறை அலுவலர்களை உள்ள டக்கிய தணிக்கை குழு வருவாய் கோட்டா ட்சியரின் மேற்பா ர்வை யின்கீழ் தாசில்தார் தலை மையில் 10 வட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இத்தணிக்கை குழுவா னது அந்தந்த வட்டங்களில் உள்ள வாணம் மத்தாப்பு தயாரிப்பு நிறுவனங்கள், நிரந்தரமாக, தற்காலிக பட்டாசு இருப்பு வைத்து விற்பனை செய்யும் கடைகள் ஆகியவற்றை தணிக்கை செய்யும்.
நேற்று கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டஅலுவலர் தலைமையிலான குழுவினர் கோபிசெட்டிபாளையம் கோட்டத்திற்குட்பட்ட சத்தியமங்கலம் நகரப்பகுதி, உக்கரம், மற்றும் கோபி செட்டிபாளையம் நகர ப்பகுதிகளிலும், ஈரோடு வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலான குழுவினர் ஈரோடு கோட்டத்திற்குட்பட்ட வீரப்பன்சத்திரம், பளையபாளையம், ஈரோடு நகரப்பகுதிகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அரசு விதியின்படி செயல்படாத கடைகளின் உரிமையாளர்கள், உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் உரிமத்தில் குறிப்பிடப்ப ட்டுள்ள அளவினைவிட அதிகமாக பட்டாசு இருப்பு வைத்து ள்ளவர்கள் மீதுவெடி பொருள் சட்டம், 1884 மற்று ம் வெடிபொருள் விதிகள், 2008-ன்படி கடும் நடவ டிக்கை மேற்கொள்ளப்படும்.
- ராஜேந்திரனின் வலது கால் முட்டியில் பின்புறம் கட்டுவிரியன் பாம்பு கடித்துவிட்டது.
- சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு:
தர்மபுரி மாவட்டம் மோனாசி அடுத்த அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (51). இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கணவன்-மனைவி இரு வரும் விவசாய கூலி வேலை பார்த்து வந்தனர். ராஜேந்தி ரன் மற்றும் சாந்தி வெளியூர்க ளுக்கு சென்று தங்கி நெல் நாத்து நடவு வேலையும் செய்து வந்தனர். இதற்காக அவர்கள் பல்வேறு ஊர்களுக்கு சென்று தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர்.
இதேபோல் ராஜேந்திரன், சாந்தி மற்றும் அதே ஊரை சேர்ந்த 20 பேர் ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த கங்காபுரம் அருகே உள்ள கொளத்துபாளையத்தை சேர்ந்த சண்முகம் என்ப வருக்கு சொந்தமான விவசாய பூமியில் நெல் நாற்று நடவு வேலை செய்து அங்கேயே தங்கி இருந்தனர்.
சம்பவத்தன்று இரவு கொளத்துபாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பவரு க்கு சொந்தமான குடோன் முன்புற கார வாசலில் ராஜேந்திரன், சாந்தி உள்பட அனைவரும் படுத்து தூங்கி கொண்டி ருந்தனர்.
நள்ளி ரவு 1 மணி அளவில் கார வாசலில் படுத்து தூங்கி கொண்டி ருந்த ராஜேந்திரனின் வலது கால் முட்டியில் பின்புறம் கட்டுவிரியன் பாம்பு கடித்துவிட்டது.
இதனால் வலியால் துடித்த அவரை கார் மூலம் சிகிச்சை க்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கு உள்நோ யாளியாக சிகிச்சையாக சிகி ச்சை பெற்று வந்த ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஈரோடு மாவட்ட த்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது.
- வ.உ.சி. பூங்காவிலும் இன்று மக்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே கொ டிவேரி தடுப்ப ணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணையில் கொட்டி ஆர்ப்பரித்து செல்கிறது.
இந்த கொட்டும் தண்ணீ ரில் குளிப்பதற்கும், ரசிப்ப தற்கும் தினமும் ஏராளமான சற்றுலா பயணிகள் தடுப்ப ணைக்கு வந்து செல்கி றார்கள். மேலும் விழா மற்றும் விடுமுறை நாட்க ளில் ஆயிர க்கணக்கான பொதுமக்கள் குடும்பத்து டன் வந்து தடுப்பணையில் குளித்து மகிழ்ந்து செல்கி றார்கள்.
இந்த நிலையில் சனிக்கிழ மை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆயுத பூஜை, விஜய தசமி என தொடர்ந்து விடு முறை நாட்கள் வருகிறது. இதனால் ஈரோடு மாவட்ட த்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்களின் கூட்டம் நேற்றும் இன்றும் அதிகளவில் இருந்தது.
தொடர் விடுமுறை என்பதால் கொடிவேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. நேற்று (சனிக்கிழ மை) மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வெளி மாவட்டங்களில் இருந்தும் பொது மக்கள் பலர் வந்து அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.
