முதியவர் விஷப்பூச்சி கடித்து பலி

கணேசன் வீட்டின் முன்பு படுத்து தூங்கி கொண்டிருந்தார். இடது கை தோள்பட்டையில் ஏதோ ஒரு விஷப்பூச்சி கடித்து விட்டது.
முதியவர் விஷப்பூச்சி கடித்து பலி
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (63). சம்பவத்தன்று கணேசன் வீட்டின் முன்பு படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

அதிகாலை 4. 45 மணிக்கு தூங்கி கொண்டிருந்த போது அவரது இடது கை தோள்பட்டையில் ஏதோ ஒரு விஷப்பூச்சி கடித்து விட்டது.

வாலியால் துடித்த கணேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கணேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com