என் மலர்
ஈரோடு
- சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
- 2 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டு எருமை, மான்கள் உள்பட ஏராள மான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
தாளவாடி வனச்சரகத்தி ற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தொட்ட காஜனூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரின் ஆட்டை சிறுத்தை கடித்து கொன்றது.
இது குறித்து தாளவாடி வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை கால் தடயங்களை ஆய்வு செய்து ஆட்டை கொன்றது சிறுத்தை என உறுதி செய்தனர்.
தொடர்ந்து கால்நடை களை சிறுத்தை வேட்டையாடி வருவ தால் அப்பகுதி விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதனையேற்று வன த்துறையினர் குணசேகரன் தோட்டத்தில் 2 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்கா ணித்து வருகின்றனர்.
- மர்மவிலங்கால் பாதிக்கப்பட்ட பகுதியை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
- விலங்கை பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.
அறச்சலூர்:
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தொழுவங்களில் கட்டப்பட்டுள்ள கால்நடைகளை இரவில் வரும் மர்மவிலங்கு இழுத்து சென்றுவருகிறது. இதனால் அச்சம் அடைந்துள்ள பொதுமக்கள் இது குறித்து ஈரோடு மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
இதனை அடுத்து வீட்டுவசதித்துறை அமை ச்சர் முத்துசாமி மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் அறச்சலூரில் மர்மவிலங்கால் பாதிக்கப்பட்ட பகுதியை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உலாவும் விலங்கை பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார். இதில் வனத்துறை அதிகாரி சுதாகரும் கலந்து கொண்டார்.
- சிறுத்தை ஒன்று மானை துரத்திக்கொண்டு குடியிருப்பு பகுதியை ஒட்டி சென்றதாக தகவல் பரவியது.
- வனத்துறையினர் இரவு நேரத்தில் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அறச்சலூர்:
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள அட்டவனை அனுமன்ப ள்ளி ஊராட்சியில் அறச்ச லூர் மலையை ஒட்டி அமை ந்துள்ள ஓம்சக்தி நகரில் கடந்த சில நாட்க ளுக்கு முன்னர் சண்முக
சுந்தரம் என்பவரது தொழுவத்தி லிருந்த கன்றுக்குட்டியை இரவில் வந்த மர்மவிலங்கு இழுத்துசென்றது.
இதனை அடுத்து வெள்ளி வலசில் மற்றொரு விவசா யியின் ஆட்டுப்பட்டியிலிருந்த ஆடு ஒன்றை இழுத்து சென்றுள்ளது.
இதனால் இச்சம்ப வங்களில் தொடர்பு டைய விலங்கை பிடிக்க வனத்துறையினர் வனப்ப குதியில் கண்கா ணிப்பு கேமராக்க ளை பொருத்தியும், கூ ண்டுகளை வைத்தும் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு அறச்சலூரை அடுத்த ஊஞ்சப்பாளையம் சாவடி க்காடு பகுதியில் சிறுத்தை ஒன்று மானை துரத்திக்கொண்டு குடியிருப்பு பகுதியை ஒட்டி சென்றதாக தகவல் பரவியது.
இதனை கேள்விப்பட்ட வனத்துறையினர் அங்கு சென்று வனப்பகுதியில் இரவு நேரத்தில் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அவர்களுடன் வெள்ளிவலசை சேர்ந்த மக்களும் தேடினர்.
- வாசன திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் பிரசாதம் வழங்கப்பட்டது.
பு.புளியம்பட்டி:
புஞ்சைபுளியம்பட்டியில் அண்ணாமலையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதோஷம் வழிபாடானது நடைபெற்றது.
முன்னதாக அண்ணாமலையார் உடன் உண்ணா மழை அம்மை மற்றும் நந்தி பெருமானுக்கு பால், தயிர், திருமஞ்சனம், திருநீறு உள்ளிட்ட வாசன திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதைக்கண்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் பிரசாதம் வழங்கப்பட்டது.
- செல்லீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு வருகின்றது.
- இந்து சமய அறநிலையத் துறையினர் அளவீடு செய்தனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு வருகின்றது. இதில் 32 இடங்களில் அத்துக்கள் நடப்பட்டது.
இதேபோல் அந்தியூர் தவி ட்டுப்பாளையம் மார்க்கெட் அருகே உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 1 ஏக்கர் 25 சென்ட் நிலங்கள் இந்து சமய அறநிலையத் துறையினர் அளவீடு செய்தனர்.
