தனியார் நிறுவன ஊழியர் திடீர் சாவு

அப்துல் ரஹிமான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் நிறுவன ஊழியர் திடீர் சாவு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கரு ங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் அப்துல் ரஹிமான் (வயது 29). இவர் ஒரு தனியார் கம்பெனியில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பாஷீரா (22).

இந்நிலையில் சம்பவத்தன்று அப்துல் ரஹிமான் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வீடு திரும்பினார்.

பின்னர் மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் பாஷீரா தனது கணவரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்து வமனைக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த அப்துல் ரஹிமான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து அவரது மனைவி பாஷிரா கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com