என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்தில் அரசு ஊழியர் தலை நசுங்கி பலி
- ஈச்சர் வேன் மொபட்டின் பின்புறம் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
- தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே மணி உயிரிழந்தார்.
ஆப்பக்கூடல்:
அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர், ஆயமரத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மணி (55). இவர் பெருந்துறை குடிநீர் வடிகால வாரியத்தில் மின் பணியாள ராக வேலை செய்து வந்து ள்ளார். மணிக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்,
இந்நிலையில் மணி சம்பவத்தன்று மதியத்திற்கு மேல் தனது மொபட்டில் சக்தியமங்கலத்தில் இருந்து வெள்ளித்திருப்பூர் வருவதற்காக அத்தாணி வழியாக வந்து கொண்டி ருந்தார்.
அத்தாணி செம்புளிச்சா ம்பளையம் பிரிவு அருகே வரும்போது அவருக்கு பின்னால் வாழைக்காய் லோடு ஏற்றி வந்த ஈச்சர் வேன் மணி ஓட்டி வந்த மொபட்டின் பின்புறம் மோதியதில் நிலை தடுமாறி மணி கீழே விழுந்தார்.
அப்போது பின்னால் வந்த ஈச்சர் வேன் மணியின் உடல் மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே மணி உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆப்பக்கூடல் போலீசார் மணி உடலை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர்.
அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்திய வாழைக்காய் ஏற்றி வந்த ஈச்சர் வேன் டிரைவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து போலீசார் விசாரணையில் ஈச்சர் வேனை ஒட்டி வந்தவர் கோபி கணேசன் புதூர் அம்மாபாளை யம் பகுதியை சேர்ந்த செல்ல முத்து என்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து வேன் டிரைவர் செல்லமுத்து மீது வழக்கு பதிவு செய்த ஆப்பக்கூடல் போலீசார் விசார ணை நடத்தி வருகின்றனர்.






