என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • தொடர் மழையால் பழனி மலைக்கோவிலில் பக்தர்கள் வருகை குறைந்தே காணப்பட்டது.
    • குதிரையாறு, பாலாறு பொருந்தலாறு அணைகள் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படைவீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கடந்த சில நாட்களாக இங்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் முதல் சாரலாக தொடர்ந்து இரவு வரை பெய்தது.

    வழக்கமாக விடுமுறை நாட்களில் பக்தர்கள் அதிகளவில் குவிவார்கள். ஆனால் தொடர் மழையால் பக்தர்கள் வருகை குறைந்தே காணப்பட்டது. இதனால் மலைக்கோவில் , அடிவாரம், கிரிவீதி, பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களில் கேரள மாநில பக்தர்கள் கூட்டம் மட்டும் இருந்தது.

    தொடர்மழையால் சாலைகள் இருள்சூழ்ந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர். பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன. குதிரையாறு, பாலாறு பொருந்தலாறு அணைகள் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது.

    மேலும் தொடர் மழையால் பொதுமக்கள் வீட்டில் முடங்கியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் சாலைகளிலும் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

    • தற்போது பெய்து வரும் ெதாடர்மழையால் குடகனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
    • மழைக்காலங்களில் தீராத இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இப்பகுதியில் மேம்பாலம் கட்டவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு ஆத்துப்பட்டியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் குடகனாற்றை கடந்துதான் ஊருக்குள் செல்ல வேண்டும். மேலும் பல்வேறு தேவைக்களுக்காக திண்டுக்கல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

    மழைக்காலங்களில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் ஆற்றை கடக்க சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் தாடிக்கொம்பு பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் இதனை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது பெய்து வரும் ெதாடர்மழையால் குடகனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

    இதனால் ஆற்றை கடக்க முடியாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் ஆற்றை கடக்ககூடாது என எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக சென்றால் தனியார் நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்கள் வழியாக பொதுமக்கள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்துப்பட்டி கிராமம் தனித்தீவானது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கையில்,

    மழைக்காலத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கிராம மக்கள் வெளிப்பகுதிகளுக்கு செல்ல முடியாமல் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    ஏற்கனவே 3 முறை மேம்பாலம் கட்டக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டோம். மேலும் ரேசன் கார்டு ஒப்படைப்பு போராட்டத்திலும் பொதுமக்கள் ஈடுபட்டனர். ஆனால் தீர்வு காணப்படாததால் பெரும்பலான குடும்பத்தினர் கிராமத்தை விட்டு வெளியேறி சென்றுவிட்டனர். ஆனால் மற்ற பொதுமக்கள் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருவதால் அங்கேயே தங்கி உள்ளனர்.

    மழைக்காலங்களில் தீராத இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இப்பகுதியில் மேம்பாலம் கட்டவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.
    • மலை கிராமங்களில் பொதுமக்கள் இருளில் தவித்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் 281.7 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. கொடைக்கானலில் கன மழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

    மேலும் மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் மலை கிராமங்களில் பொதுமக்கள் இருளில் தவித்தனர். வெள்ளி நீர்வீழ்ச்சி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    தேனி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் வைகை அணை உள்பட அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    • சிறுத்தை உயிரிழந்த சம்பவத்தில் உண்மை நிலவரம் குறித்து தெரிவித்ததாகவும், இதில் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று ரவீந்திரநாத் தெரிவித்தார்.
    • விசாரணைக்கு ரவீந்திரநாத் எம்.பி. ஆஜராக வந்தபோது அங்கு ஏராளமான அ.தி.மு.கவினர் மற்றும் விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள சொர்க்கம் வனப்பகுதியில் தேனி எம்.பி. ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் கடந்த செப்டம்பர் 28-ந்தேதி 2½ வயது மதிக்கத்தக்க சிறுத்தை வேலியில் சிக்கி உயிரிழந்தது.

    இதுகுறித்து விவசாயிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் மாவட்ட வனத்துறை மற்றும் கலெக்டருக்கு புகார் மனு அளித்து போராட்டங்களும் நடத்தினர். இதனைதொடர்ந்து அந்த தோட்டத்தில் ஆட்டு கிடை அமைத்திருந்த அலெக்ஸ்பாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்டார். விவசாயிகள் போராட்டம் மேலும் தீவிரமடையவே தோட்டத்தின் மேலாளர்களான தங்கவேல், ராஜவேல் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஆனால் தோட்டத்தின் உரிமையாளரான ரவீந்திரநாத் எம்.பி மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர் எம்பியாக இருப்பதால் விசாரணைக்கு அழைக்க மக்களவை சபாநாயகருக்கு தேனி மாவட்ட வனத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. விசாரணை நடத்த மக்களவை சபாநாயகர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து ரவீந்திரநாத் எம்.பியை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி தேனி மாவட்ட வனஅலுவலர் உத்தரவிட்டிருந்தார்.

