என் மலர்
ஈரோடு
- பூக்களின் விலை சரிவடைய தொடங்கியுள்ளது
- ரூ.250 விற்ற சம்பங்கி 50 ரூபாயாகவும் குறைந்துள்ளது.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி மற்றும் பவானிசாகர் சுற்றுவட்டார கிராமங்களில் 15 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக மல்லி, முல்லை, சம்பங்கி பூக்கள் அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது.
இங்கு விளையும் பூக்கள் புளியம்பட்டி பூ மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகா மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை என தொடர்ச்சியாக விசேஷ நாட்கள் வந்ததால் மல்லி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் கடந்த ஒரு வாரமாக 2 மடங்கு விலை உயர்ந்து விற்கப்பட்டது.
விசேஷ தினங்கள் முடிவடைந்ததால் பூக்களின் விலை சரிவடைய தொடங்கியுள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.ஆயிரம் முதல் 1,200 வரை விற்ற மல்லிகைப்பூ தற்போது ரூ.450 ரூபாயாக சரிந்துள்ளது. ரூ. 600-க்கு விற்ற முல்லை ரூ. 170 ரூபாயாகவும், ரூ.250 விற்ற சம்பங்கி 50 ரூபாயாகவும் குறைந்துள்ளது.
- ரவீந்திரநாத் வீட்டினுள் தூக்கு மாட்டிக் கொண்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே குமரன் நகரை சேர்ந்தவர் கங்கா தரன் மகன் ரவீந்திரநாத். இவரது மனைவி ஸ்ரீகுமாரி. இவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே ஜீவா விதியில் வசித்து வந்தனர்.
ரவீந்திரநாத் சில ஆண்டு களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரவீந்திரநாத் பெருந்துறை அருகே குமரன் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மிகுந்த மன வேதனை அடைந்த ரவீந்திரநாத் வீட்டினுள் தூக்கு மாட்டிக் கொண்டார்.
பின்னர் தகவல் அறிந்த ஸ்ரீகுமாரி மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ரவீந்திரநாத்தை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ரவீந்திரநாத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து ஸ்ரீகுமாரி வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- செல்போன் சம்பந்தமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
- போலீசார் சந்திரனை கைது செய்தனர்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள எம்மாம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் கொமரன். இவரது மகன் கருப்புசாமி (32). அதே பகுதியை சேர்ந்த வர் முருகன். இவரது மகன் சந்திரன் (23). இவர்கள் 2 பேரும் உறவினர்கள். இவர்கள் பனியன் கம்பெனி யில் தொழிலாளிகளாக வேலை செய்து வரு கிறார்கள்.
இந்நிலையில் கருப்புசாமி செல்போனை சந்திரன் எடுத்து சென்றதாக கூறப் படுகிறது. இது குறித்து கருப்புசாமி, சந்திரனிடம் கேட்டார். அப்போது கருப்புசாமியை சந்திரன் தகாத வார்த்தைகளால் பேசி கீழே தள்ளி விட்ட தாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து கருப்புசாமி வீட்டுக்கு சென்று தூங்கி னார். இதை தொடர்ந்து காலை அவரது பெற்றோர் அவரை எழுப்பினர். அப்போது கருப்புசாமி இறந்த நிலையில் கிடந்தார். இதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கருப்புசாமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் கருப்புசாமியும் சந்திரனும் மது குடித்ததாகவும், போதையில் செல்போன் சம்பந்தமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது கருப்புசாமியை சந்திரன் ரோட்டில் கீழே தள்ளி விட்டார்.
இதில் கருப்புசாமி தலையில் அடிபட்டு இருக்கலாம். அது தெரியாமல் அவர் தூங்கியதால் இறந்தது தெரிய வந்தது.
இதையடுத்து வரப்பாளையம் போலீசார் சந்திரனை கைது செய்தனர். இதை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
- வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் ராஜகோபால் சுங்கரா ஆய்வு செய்தார்.
- மண்புழு உரக்கொட்டகை, திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
சத்தியமங்கலம்:
கொமாரபாளையம் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் ராஜகோபால் சுங்கரா ஆய்வு செய்தார்.
