என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புறவழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்
    X

    புறவழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்

    • சென்னி மலை- காங்கேயம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இந்த மறியலால் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை-காங்கேயம் இடையே புறவழி ச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திரண்டு வந்து சென்னிமலை அருகே உள்ள பசுவபட்டி பிரிவு அருகே திருவள்ளுவர் நகர் பகுதியினை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து நாங்கள் மேற்கண்ட முகவரியில் 3 தலைமுறை யாக வசித்து வருகிறோம்.

    சென்னிமலையில் இருந்து காங்கேயம் செல்லும் வழியில் புறவழிச்சாலை போடப்பட உள்ளது. இதற்காக பசுவப்பட்டி, திருவள்ளுவர் நகர் வழியாக நில அளவை பணிகள் நடைபெறுகிறது.

    இந்த வழியாக புறவழி ச்சாலை அமைக்கப்பட்டால் திருவள்ளுவர் நகர், கே.சி.நகர், காமராஜர் நகர், தட்டங்காடு ஆகிய 4 கிராமத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். இந்த பகுதியில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகி ன்றனர். எங்களுக்கு தேவை யான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன.

    இதனால் இப்பகுதியில் புறவழிச்சாலை அமைக்கா மால் மாற்று வழியில் அமைக்க கோரி சென்னி மலை- காங்கேயம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை தெடார்ந்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.


    Next Story
    ×