    ஏற்கனவே விசாரணைக்கு ஆஜராகாமல் கடிதம் மூலம் பதில் அளித்த நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி ரவீந்திரநாத் எம்.பி. தேனி மாவட்ட வனசரக அலுவலர் சமர்தாவிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். சிறுத்தை உயிரிழந்த சம்பவத்தில் உண்மை நிலவரம் குறித்து தெரிவித்ததாகவும், இதில் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார். விசாரணைக்கு ரவீந்திரநாத் எம்.பி. ஆஜராக வந்தபோது அங்கு ஏராளமான அ.தி.மு.கவினர் மற்றும் விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • தேவாலயத்தில் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஒன்றுகூடி வெள்ளோடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
    • போலீசார் இருதரப்பினரையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் அருகே ஏ.வெள்ளோடு பகுதியில் புனித தெரசா சந்தியாகப்பர் கோவில் உள்ளது. இங்கு பழைய நிர்வாகக்குழுவினருக்கு போட்டியாக புதிய குழு உருவானது. அவர்கள் நிர்வாகத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    ஆனால் இதற்கு பழைய நிர்வாகக்குழு மறுத்தது. இந்தநிலையில் ரூ.40 லட்சம் பணத்தை கையாடல் செய்ததாக கலெக்டர் அலுவலகத்தில் சிலர் புகார் அளித்தனர்.

    பழைய நிர்வாகக்குழு மற்றும் புதிய குழுவினருக்கு இடையே பிரச்சிைன ஏற்பட்டதால் கோவிலில் இருதரப்பினர் சார்பாகவும் 2 பூட்டுகள் போட்டு பூட்டப்பட்டன. அதன் சாவிகள் வி.ஏ.ஓவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இன்று வெள்ளோடு பகுதியில் ஒருவர் இறந்துவிட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்த கோவில் நிர்வாகம் சார்பாக சென்றபோது அங்கிருந்த 2 பூட்டுகளுமே உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஒன்றுகூடி வெள்ளோடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் சந்தனமேரி கீதா மற்றும் அம்பாத்துரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    அவர்கள் இருதரப்பினரையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பழைய நிர்வாகக்குழு தங்களிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என புதிய குழுவினர் தெரிவித்தனர். ஆனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததால் முடிவு எட்டப்படவில்லை. உயர் அதிகாரிகள் முன்னிலையில் மறுபடியும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    • திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் மற்றும் நத்தம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது.
    • மாவட்டம் முழுவதும் 9 அமர்வுகளில் நடைபெற்ற இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3600 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    திண்டுக்கல்:

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் மற்றும் நத்தம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது.

    நிரந்தர மக்கள் நீதிபதி மற்றும் ஒரு வக்கீல் உறுப்பினராக கொண்ட அமர்வு முன்னிலையில் வழக்குகள் நடத்தப்பட்டது. மோட்டார் வாகன விபத்து, இழப்பீடு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ள வழக்குகள், சொத்து மற்றும் பணம் சம்பந்தப்பட்ட உரிமையியல் வழக்குகள்,

    சமாதானம் செய்யக்கூடிய குற்றவழக்குகள், ஜீவானாம்சம், நிலஆக்கிரமிப்பு வழக்குகள், தொழிலாளர் நலன் இழப்பீடு, கல்விக்கடன், வங்கிக்கடன் சம்பந்தமான வழக்குகள், குடும்ப வன்முறை சட்ட வழக்கு, காசோலை வழக்கு, நுகர்வோர் வழக்குகள், வருவாய் சம்பந்தப்பட்ட வழக்குகள் போன்றவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    மாவட்டம் முழுவதும் 9 அமர்வுகளில் நடைபெற்ற இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3600 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. திண்டுக்கல்லில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம் தலைமை தாங்கினார். கூடுதல் மாவட்ட நீதிபதி சரவணன், மகளிர் நீதிபதி சரண், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் கருணாநிதி, தலைமை குற்றவியல் நீதிபதி மோகனா மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் விபத்தில் உயிரிழந்த விவசாயி பிச்சைமுத்து குடும்பத்திற்கு ரூ.12லட்சத்து 25 ஆயிரத்திற்கான காசோலையை நீதிபதி சிவகடாட்சம் வழங்கினார். இதேபோல பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

    • கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ரூ.14ஆயிரம் ரொக்கம் மற்றும் மிக்சி, கிரைண்டர், அண்டா உள்ளிட்ட பொருட்களும் கொள்ளைபோயிருந்தன.
    • போலீசார் வழக்குபதிவு செய்து சி.சி.டிவி காமிராக்கள் உள்ளதா என்றும், அதில் கொள்ளையர் உருவம் பதிவாகி உள்ளதா எனவும் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் ஆர்.எம்.டி.சி காலனி போக்குவரத்து நகரை சேர்ந்தவர் சதீஸ்குமார். இவர் கோவையில் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராம்கமலா(41) என்ற மனைவியும், விக்ரமன்(20) என்ற மகனும் உள்ளனர்.

    சதீஸ்குமார் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வருவது வழக்கம். ராம்கமலா சுயஉதவிக்குழு நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இடைவிடாது பெய்த மழையினால் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று ராம்கமலா பார்த்தபோது பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ரூ.14ஆயிரம் ரொக்கம் மற்றும் மிக்சி, கிரைண்டர், அண்டா உள்ளிட்ட பொருட்களும் கொள்ளைபோயிருந்தன.

    சுயஉதவிக்குழு பெண்களிடம் வசூல் செய்த பணத்தை தான் கட்டுவதற்காக வைத்திருந்ததாகவும், அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டதாகவும் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய், மலைச்சாமி, தலைமையிலான போலிசார் வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் சி.சி.டிவி காமிராக்கள் உள்ளதா என்றும், அதில் கொள்ளையர் உருவம் பதிவாகி உள்ளதா எனவும் ஆய்வு செய்தனர்.

    • பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு தொண்டர்களுடன் நின்ற பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலையை பிரதமர் மோடி அழைத்தார்.
    • பிரதமர் மோடியுடன் காரில் இதுவரை தமிழக பா.ஜ.க. தலைவர்கள் யாரும் பயணிக்காத நிலையில் அண்ணாமலை அவருடன் சென்றது கட்சியினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அடுத்த காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவிற்கு பிரதமர் மோடி மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அம்பாத்துரை ரெயில் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து விழா நடைபெறும் பல்நோக்கு அரங்கிற்கு சென்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் மீண்டும் ஹெலிகாப்டரில் பயணிக்க முயன்றபோது மோசமான வானிலை காரணமாக சின்னாளபட்டியில் இருந்து கார் மூலம் மதுரைக்கு செல்ல முயன்றார்.

    அப்போது பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு தொண்டர்களுடன் நின்ற பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலையை அழைத்தார். இதனை சற்றும் எதிர்பாராத அவர் பிரதமர் மோடியின் அருகில் வந்தார். பின்னர் அவரை தனது காரில் அருகில் அமர வைத்து மதுரை வரை அழைத்துச்சென்றார்.

    அப்போது தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து அண்ணாமலையிடம் பிரதமர் மோடி கேட்டறிந்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். பிரதமர் மோடியுடன் காரில் இதுவரை தமிழக பா.ஜ.க. தலைவர்கள் யாரும் பயணிக்காத நிலையில் அண்ணாமலை அவருடன் சென்றது கட்சியினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

    • திண்டுக்கல் அருகே காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது-
    • உண்மை, ஒழுக்கம், சமமான நீதி, மதநல்லிணக்கம், ஏழைகளின் நலன், கிராம முன்னேற்றம் இவை அனைத்தும்தான் நாட்டை ஒன்றுமைப்படுத்தும் என பேசினார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது-

    குஜராத்தில் பிறந்து தேச தந்தையாக வலம் வந்த காந்தியின் பெயரை தாங்கி உள்ளது இந்த பல்கலைக்கழகம். கிராம ப்புற மேம்பாட்டுக்கான அறிவாலயமாக திகழ்கிறது. காந்திக்கும் தமிழகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தனது வாழ்நாளில் 26 முறை தமிழகத்துக்கு வந்துள்ளார்.

