நெசவுத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

பிரபு வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
நெசவுத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
Published on

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த தவுட்டுப்பாளையம் பழனியப்பா வீதி பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 39). இவர் கைத்தறி நெசவுத்தொழில் செய்து வந்தார்.

பிரபுவுக்கு ராணி (30) என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மன உளைச்சல் அடைந்த பிரபு வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் பிரபுவை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் பிரபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் இதுகுறித்து அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com