இதில் கோவில் நிலங்கள் துணை கலெக்டர் பணி ஓய்வு குப்புசாமி, ஈரோடு ஆலய நிலங்கள் தனி கலெக்டர் சங்கர் கணேஷ், ஆலய நிலங்கள் தாசிர்தர் ஓய்வு பழனிச்சாமி,
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் சீதாராமன், கிராம நிர்வாக அலுவலர் ஓய்வு அழகுராஜா, நில அளவையர் அருள்குமார், ஹரி, பத்ரகாளியம்மன் கோவில் அலுவலர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு அளவீடு செய்யும் பணியினை செய்தனர்.
- திலகவதி துப்பட்டாவால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
- ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு திண்டல், வித்யா நகரை சேர்ந்தவர் திலகவதி (71). இவரது கணவர் 2 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இவரது மகள் கோவையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
திலகவதி மட்டும் வித்யா நகரில் தனியாக வசித்து வந்தார். அவரை கவனித்து கொள்ளவும், வீட்டு வேலை கள் செய்யவும் காந்திமதி என்பவரை திலகவதியின் மகள் நியமித்து இருந்தார்.
திலகவதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று காந்திமதி ரேஷன் கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்துள்ளது.
இதையடுத்து காந்திமதி ஜன்னல் வழியாக பார்த்த போது பேன் மாட்டும் கொக்கியில் திலகவதி துப்பட்டாவால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரி சோதித்த டாக்டர் வரும் வழி யிலேயே திலகவதி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து திலகவதியின் மகள் அளித்த புகாரின் பேரில் ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு சூரம்பட்டி காந்திஜி தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (34). இவரது மனைவி நித்யா. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. சுரேஷ் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் சுரேஷ்க்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகரா றில் ஈடுபட்டுள்ளார். இதே போல் நேற்றும் மது போதை யில் வீட்டுக்கு வந்த சுரேஷ் மனைவியையும், குழந்தை யையும் அடித்து வீட்டை வி ட்டு வெளியே துரத்தி விட்டு உள்ளே சென்று கதவை தாழ்யிட்டுகொண்டார்.
நீண்ட நேரம் ஆகியும் கணவர் வெளியே வரா ததால் சந்தேகம் அடைந்த நித்தியா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள அறை யில் சுரேஷ் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சுரேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் அந்தி யூர் எம்.எம்.கே. தெருவை சேர்ந்தவர் தாமரை க்கண்ணன் (24). ஆக்டிங் டிரைவர் ஆக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் தாமரை கண்ணனுக்கு வலது காலில் புண் ஏற்பட்டு கடந்த 3 மாதமாகியும் ஆராத நிலையில் மிகுந்த மன வேதனைகள் இருந்து வந்துள்ளார்.
சிகிச்சை எடுத்தும் குணமா கவில்லை. சம்பவத்தொன்று வீட்டில் தனியாக இருந்த தாமரைக்கண்ணன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நட்ராஜ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
- ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆப்பக்கூடல்:
ஆப்பக்கூடல் அடுத்துள்ள அத்தாணி செம்புளிச்சாம் பாளையம் ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் நட்ராஜ் (49). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
நட்ராஜ் தனது சகோதரர் ஈஸ்வரன் என்பவரது வீட்டில் குடியிருந்த கொண்டு விவசாயம் செய்து வந்தார். நட்ராஜ்க்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனால் மன உலைச்சலில் இருந்து வந்த நட்ராஜ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கூட்டி சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நட்ராஜ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 4 வீடுகள் நீர்வள ஆதாரத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது.
- வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு வருகின்றனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேட்டைகாரன் கோவில் வாய்க்கால் மேடு பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் நீர்வள ஆதாரத்துறைக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.
அதேபோன்று அதன் அருகிலேயே 50 ஆண்டுகளுக்கும் மேலாக 4 வீடுகள் நீர்வள ஆதாரத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது. ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை காலி செய்வதோடு, 2 ஏக்கர் நிலத்தை மீட்கவும் கடந்த சில ஆண்டுகளாக நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் கடுமையான முயற்சி எடுத்து வந்தனர்.
இந்நிலையில் நீர்வழி நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, வருவாய்த்துறையினர் உதவியுடன் நிலம் அளவீடு செய்யப்பட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது.