    மேலும் தமிழ் மொழியை விரும்பி கற்றவர். தனது பெயரை மோ.க.காந்தி என தமிழில் கையெழுத்திட்டார். திருக்குறளை படிப்பதற்காக தமிழ் கற்க வேண்டும். வட இந்தியர்கள் அனைவரும் ஒரு தென் இந்திய மொழியை குறிப்பாக தமிழை கற்க வேண்டும் என வலியுறுத்தியவர் காந்தி. அவர் பெயர் தாங்கிய பல்கலைக்கழக விழாவில் பிரதமர் மோடியை வரவேற்கிறேன். தமிழகத்தில் மாநில அரசு கட்டுப்பாட்டில் கலை, அறிவியல் பொறியியல், விளையாட்டு, இசை உள்பட 22 பல்கலைக்கழகம் திறம்பட இயங்கி வருகின்றன.

    உயர் கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குகிறது. இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் மாநில அரசு பல்வேறு கல்வி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவை அனைத்து மாநில அரசுகளும் கவனிக்கும் திட்டங்களாக உள்ளன.

    கல்வியை வளர்ச்சி அடைய செய்வது மாநில அரசின் கடமை. எனவே மாநில பள்ளி வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவி மற்றும் ஊக்கம் அளிக்க வேண்டும். மாநில பட்டியலில் இருந்த கல்வி நாட்டின் நெருக்கடி நிலையின்போது பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது.

    அதை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். சமூக சேவை செய்வதே கல்வியின் ஒட்டுமொத்த இலக்கு என்று காந்தியின் கூற்றுக்கேற்ப முற்போக்கு சிந்தனையுடன் அறிவியல் சார்ந்த சமூகமாக தமிழ் சமூகத்தை கட்டமைக்க இளைஞர்களை கேட்டுக்கொள்கிறேன்.

    உண்மை, ஒழுக்கம், சமமான நீதி, மதநல்லிணக்கம், ஏழைகளின் நலன், கிராம முன்னேற்றம் இவை அனைத்தும்தான் நாட்டை ஒன்றுமைப்படுத்தும். காந்தியின் நெறிமுறைகளை கடைபிடிப்பவர்களாக இளையசமுதாயம் மற்றும் மாணவர்கள் விளங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி தங்கப்பதக்கம் பெற்ற முதுகலை, இள ங்கலை மாணவ-மாணவி களுக்கு பட்டங்களையும், இசையமைப்பாளர் இளை யராஜா, மிருதங்கவித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களையும் வழங்கினார்.
    • விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை மந்திரி எல்.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் அண்ணாமலை தலைைமை யில் நடைபெற்றது. துைணவேந்தர் குர்மித்சிங், பதிவாளர் சிவக்குமார் வரவேற்றனர்.

    விழாவில் சிறப்பு விருந்தி னராக பங்கேற்ற பிரதமர் மோடி தங்கப்பதக்கம் பெற்ற முதுகலை, இள ங்கலை மாணவ-மாணவி களுக்கு பட்டங்களையும், இசையமைப்பாளர் இளை யராஜா, மிருதங்கவித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களையும் வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது,

    பட்டம் பெற்ற இளை ஞர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் மனதார பாராட்டுகிறேன். மகாத்மா காந்தியின் பெயரால் உருவாக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை சிறப்பாக வழங்கி வருகிறது. காந்தியின் கொள்கைகள் எந்த கால த்திலும் ஏற்றுக்கொள்ள க்கூடியது.

    மாணவர்கள் இதனை தங்கள் வாழ்நாளில் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். ஒரு காலத்தில் காதி பொருட்கள் புறக்கணி க்கப்பட்டு வந்தன. தற்போது காதி பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் காதி பொருட்களின் விற்பனை 300 சதவீதம் அதிகரித்து ள்ளது.

    மத்திய காதித்துறை கடந்த ஆண்டு ரூ.1 லட்சம் கோடி வருமானம் ஈட்டியு ள்ளது. காதி பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பூமிக்கு தீங்கு விளை விக்காதது. கிராமமும், நகரமும் வெவ்வேறாக இருப்பது தவறுஇல்லை. ஆனால் நாம் ஒன்றாக இருக்க வேண்டும். பல நாட்களாக நகர்ப்புற, கிராமப்புற வசதிகளில் பெரியஅளவில் வேறுபாடு இருந்தது.