மேலும் கொமாரபாளையம் ஊராட்சி அம்பேத்கர் நகரில் ஊராட்சி நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிட்டில் அமைக்கப்பட்டுள்ள நாற்றுபண்ணை, மண்புழு உரக்கொட்டகை, திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
உடன் கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன், ஒன்றிய ஆணையாளர் பிரேம்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் வஹாப், உதவி பொறியாளர் ஜெயகாந்த்,
பணிபார்வையாளர் வெள்ளிங்கிரி, துணைத் தலைவர் ரமேஷ், வளர்ச்சி குழு உறுப்பினர் ராசு, வார்டு உறுப்பினர் சாவித் திரி ரங்கராஜ், ஊராட்சி செயலாளர் குமார் மற்றும் பலர் இருந்தனர்.
- கோனேரிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைக்கிறது.
- இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.
அம்மாபேட்டை:
பவானி கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் விடுத்துள்ள அறிக்கையில் பவானி கோட்டம் கோனேரிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அம்மாப்பேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, சின்னப்பள்ளம், சிங்கம்பேட்டை, ஆனந்தம்பாளையம், காடப்பநல்லூர், சித்தார், கேசரிமங்கலம், குட்டமுனியப்பன் கோயில், கல்பாவி, குறிச்சி, பூதப்பாடி, எஸ்.பி.கவுண்டனூர் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
- கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.
- மொத்தம் ரூ.1.80 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.
பெருந்துறை:
பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.
பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 5,264 மூட்டைகளில் 2,20,000 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ.80.69-க்கும், அதிகபட்சமாக ரூ.88.07-க்கும் விற்பனையாயின. 2-ம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ.30.99-க்கும், அதிகபட்சமாக ரூ.81.99-க்கும் விற்பனையாயின.
மொத்தம் ரூ.1.80 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.
- பிரபு வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.
- அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த தவுட்டுப்பாளையம் பழனியப்பா வீதி பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 39). இவர் கைத்தறி நெசவுத்தொழில் செய்து வந்தார்.
பிரபுவுக்கு ராணி (30) என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மன உளைச்சல் அடைந்த பிரபு வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் பிரபுவை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் பிரபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் இதுகுறித்து அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- விற்பனைக்காக வைத்திருந்த 30 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- சரவணன் என்பவரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என பங்களாபுதூர், அந்தி யூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்
அப்போது தண்ணீர் பந்தல் பஸ் ஸ்டாப், அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி மது விற்ப னை செய்து கொண்டிருந்த ஈரோடு மாவட்டம் அந்தியூர் மேற்கு தெருவை சேர்ந்த அப்புசாமி மகன் குமார் (வயது 54), கோபிசெட்டி பாளையம் கொங்கராபாளையம் பழனிச்சாமி மகன் மகேந்திரன் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 30 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த ராம நாதபுரம் மாவட்டம் எல்லி முள்ளி பகுதியை சேர்ந்த சண்முகவேல் மகன் சரவணன் (30) என்பவரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் விற்பனை க்காக வைத்திருந்த குட்கா, மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டிப்பர் லாரி பாரம் தாங்காமல் ஒரு புறமாக குழியில் இறங்கியது.
- சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
டி.என்.பாளையம், அக். 26-
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தில் இருந்து பங்களாப்புதூர் நோக்கி டிப்பர் லாரி ஒன்று ஜல்லி கல் ஏற்றிக்கொண்டு பங்களாப்புதூர் மூன்று ரோடு பஸ் நிறுத்தம் வந்துள்ளது.
அப்போது பங்களாப்புதூர்-கோபி சாலையில் ஏற்கனவே பாதாள சாக்கடை பராமரிப்பு பணிக்காக தோண்டப்பட்ட குழியை புதிதாக மண்ணை கொட்டி மூடி சமன்படுத்தி உள்ளனர்.
இந்த சமன்படுத்திய இடத்திற்கு வந்த டிப்பர் லாரி, புதிதாக மண் கொட்டியதால் பாரம் தாங்காமல் ஒரு புறமாக குழியில் இறங்கியது.
இதனையடுத்து குழியில் இறங்கிய டிப்பர் லாரியை க்ரைன் கொண்டு வந்து தூக்கி அப்புறப் படுத்தியதையடுத்த மீண்டும் பள்ளம் ஏற்பட்ட பகுதியில் மண்ணை கொட்டி சீர்படுத்தினர்.
