என் மலர்
ஈரோடு
- வர்ஷலா தலை சுற்று ஏற்பட்டு மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி கீழே மயங்கி விழுந்தார்.
- இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அடுத்த மெக்கானிக் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி வர்ஷலா (58).
உடல்நலம் சரியில்லாததால் வர்ஷலாவை அவரது இளைய மகன் மோட்டார்சை க்கிளில் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
தொட்டம்பாளையம் அருகே சென்றபோது திடீரென வர்ஷலா தலை சுற்று ஏற்பட்டு மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி கீழே மயங்கி விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் சத்திய மங்கலம் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்கா க கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டார். அங்கு சிகிச்சை ப லனின்றி வர்ஷலா பரிதா பமாக இறந்தார்.
இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழ க்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- போதை பொருள்களை விற்பனை செய்து கொண்டிருந்த புரன்சிங், தல்பாத்சிங் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
- போதை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என அந்தியூர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்தியூர்- ஈசப்பாரை ரோடு பகுதியில் தடை செய்யப்பட்ட போதை பொருள்களை விற்பனை செய்து கொண்டிருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த புரன்சிங் (வயது 22), தல்பாத்சிங் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.25 ஆயிரத்து 200 மதிப்புள்ள ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு அணிவித்து பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பு.புளியம்பட்டி:
புஞ்சை புளியம்பட்டி அடுத்து கோவில் புதூரில் ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் இருந்து வாகனங்களில் பெருமாள், கிருஷ்ணர், ராமர் உள்ளிட்ட தெய்வங்கள் எழுந்தருளி ஸ்ரீ பிளேக் மாரியம்மன் கோவிலை வந்தடைந்து அம்பு சேர்வை விழா நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் இந்தாண்டு அம்பு சேர்வை விழா நடக்கும் நாளான இன்று விழா ரத்து செய்யப்பட்டதால் மதுரையில் இருந்து ஆண்டாளுக்கு சாத்திய சூடிக்கொடுத்த கிளிகளுடன் அமைந்த மாலை வரவழைத்து கொலுவின் கடைசி நாளான நேற்று பிளேக் மாரியம்மன் கோவிலில் வைத்து பூஜைகள் செய்து பின்பு இன்று அதிகாலை ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலுக்கு எடுத்து சென்று பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு அணிவித்து பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 66.94 அடியாக சரிந்து உள்ளது.
- அணையில் இருந்து 2,450 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு, அக். 25-
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வர த்தை காட்டிலும் பாச னத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 66.94 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 753 கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.
கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2300 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,450 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் குண்டே ரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.44 அடியும், பெரும்ப ள்ளம் அணியின் நீர்மட்டம் 7.48 அடியும், வரட்டு ப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.80 அடியும் உள்ளது.
- அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- வள்ளி-தெய்வானையுடன் புறப்பட்டு கைலாசநாதர் கோவிலை அடைந்தார்.
சென்னிமலை:
நவராத்திரியை முன்னிட்டு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் கடந்த 9 நாட்களாக சாமிக்கு கொழு வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் தினமும் ஒரு சிறப்பு அலங்காரத்தில் சாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
நவராத்திரியின் 10-வது நாளான நேற்று மாலை விஜயதசமியை முன்னிட்டு அம்புசேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக மாலை 4.30 மணிக்கு அசுரனை வதம் செய்வ தற்காக சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து வில், அம்பு, வால் போன்ற ஆயுதங்களுடன் முத்துக்குமாரசாமி குதிரை வாகனத்தில் புறப்பட்டார்.
அப்போது வள்ளி-, தெய்வானை ஆகியோர் தனி சப்பரத்தில் உடன் வந்தனர்.
சாமிகள் ராஜ வீதிகள் வழியாக வலம் வந்து தினசரி மார்க்கெட் அருகில் உள்ள பிராட்டியம்மன் கோவில் வாசலை அடைந்தனர்.
அங்கு சென்னிமலை முருகன் கோவில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவச்சாரியார் தலைமையில் முருகப்பெருமான் மற்றும் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டது.
அதைத்தொடர்ந்து "வண்ணாசூரன்" என்ற அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது வாழை மரம் உருவத்தில் இருந்த வண்ணாசூரனை வில், அம்பு, வால் போன்ற ஆயுதங்களால் குத்தி வதம் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து அசுரனை அழித்த உற்சாக மிகுதியில் இருந்த முத்துக்குமாரசாமி வண்ணாசூரனை 3 முறை வலம் வந்து மீண்டும் வள்ளி-தெய்வானையுடன் புறப்பட்டு கைலாசநாதர் கோவிலை அடைந்தார்.
இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- அப்துல் ரஹிமான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கரு ங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் அப்துல் ரஹிமான் (வயது 29). இவர் ஒரு தனியார் கம்பெனியில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பாஷீரா (22).
இந்நிலையில் சம்பவத்தன்று அப்துல் ரஹிமான் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வீடு திரும்பினார்.
பின்னர் மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் பாஷீரா தனது கணவரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்து வமனைக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த அப்துல் ரஹிமான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து அவரது மனைவி பாஷிரா கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- ஹேமலதா வீட்டின் உள்ளே சென்று துப்பட்டாவால் தூக்கு போட்டுக்கொண்டார்.
- அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்மாபேட்டை:
ஈரோடு அம்மாபேட்டை அருகே குதிரைகல்மேடு பகுதி யைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 31). இவர் கூலி வேலைக்கு சென்று வருகிறார்.
இவரது மனைவி ஹேம லதா (27). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள னர். ஹேமலதா கடந்த சில நாட்களாக வயிற்று வலி யால் அவதிப்பட்டு வந்த தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்ப வத்தன்று ஹேமலதா தனக்கு வயிற்று வலி என்று கணவரிடம் கூறியதால் அருண்குமார் மெடிக்கலுக்கு சென்று மாத்திரை வாங்கி வர சென்றார்.
அப்போது வீட்டில் தனி யாக இருந்த ஹேமலதா வீட்டின் உள்ளே சென்று துப்பட்டாவால் தூக்கு போட்டுக்கொண்டார். இதையடுத்து வீட்டிற்கு வந்த அருண்குமார் மனைவி தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அக்கம் பக்க த்தினர் உதவியுடன் ஹேமல தாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஹேமலதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பவானிசாகர், கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கடந்த வாரம் அண்ணாமலை நடைபயணம் செய்தார்.
- பெருந்துறை-குன்னத்தூர் ரோட்டில் மாலை 6 மணிக்கு மீண்டும் நடைபயணத்தை அண்ணாமலை தொடங்குகிறார்.
ஈரோடு:
தமிழக பா.ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற தலைப்பில் தமிழகத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக சென்று மக்களை சந்தித்து பேசி வருகிறார்.
அதன்படி ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட பவானிசாகர், கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கடந்த வாரம் அண்ணாமலை நடைபயணம் செய்தார். இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் அண்ணாமலை 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.
அதன்படி இன்று (புதன்கிழமை) மதியம் 4 மணிக்கு மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து நடைபயணத்தை அண்ணாமலை தொடங்குகிறார். சிவகிரி குமரன் சிலை பகுதியில் மக்கள் மத்தியில் அண்ணாமலை பேசுகிறார். இதைத் தொடர்ந்து பெருந்துறை-குன்னத்தூர் ரோட்டில் மாலை 6 மணிக்கு மீண்டும் நடைபயணத்தை அண்ணாமலை தொடங்குகிறார்.
தொடர்ந்து அண்ணா சிலை பகுதியில் அவர் மக்கள் மத்தியில் பேசுகிறார். ஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தொகுதிகளுக்கான சுற்றுப்பயணம் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. நாளை மாலை வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் மாலை 5 மணிக்கு அண்ணாமலை நடைபயணத்தை தொடங்குகிறார். தொடர்ந்து சூரம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் அண்ணாமலை பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
- கொள்ளையர்கள் நகையை கொள்ளை அடித்து வீட்டின் பின்பக்க சுவர் வழியாக ஏறி குதித்து தப்பி சென்றுள்ளனர்.
- வீட்டை பற்றி நன்கு தெரிந்த நபர்கள் தான் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூரை சேர்ந்தவர் அர்ச்சுனன் (61). இவர் கோபியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வுபெற்றார்.
இவரது மனைவி சபிதா. இவர்களது மகள் தீபிகா. கோபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பல் டாக்டராக பணியாற்றி வருகிறார். தீபிகாவிற்கு வரன் பார்த்து அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக 100 பவுன் நகையை அர்ச்சுனன் வாங்கி வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தார்.
மகள் திருமணம் என்பதால் கடந்த ஒரு மாத காலமாக வீட்டில் பெயிண்டிங் மற்றும் மராமத்து பணிகள் நடைபெற்று வந்தது. இதில் சில பணியாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை தீபிகா வழக்கம் போல் மருத்துவமனைக்கு வேலைக்காக சென்று விட்டார். அர்ச்சுனனும், அவரது மனைவி சபிதாவும் அந்தியூரில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பி உள்ளனர். வீட்டின் முன் பக்க கதவை திறந்து அர்ச்சுனன் மற்றும் அவரது மனைவி வீட்டுக்குள்ளே சென்றனர்.
அப்போது வீட்டில் சமையல் அறையில் உள்ள கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதனால் சந்தேகம் அடைந்த அர்ச்சுனன் வீட்டில் இருந்த பீரோ இருந்த அறைக்கு சென்று பார்த்தார்.
