மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள்

மாவட்ட அளவிலான போட்டிகள் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டத்தில் 3 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள்
Published on

ஈரோடு:

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டு வரும் விதமாக கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. பள்ளிகள், வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் என போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளில் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடத்தி முடிக்க ப்பட்டுள்ளது. வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் வருகின்ற 26-ந் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மாவட்டத்தில் 3 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்க ளுக்கு பருவாச்சி ஐடியல் மேல்நிலைப்பள்ளியிலும், 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சென்னிமலை ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரி யிலும், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோபி பி.கே.ஆர். கல்லூரியிலும் நடைபெறும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com