என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் மாவட்டத்தில் 646 மி.மீ மழை பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று 2-வது நாளாக விடுமுறை
    X

    கோப்பு படம்

    திண்டுக்கல் மாவட்டத்தில் 646 மி.மீ மழை பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று 2-வது நாளாக விடுமுறை

    • திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று காலை முதல் இடைவிடாது சாரல் மழை பெய்தபடி இருந்தது.
    • கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று காலை முதல் இடைவிடாது சாரல் மழை பெய்தபடி இருந்தது. ஏற்கனவே மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான அணைகள் நிரம்பி முழுகொள்ளளவை எட்டிவிட்டது. இதனால் அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.

    தற்போது மீண்டும் கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழைநீர் பெருக்கெடுத்து செல்வதால் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி வருகிறது.

    இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். நேற்று ஒரேநாளில் மாவட்டம் முழுவதும் 646.9 மி.மீ மழையளவு பதிவானது. திண்டுக்கல் 92.4, கொடைக்கானல் ேராஸ்கார்டன் 44.1, பழனி 62, சத்திரபட்டி 52.4, நத்தம் 26, நிலக்கோட்டை 34, வேடசந்தூர் 111, காமாட்சிபுரம் 67, பிரையண்ட்பூங்கா 46.8, மி.மீ மழையளவு பதிவானது.

    கனமழை காரணமாக நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மடடும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. கல்லூரிகள் வழக்கம்போல் செயல்பட்டதால் மாலையில் மழையில் நனைந்தபடியே மாணவ-மாணவிகள் வீடுகளுக்கு திரும்பினர். இன்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் விசாகன் உத்தரவிட்டுள்ளார்.


    Next Story
    ×