இதனால் அத்தாணி-சத்தியமங்கலம் மற்றும் கோபி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை சீர்படுத்தும் போது சம்பந்தப்பட்ட நிர்வாகம் சரியான எச்சரிக்கை பலகை வைத்திருந்தால் இதுபோன்ற நிகழ்வு நடக்காது என்று வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
- தமிழக அரசையும், போலீசாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.
- கவர்னர் மாளிகை முன் கண்காணிக்க முடியவில்லை என்றால் சிறு நகரத்தில் உள்ள பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்.
ஈரோடு:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" நடைபயணத்தை ஈரோடு மாவட்டத்தில் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று மாலை சிவகிரியில் நடைபயணத்தை மேற்கொண்டார். பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு எந்த அளவிற்கு மோசமாக இருக்கிறது என்பதற்கு நம்முடைய சரித்திரத்தில் நிகழாத வகையில் கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் இதுபோல் யாரும் பார்த்ததில்லை.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கருக்காவினோத்தை பிடித்து கொடுத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய அதே கருக்காவினோத் இன்று கவர்னர் மாளிகை வாசலில் வீசியுள்ளார். வழக்கம்போல் போல் போலீசார் புது காரணமாக நீட்டிற்கு எதிராக குண்டு வீசியதாக கூறுகின்றனர்.
கருக்கா வினோத்திற்கு இது புதிதல்ல. உளவுத்துறை எந்த அளவிற்கு கோட்டை விட்டுள்ளது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு வேறு இருக்க முடியாது. கொடிக்கம்பத்தின் மீது முனைப்பு காட்டும் போலீசார், சமூக வலைத்தளங்களில் பணியாற்றுபவர்களை கைது செய்யும் போலீசார் கருக்காவினோத் தொடர்ந்து இதே சம்பவங்களை செய்து கொண்டிருப்பதை கண்காணிக்கவில்லை. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழக அரசையும், போலீசாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. இனி தமிழகத்தில் அசம்பாவிதங்கள் நடக்கக்கூடாது என கடவுளை மட்டுமே வேண்டிக்கொள்ள வேண்டும். அது மட்டும் தான் நம் கையில் உள்ளது. முதலமைச்சர் இப்போதாவது கண் விழித்துக்கொண்டு போலீசாருக்கு அதிகாரத்தை கொடுத்து இதுபோன்ற குற்ற சம்பவங்களை நடக்காமல் தடுப்பாரா என்ற கேள்வியை மக்கள் கேட்பது போல் நானும் கேட்கிறேன்.
மறுபடியும் கருக்காவினோத் 6 மாதங்களுக்கு பிறகு எங்கு கொண்டு போடுவார் என்று பெட்டிங் தான் கட்ட வேண்டும். செயலிழந்து இருக்கும் போலீசாரின் பூட்டை அவிழ்த்து தி.மு.க. அரசு சாமானிய மக்களுக்கு நம்பிக்கையையும், மரியாதையும் வரும் அளவிற்கு போலீஸ் துறையை கொண்டு வர வேண்டும்.
ஜனாதிபதி வரவுள்ள நிலையில் இது சென்சிடிவ் விஷயம். கவர்னர் மாளிகை முன் கண்காணிக்க முடியவில்லை என்றால் சிறு நகரத்தில் உள்ள பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் என்பது இச்சம்பவம் மூலம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அண்ணாமலை சிவகிரியில் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
பொய்யை மூலதனமாக வைத்து அரசியல் செய்யும் ஒரே கட்சி தி.மு.க. தான். உலகத்தில் 80 சதவீதம் மஞ்சள் இந்தியாவில் உற்பத்தியாகிறது. இந்தியாவில் ஈரோடு மாவட்டம் 2-வது இடத்திலும், முதல் இடத்தில் நிசாமாபாத்தும் மஞ்சள் உற்பத்தி செய்கின்றன.
நிசாமாபாத்தில் மஞ்சள் வாரியம் அமைந்துள்ளது. இதன் பிராந்திய அலுவலகம் ஈரோட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். சுய ஒழுக்கம் உள்ள நேர்மையான தலைவர் பிரதமர் மோடி. பல பேருக்கு பிரதமர் ஆசை வந்துவிட்டது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு ஜீரோ மார்க்கை விட மைனஸ் மார்க் தான் போட வேண்டும். 1.50 கோடி தொண்டர்கள் கொண்ட தி.மு.க. 8 கோடி மக்கள் தமிழகத்தில் உள்ள நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது.