வீடுகளை காலி செய்து கொள்ள பல முறை நோட்டீஸ் அனுப்பியும், வீடுகளை காலி செய்து கொள்ள முன்வராத நிலையில் கோபி தாசில்தார் உத்தரசாமி முன்னிலையில் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் 4 வீடுகளிலும் இருந்த பொருட்களை வெளியேற்றி விட்டு, மின் இணைப்பை துண்டித்து விட்டு பொக்லைன் எந்திரம் உதவியுடன் 4 வீடுகளையும் இடித்து அகற்றினர்.
அதே போன்று 2 ஏக்கர் நிலத்தையும் அளவீடு செய்து, அங்கும் பொக்லைன் மூலமாக ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்டனர். மேலும் கோபி பகுதியில் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு வருகின்றனர்.
- தீ விபத்துக்கான காரணம் குறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகி சேதமானதாக போலீசார் தெரிவித்தனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த வாணிப்புத்தூர் பேரூராட்சி 12-வது அ.தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் பழனிச்சாமி என்கிற ஹரிராம். வாணிப்புத்தூர் ஜே.ஜே.நகரில் உள்ள இவரது தகர கொட்டகை வீட்டில் புகை வந்தது. அருகில் இருந்தோர் ஓடி வந்து பார்க்கும் போது வீட்டில் தீ முழுவதும் பரவி எரிய தொடங்கியது.
இதனையடுத்து அருகில் இருந்தோர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் சத்தியமங்கலம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை தண்ணீரை பீச்சி அடித்து அணைத்தனர்.
வீட்டை சுற்றி தென்னங்கீற்று வேயப்பட்டு, மேற்கூரை தகர சீட்டால் அமைக்கப்பட்டு இருந்ததால் தீ வீடெங்கும் மலமலவென பரவி எரித்தது.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து சம்பவ இடத்திற்கு வந்த பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் உயிர் சேதம் இல்லை, ஆனால் வீட்டில் இருந்த டிவி, பீரோவில் இருந்த 60 ஆயிரம் ரொக்க பணம், பேங்க் பாஸ்புக், துணிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகி சேதமானதாக போலீசார் தெரிவித்தனர்.
- ஈரோட்டில் எல்லா சாலைகளும் சேதமடைந்துள்ளது.
- ஒருகாலத்தில் நமது காவல்துறை உலகப் புகழ் பெற்றதாக இருந்தது.
ஈரோடு:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஈரோடு மாவட்டத்தில் நேற்று மாலை 2-வது நாளாக வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் என் மண் என் மக்கள் நடை பயணத்தை மேற்கொண்டார். பின்னர் சூரம்பட்டி பஸ் நிறுத்தத்தில் அண்ணாமலை பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது முதல்வர், முதல்வர் மகன், அமைச்சர்கள் என அனைவரும் இங்கு முகாமிட்டு இருந்தனர். காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைத்தால், தேனாறும், பாலாறும் ஈரோட்டில் ஓடும் என்று சொன்னார்கள்.
மத்திய அரசு கொடுத்த நிதியை திருடாமல் மக்களுக்கு கொடுத்தால், தேனாறும், பாலாறும் தானகவே ஓடும். ஈரோட்டில் எல்லா சாலைகளும் சேதமடைந்துள்ளது. ஒருகாலத்தில் நமது காவல்துறை உலகப் புகழ் பெற்றதாக இருந்தது.
அதே அளவுக்கான திறன் வாய்ந்தவர்கள் இன்று அந்த துறையில் உள்ளனர். ஆனால் திமுக வந்தவுடன் அவர்களின் கைகளைக் கட்டி போட்டுவிட்டு வேலை செய்யச் சொன்னால் எப்படி வேலை செய்வார்கள்? ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசுமளவிற்கு இங்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு 2 நாட்களே ஆன ஒரு நபர், நேராக ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசுகிறார்.
காவல்துறை பிடிக்கும்போது கூட இன்னொரு பெட்ரோல் குண்டை வீசுகிறார். அந்த அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுகிறது.