    இப்போது கிராமங்கள் நகர்ப்புற வசதியை எட்டியு ள்ளன. கிராமங்களில் குடிநீர், கழிப்பறை கட்டுவது உள்ளிட்ட பல்வேறு வசதி கள் செய்யப்பட்டு வரு கின்றன. நகரங்களை விட கிராமங்களில் இணை யதள சேவை பயன்பாடு அதிகரி த்துள்ளது. இயற்கை மற்றும் எளிமையான வாழ்க்கையில் மகாத்மா காந்தியின் கொள்கைகளை கேட்கலாம். ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள் கலக்காத இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நம்நாட்டை சேர்ந்த பயிர்வகைகள் வளர்க்கப்பட வேண்டும். பல்வேறு பயிர்களை விளைவித்தால் நீரும், நிலமும் பாதுகாக்கப்படும். சூரிய மின்சக்தியை பயன்படுத்தவேண்டும். கிராமப்புறங்களின் இந்த சக்தியின் பயன்பாடு அதிகரித்தால் இந்தியா எரிசக்தி துறையில் தற்சார்பு நிலையை அடையும்.

    தமிழகம் தேசிய உணர்வுள்ள மாநிலமாகும். இங்குதான் விவேகானந்தர் ஒரு கதாநாயகர் போல வர வேற்கப்பட்டார். ராணுவ த்தளபதி விவின்ராவத் விபத்தில் உயிரிழந்த போது அவருக்கு தமிழகமே வீரவணக்கம் செலுத்தியது உணர்வுப்பூர்வமாக இருந்தது. காசிக்கும், தமிழகத்திற்கும் உள்ள உறவை வலுப்படுத்தும் வகையில் காசி தமிழ்ச்சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இதன்மூலம் தமிழ்மொ ழியை காசி மக்கள் கெர்ணடாட விரும்புகின்ற னர். பட்டம் பெற்ற இளைஞர்கள் ஒற்றுமையை வளர்க்க பாடுபட வேண்டும். ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய வேலுநாச்சி யாரை பிரதிபலிப்பவர்க ளாக இங்குள்ள மாணவி களை பார்க்கிறேன்.கொரோனாவால் உலகம் மிகப்பெரிய சிக்கலை சந்தித்த போது அதற்கு எதிராக இந்தியா துணிவுடன் போராடி திறமையை நிரூபித்தது.

    பெரிய பொறுப்புகளை அடைவதற்கு ஆர்வம் மட்டும் இல்லாமல் அதற்கான ஆற்றலையும் பெற வேண்டும். சுதந்திர தினஅமுதப்பெருவிழாவை கொண்டாடும் இந்த நேரத்தில் இந்தியாவை இளைஞர்கள் தலைமை யேற்று நடத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை மந்திரி எல்.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று காலை முதல் இடைவிடாது சாரல் மழை பெய்தபடி இருந்தது.
    • கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று காலை முதல் இடைவிடாது சாரல் மழை பெய்தபடி இருந்தது. ஏற்கனவே மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான அணைகள் நிரம்பி முழுகொள்ளளவை எட்டிவிட்டது. இதனால் அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.

    தற்போது மீண்டும் கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழைநீர் பெருக்கெடுத்து செல்வதால் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி வருகிறது.

    இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். நேற்று ஒரேநாளில் மாவட்டம் முழுவதும் 646.9 மி.மீ மழையளவு பதிவானது. திண்டுக்கல் 92.4, கொடைக்கானல் ேராஸ்கார்டன் 44.1, பழனி 62, சத்திரபட்டி 52.4, நத்தம் 26, நிலக்கோட்டை 34, வேடசந்தூர் 111, காமாட்சிபுரம் 67, பிரையண்ட்பூங்கா 46.8, மி.மீ மழையளவு பதிவானது.

    கனமழை காரணமாக நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மடடும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. கல்லூரிகள் வழக்கம்போல் செயல்பட்டதால் மாலையில் மழையில் நனைந்தபடியே மாணவ-மாணவிகள் வீடுகளுக்கு திரும்பினர். இன்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் விசாகன் உத்தரவிட்டுள்ளார்.


    • உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என்றார் முதல்வர் ஸ்டாலின்.
    • பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் பொன்னியின் செல்வன் நூலின் ஆங்கில பதிப்பை வழங்கினார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகிலுள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமோனோர் பங்கேற்றனர்.

    முன்னதாக, பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 பாகங்களைக் கொண்ட பொன்னியின் செல்வன் நூலின் ஆங்கில பதிப்பை வழங்கி வரவேற்றார்.

    ×