2 இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்திய வனத்துறையினர்

சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். 2 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
2 இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்திய வனத்துறையினர்
Published on

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டு எருமை, மான்கள் உள்பட ஏராள மான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

தாளவாடி வனச்சரகத்தி ற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தொட்ட காஜனூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரின் ஆட்டை சிறுத்தை கடித்து கொன்றது.

இது குறித்து தாளவாடி வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை கால் தடயங்களை ஆய்வு செய்து ஆட்டை கொன்றது சிறுத்தை என உறுதி செய்தனர்.

தொடர்ந்து கால்நடை களை சிறுத்தை வேட்டையாடி வருவ தால் அப்பகுதி விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இதனையேற்று வன த்துறையினர் குணசேகரன் தோட்டத்தில் 2 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்கா ணித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com