லாட்டரி சீட்டு விற்றவர் மீது வழக்கு

லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த விஜயகுமார் என்பது தெரியவந்தது.போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாட்டரி சீட்டு விற்றவர் மீது வழக்கு
Published on

ஈரோடு:

ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக கருங்க ல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் தாஜ் நகரைச் சேர்ந்த சரவணன் மகன் விஜயகுமார் (வயது 34) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகள், செல்போன் மற்றும் ரூ. 220 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com