அப்போது பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். இதேபோல் மேல் அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 2 பீரோக்களிலும் இருந்த 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து அர்ச்சுனன் கோபி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் கொள்ளை நடந்த வீட்டிற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். நள்ளிரவு 12 மணியளவில் மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
போலீசார் வீட்டின் பின்பகுதியில் சென்று பார்வையிட்டனர். அப்போது வீட்டில் பின்பக்க காம்பவுண்ட் சுவர் அருகே ஒரு பேக் இருப்பது தெரியவந்தது. அந்த பேக்கை திறந்து பார்த்தபோது அதில் 30 பவுன் நகை இருந்தது தெரியவந்தது.
கொள்ளையர்கள் நகையை கொள்ளை அடித்து வீட்டின் பின்பக்க சுவர் வழியாக ஏறி குதித்து தப்பி சென்றுள்ளனர். அப்போது காம்பவுண்ட் சுவரை தாண்டி குதிக்கும் போது கொள்ளையடிக்கப்பட்ட ஒரு பேக் தவறி வீட்டுக்குள் விழுந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டை பற்றி நன்கு தெரிந்த நபர்கள் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் மற்றும் கொள்ளை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சிறுத்தை ஊருக்குள் புகுந்து தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வருவது தொடர்கதையாகி வருகிறது.
- தற்போது மீண்டும் தோட்டத்துக்குள் புகுந்து கன்று குட்டியை கொன்று உள்ளது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இதில் சமீப காலமாக சிறுத்தை ஊருக்குள் புகுந்து தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே ஓசூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார். விவசாயியான இவர் தன்னுடைய தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று செல்வகுமார் தோட்டத்தில் புகுந்து தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்று குட்டியை கடித்து கொன்றது. நேற்று காலை வழக்கம் போல் செல்வகுமார் தோட்டத்திற்கு சென்றபோது கன்றுக்குட்டி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் அதன் அருகே சிறுத்தை கால் தடம் பதிவாகி இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதி விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, எங்கள் பகுதியில் ஏராளமானோர் கால்நடைகளை வளர்த்து வருகிறார்கள். ஏற்கனவே இதே போல் சிறுத்தை பலமுறை ஊருக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி உள்ளது. தற்போது மீண்டும் தோட்டத்துக்குள் புகுந்து கன்று குட்டியை கொன்று உள்ளது.
இதனால் நாங்கள் பீதி அடைந்து உள்ளோம். தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று அந்த சரக்கு வாகனத்தை வழிமறித்து நிறுத்தியது.
- சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது.
இங்கு சாம்ராஜ்நகர், தாளவாடி, ஆசனூர் ஆகிய பகுதிகளில் இருந்து அறுவடை செய்யப்படும் உரு ளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள் ஏராளமான மினி ஆட்டோக்களில் தினமும் ஈரோடு மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லப்படுகிறது.
நேற்று இரவு தாளவாடி பகுதியில் அறுவடை செய்யப்பட்ட உருளைக்கிழங்கு மூட்டைகளை ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் திம்பம் மலைப் பாதையில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று அந்த சரக்கு வாகனத்தை வழிமறித்து நிறுத்தியது.
அப்போது சாலையின் ஓரமாக யானையை தாண்டி சென்று விடலாம் என எண்ணி ஓட்டுனர் வாகனத்தை இயக்கிய போது, காட்டு யானை அந்த சரக்கு வாகனத்தை தனது தும்பிக்கையால் பிடித்து நிறுத்தியது. அதன் பிறகு மேல் பகுதியில் வைத்திருந்த உருளைக்கிழங்கு மூட்டையை தும்பிக்கையால் இழுத்து கீழே தள்ளியது.
பின்பு உருளைகிழங்கு மூட்டையை உண்பதற்காக எடுத்துச் சென்றது. இதனால் அந்தப் பகுதியில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் அரை மணி நேரத்தி ற்கு பிறகு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பிறகே போக்குவரத்து மீண்டும் சீரானது.
- கணேசன் வீட்டின் முன்பு படுத்து தூங்கி கொண்டிருந்தார்.
- இடது கை தோள்பட்டையில் ஏதோ ஒரு விஷப்பூச்சி கடித்து விட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (63). சம்பவத்தன்று கணேசன் வீட்டின் முன்பு படுத்து தூங்கி கொண்டிருந்தார்.
அதிகாலை 4. 45 மணிக்கு தூங்கி கொண்டிருந்த போது அவரது இடது கை தோள்பட்டையில் ஏதோ ஒரு விஷப்பூச்சி கடித்து விட்டது.
வாலியால் துடித்த கணேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கணேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