இதே போல் இன்று ஞாயி ற்றுக்கிழமை கொடி வேரிக்கு வழக்கத்ைத விட பொதுமக்கள் அதிகள வில் வந்தனர். மேலும் இன்று வெளி மாவட்டங்களில் இருந்து கார், வேன் மற்றும் சுற்றுலா வாகன ங்களில் இருந்து கொடிவேரிக்கு ஏராள மானோர் வந்திருந்தனர். காலை முதலே கூட்டம் வந்த வண்ணம் இருந்தது. ஆனால் நேரம் செல்ல, செல்ல மக்களின் கூட்டம் அலை மோதியது.
ஈரோடு, கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரு ந்தும், சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, கரூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏரா ளமான பொதுமக்கள் கொடி வேரிக்கு தங்கள் குடும்ப த்துடன் வந்திருந்த னர்.
இதை தொடர்ந்து சிறுவர், சிறுமிகள், ஆண்கள், பெண்கள் என பலர் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் இளைஞர்கள் பலர் வந்து குளித்து குதுகளித்த னர். இதையடுத்து பொது மக்கள் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகள், வெளிப்பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன்களையும் ருசித்து விட்டு சென்றனர்.
இதே போல் சத்தியமங்க லம் அருகே உள்ள பவானி சாகருக்கு இன்று பொது மக்கள் பலர் வந்திருந்தனர். இைத தொடர்ந்து குடும்ப த்துடன் வந்திருந்த மக்கள் அணை பூங்காவில் விளை யாடி மகிழ்ந்தனர்.
மேலும் சிறுவர் மற்றும் சிறுமிகள் பூங்காவில் ஊஞ்சல் விளையாடி குது களித்தனர். பெண்கள் பலர் சறுக்கு விளையாடி இயற்கையை ரசித்து சென்ற னர். இதே போல் அணையில் கொட்டும் தண்ணீரின் அழகை ரசித்தனர்.
இதனால் பவானிசாகர் பகுதியில் இன்று எங்கு பார்த்தாலும் பொது மக்க ளின் கூட்டமாகவே காண ப்பட்டது. மேலும் இன்று அணை பூங்காவின் வெளி பகுதியில் மீன் மற்றும் பல்வே று கடைகள் அமைக்க ப்பட்டு இருந்தன. அங்கும் மக்களின் கூட்டம் அலை மோதியது.
மேலும் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரி யூர் கொண்டத்து காளியம்மன் கோவில், பண்ணாரியம்மன் கோவில் என கோபி, சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதி களில் உள்ள சுற்றுலா தலங்களில் எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாக காணப்பட்டது.
ஈரோடு வ.உ.சி. பூங்காவிலும் இன்று மக்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது. குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் அங்கு ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாடி குதுகளித்தனர். மேலும் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகளையும் உண்டு மகிழ்ந்தனர்.
- செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றவிட்டனர்.
- 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு:
திருச்சி மாவட்டம் தொட்டி யம் சின்னபள்ளி பாளை யத்தை சேர்ந்தவர் கவின் (22). இவர் சம்பவத்தன்று சென்னையில் இருந்து திருப்பூர் செல்லும் சேரன் அதிவிரைவு ரெயிலில் பொது பெட்டியில் பயணித்துள்ளார்.
ஈரோடு ரெயில் நிலைய த்திற்கு வந்தபோது அவரது செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றவிட்டனர். இது குறித்து கவின் ஈரோடு ரெயில் நிலையத்தில் புகார் அளித்தி ருந்தார்.
அதன் பேரில் ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன் திருடிய மர்ம நபர்களை குறித்து சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் கைப்பற்றி அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் கவினின் செல்போன் திருடியது உத்தரப்பிரதேசம் மாநிலம் பதோகி மாவட்டம் கேட்டல்பர் பகுதியை சேர்ந்த ப்ரடும் பட்டேல் (25), பீகார் மாநிலத்தை சேர்ந்த சசுதீன் ஆலம் (21) ஆகிய 2 பேர் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதை யடுத்து ஈரோடு ரெயி ல்வே போலீசார் 2 பேரையும் பிடி த்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கவின் செல்போன் திருடியதை ஒப்புக்கொண்டனர்.
மேலும் அவர்கள் ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் திருடிய 8 ஸ்மார்ட் போன்க ளையும் மீட்டு 2 பேரையும் போலீசார் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
- தீக்காயங்களுடன் துடித்து கொண்டு இருந்த புஷ்பலதாவை மீட்டு கோபிசெட்டி பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- கோபி செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள பொம்மநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் புஷ்பலதா (வயது 56). இவர் கூலி தொழில் செய்து வந்தார்.
இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் வெளியூர்களில் தங்கி வேலை செய்து வருகிறார்கள். இதையடுத்த புஷ்பலதா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று புஷ்பலதா வீட்டின் கதவை உள் பக்கமாக மூடி கொண்டு கியாஸ் அடுப்பு பற்ற வைத்து சமையல் செய்து கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அடுப்பில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டு திடீரென கியாஸ் வெடி த்தது. இதையடுத்து கியாசில் தீ பற்றி எரிந்தது. இதில் புஷ்பலதா சேலையில் தீ பிடித்து அவரது முகம், கை, கால் மற்றும் உடலில் தீ காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அலறி துடித்தார்.
இதையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கதினர் அவரது வீட்டுக்கு வந்தனர். அப்போது கதவு உள்பக்கமாக மூடப்பட்டு இருந்ததால் அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை.
இதை தொடர்ந்து பொது மக்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து தீக்காயங்களுடன் துடித்து கொண்டு இருந்த புஷ்பலதாவை மீட்டு கோபிசெட்டி பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றி தகவல் கிடை த்ததும் கோபிசெட்டி பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் தீயணைப்பு வீரர்கள் கியாசை அப்புறப்படுத்தி தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த புஷ்பலதா மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி புஷ்பலதா இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோபி செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பெஸ்ட் கோர்ஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலும் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.
- ஈரோட்டில் இருந்து கிளம்பிய கூட்ஸ் ஒன்றும் நிறுத்தப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஆனங்கூர் ரெயில் நிலையம் அருகே உயர் மின்னழுத்த கம்பி இன்று காலை திடீரென அறுந்து விழுந்தது.
இதனால் இந்த வழியாக வந்த சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் பாதை வழியில் நிறுத்தப்பட்டது. இதேபோல் பெஸ்ட் கோர்ஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலும் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. மேலும் ஈரோட்டில் இருந்து கிளம்பிய கூட்ஸ் ஒன்றும் நிறுத்தப்பட்டது.
இதனால் இந்த ரெயில்களில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து ஈரோடு ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அறுந்து விழுந்த கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பணி சிறிது நேரத்தில் முடிவடைந்து வழக்கம் போல் ரெயில் சேவை தொடர்ந்து நடைபெறும் என ரெயில்வே நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- மலைத்தேனீக்கள் சரஸ்வதி கடித்தது.
- சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்த பட்டகாரன்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 65). இவர் சம்பவத்தன்று தண்ணீர் காய வைக்க தென்னை மட்டையை எடுத்தார்.
அப்போது அதில் இருந்த மலைத்தேனீக்கள் அவரை கடித்தது. அவருடை சத்தம் கேட்டு வந்த பேரன் குமரேசனையும் தேனீக்கள் கடித்தது.
இதனையடுத்து 2 பேரும் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரஸ்வதி உயிரிழந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- போலீசார் அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டிருந்த மாரப்பன் என்பவரை கைது செய்தனர்.
- 25 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொப்பம்பாளையம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதாக பவானிசாகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அங்கு அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டிருந்த சத்தியமங்கலம் அருகே பண்ணாரி ராஜன்நகரை சேர்ந்த அனுமந்தன் மகன் மாரப்பன் (வயது 40) என்பவரை கைது செய்தனர்.
பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 25 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாவட்ட அளவிலான போட்டிகள் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- இதற்காக மாவட்டத்தில் 3 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டு வரும் விதமாக கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. பள்ளிகள், வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் என போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளில் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடத்தி முடிக்க ப்பட்டுள்ளது. வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் வருகின்ற 26-ந் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக மாவட்டத்தில் 3 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்க ளுக்கு பருவாச்சி ஐடியல் மேல்நிலைப்பள்ளியிலும், 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சென்னிமலை ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரி யிலும், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோபி பி.கே.ஆர். கல்லூரியிலும் நடைபெறும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- சென்னி மலை- காங்கேயம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- இந்த மறியலால் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
சென்னிமலை:
சென்னிமலை-காங்கேயம் இடையே புறவழி ச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திரண்டு வந்து சென்னிமலை அருகே உள்ள பசுவபட்டி பிரிவு அருகே திருவள்ளுவர் நகர் பகுதியினை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து நாங்கள் மேற்கண்ட முகவரியில் 3 தலைமுறை யாக வசித்து வருகிறோம்.
சென்னிமலையில் இருந்து காங்கேயம் செல்லும் வழியில் புறவழிச்சாலை போடப்பட உள்ளது. இதற்காக பசுவப்பட்டி, திருவள்ளுவர் நகர் வழியாக நில அளவை பணிகள் நடைபெறுகிறது.
இந்த வழியாக புறவழி ச்சாலை அமைக்கப்பட்டால் திருவள்ளுவர் நகர், கே.சி.நகர், காமராஜர் நகர், தட்டங்காடு ஆகிய 4 கிராமத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். இந்த பகுதியில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகி ன்றனர். எங்களுக்கு தேவை யான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன.
இதனால் இப்பகுதியில் புறவழிச்சாலை அமைக்கா மால் மாற்று வழியில் அமைக்க கோரி சென்னி மலை- காங்கேயம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை தெடார்ந்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.