அமைச்சர் உதயநிதி கையில் முட்டையை வைத்துக்கொண்டு மந்திரவாதி போல் செயல்பட்டு வருகிறார். இதனால் நீட் தேர்வு ரத்தாகி விடுமா.
இவ்வாறு அவர் பேசினார்.
- சத்தியமங்கலத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
- மர்ம நபர்கள் வடமாநிலத்தவராக இருக்கலாம் என்றும், குற்ற சம்பவங்களில் தொடர்பு இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சத்தியமங்கலத்தில் முக்கிய வீதிகளான எஸ்.ஆர்.டி. கார்னர், வடக்குப்பேட்டை, கோட்டு வீராம் பாளையம், காந்திநகர், மணி கூண்டு உள்ளிட்ட முக்கிய வீதிகள் உள்ளன.
இந்நிலையில் நேற்று மணிக்கூண்டு அருகே உள்ள பெரிய பள்ளிவாசல் வீதியில் நள்ளிரவு ஒரு மணி அளவில் மர்ம நபர்கள் 2 பேர் அங்கும் இங்குமாக பரபரப்பாக நடந்து செல்வதும், ஓடுவதும் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து காலையில் வழக்கம் போல் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை பார்த்தபோது மர்ம நபர்கள் நடமாட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளிவாசல் நிர்வாகத்தினர் இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் அந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மர்ம நபர்கள் வடமாநிலத்தவராக இருக்கலாம் என்றும், குற்ற சம்பவங்களில் தொடர்பு இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து சத்தியமங்கலத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இரவு நேரம் ரோந்து பணியை தீவிரப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- மழை நீர் வடிகால் பணி அமைப்பதற்கு பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளது.
- வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் பகுதியில் இருந்து அண்ணா மடுவு வரை இருபுறங்களிலும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி, சாலை விரி வா க்கம் பணி நடந்து வருகிறது.
அந்தியூர் பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு விழா மற்றும் பண்டிகை காலங்களில் வியாபாரம் நடப்பது வழக்கம். இந்த நிலையில் பஸ் நிலையம் பகுதியில் மழை நீர் வடிகால் பணி அமைப்பதற்கு பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளது.
தற்சமயம் பண்டிகை காலம் தொடங்கி உள்ளது. மேலும் நவம்பர் 12-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படு கிறது.
தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரு வதால் கடைகள் முன்பு பள்ளங்கள் தோண்டினால் அந்த பகுதியில் கடை நடத்துபவர்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டது.
அதன் பிறகு தற்போது இந்த தீபாவளி பண்டிகை வியாபாரம் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்து இருக்கும் நிலையில் கடைகள் முன்பு பள்ளங்கள் தோண்டப்பட்டு இருப்பதனால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
பஸ் நிலையம் பகுதி களில் கடைகளில் அதிக வாடகை கொடுத்து கடை வைத்து நடத்தி வருகிறோம்.
பண்டிகை காலங்களில் நடக்கும் வியாபராத்தை நம்பி தான் இருக்கிறோம். தற்போது தீபாவளி நேரத்தில் வியாபாரம் நடைபெறாமல் இருப்ப தனால் கடுமையாக பாதிக்க பட்டு வருகிறோம். மேலும் வாடகை கொடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டு உள்ளது.
எனவே அந்தியூர் பகுதி யில் நடக்கும் பணி களை விரைவில் முடிக்க வேண்டும் என அந்த பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கேட்டு கொண்டனர்.
மேலும் கடைகளுக்கு வரும் பொது மக்களும் கடைகளுக்கு வர முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.
இதே போல் அத்தாணி சாலை பொறிக்கடை கார்னர் பகுதியில் மழைநீர் வடிகால் பணி தொடங்க பள்ளங்கள் தோண்டப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் அங்கு பணிகள் தொடங்கப்படாத நிலையே இருந்து வருகிறது.
இந்த பள்ளங்களால் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வரும் நபர்கள் அந்த பள்ளத்தில் விழும் நிலையும் உள்ளது. இது தொடர்கதையாகவே இருந்து வருகிறது.
எனவே பண்டிகை காலம் வருவதற்குள் அந்த பணிகளை விரைவில் முடி த்து தர வேண்டும் என்று வியாபாரிகளும் பொது மக்களும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தைச் சார்ந்தவர்களும் தன்னார்வ லர்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.