ஆனால் பல்லடம் அருகே ஒரு தோட்டத்தில் குடித்து விட்டு தகராறு செய்தவர்களை தட்டிக் கேட்ட குடும்பத்தினர் 4 பேரை கொலை செய்தனர். குடிப்பதை தட்டிக்கேட்டதால் கொலையானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் தருகிறார். இதுபோன்ற அநியாயம் இந்தியாவில் எங்கும் பார்த்தது இல்லை. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 511 தேர்தல் வாக்குறுதி கொடுத்தனர். இதில் முக்கியமான 20 வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாமல், 90 சதவீத வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாகக் கூறுகின்றனர். ஆசிரியர் தகுதி தேர்வை எழுதிவிட்டு 10 ஆண்டுகளாக காத்திருக்கும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களை திருப்தி படுத்தும் வகையில் ஆசிரியர்களின் வயது வரம்பை 56 என உயர்த்தி உள்ளனர்.
இன்னொருபுறம் செவிலியர் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தி.மு.க.வின் பொய்யான வாக்குறுதியை எதிர்த்து ஒவ்வொரு புறமும் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் 67 சதவீதம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பல இடங்களில் இதில் முறைகேடு நடந்துள்ளது. ஏழை மக்கள் இருக்கக் கூடாது என பாஜக நினைக்கிறது. தமிழகத்தில் 38 தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் வெற்றி பெற்றும் ஒரு பயனும் இல்லை. மக்களின் வளர்ச்சிக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.
நமது கலாச்சாரத்தை போற்றும் வகையில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் செங்கோலை வைத்த நிகழ்விற்கு கூட இந்த எம்.பி.க்கள் போகவில்லை. தொழிற்சாலை நகரங்களான ஈரோடு, பெருந்துறை, திருப்பூரில் இருப்பவர்கள் எல்லாம், தொழிலை மூடிவிடாலாம் என்று நினைக்கும் அளவிற்கு வாட்டி வதைக்கின்றனர். ஈரோடு அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டுமானால் தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்து ஈரோடு எம்.பி. செல்ல வேண்டும். ஈரோடு மார்க்கெட்டை கட்டிவிட்டு இன்னும் திறக்கவில்லை.
ஈரோடு அமைச்சர் முத்துசாமி மீது எனக்கு பெரிய மரியாதை உள்ளது. ஈரோட்டிற்கு பல திட்டங்களை அவர் கொண்டு வந்துள்ளார். ஆனால், அவர் தி.மு.க.வில் சேர்ந்த பின் மது குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று சொல்லக் கூடாது என்கிறார்.
இந்தியா தலைநிமிர்ந்து நிற்க உங்கள் வாக்கினை பா.ஜ.க.விற்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கஜேந்திரன் பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
- லாவண்யா தனது மாமனார், மாமியாருடன் வசித்து வருகிறார்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தொட்டம் பாளையத்தை சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மனைவி லாவண்யா (25). இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கஜேந்திரன் பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். லாவண்யா தனது மாமனார், மாமியாருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு லாவண்யா தனது அறையில் இருந்ததாகவும், அறையில் திடீரென குழந்தையின் சத்தம் அதிகமாக இருந்ததால் லாவண்யாவின் மாமனார் மற்றும் மாமியார் கதவை தட்டி பார்க்கும் பொழுது திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்க்கும் பொழுது லாவண்யா அறையில் சீலிங் பேனில் சேலையால் தூக்குமாட்டி தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
லாவண்யாவை இறக்கி பார்க்கும் பொழுது மூச்சு இல்லாததால் உடனே தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே லாவண்யா இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் லாவண்யாவின் ஒரு வயது பெண் குழந்தை சரியாக சாப்பிடுவதில்லை எனவும், தன்னுடைய குழந்தை குண்டாக இல்லை எனவும் மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
- நேற்று இரவு தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரின் ஆட்டை சிறுத்தை கடித்து கொன்றது.
- தொடர்ந்து கால்நடைகளை சிறுத்தை வேட்டையாடி வருவதால் அப்பகுதி விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டு எருமை, மான்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வப்போது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் தொட்ட காஜனூர், பீம்ராஜ்நகர், சூசைபுரம் பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் அதிக அளவில் கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்கள்.
கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை இங்கு உள்ள கல்குவாரியில் பதுங்கி கொண்டு கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரின் ஆட்டை சிறுத்தை கடித்து கொன்றது. இதுகுறித்து தாளவாடி வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை கால் தடயங்களை ஆய்வு செய்து ஆட்டை கொன்றது சிறுத்தை என உறுதி செய்தனர்.
தொடர்ந்து கால்நடைகளை சிறுத்தை வேட்டையாடி வருவதால் அப்பகுதி விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.






