என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    தொடர்ந்து கூட்டுறவு உறுதி மொழி ஏற்க்கும் நிகழ்ச்சி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கியில் இன்று அனைத்திந்திய 69-வது கூட்டுறவு வார தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை வகித்தார். கூட்டுறவு கொடியை செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஏற்றி வைத்து பேசினார்.

    அதனைத் தொடர்ந்து கூட்டுறவு உறுதி மொழி ஏற்க்கும் நிகழ்ச்சி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேலுச்சாமி எம்.பி., காந்திராஜன் எம்.எல்.ஏ., மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய பெருந்தலைவர் ராஜா, பொதுமேலாளர் விநாயகமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • புல்வெட்டிக்குளம் பகுதியில் பைக் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் செல்வராஜ் படுகாயம் அடைந்தார்.
    • திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள பாளைய ங்கோட்டையை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது61). இவர் மின்வாரிய அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    தனது மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டையில் இருந்து செம்பட்டிக்கு வந்துகொண்டிருந்தார். புல்வெட்டிக்குளம் பகுதியில் பைக் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் செல்வராஜ் படுகாயம் அடைந்தார்.

    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்தார். செம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் நாரா யணயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்த நிலையில் கடந்த 1 வாரமாக ெபய்த கன மழையால் மேலும் சேதமடைந்தது.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பாலகிருஷ்ணாபுரத்தில் வாழைக்கன்று நடும் போராட்டம் நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் கனமழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் வாழைக்கன்று நடும் போராட்டம் நடைபெற்றது.

    திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்த நிலையில் கடந்த 1 வாரமாக ெபய்த கன மழையால் மேலும் சேதமடைந்தது.

    எனவே மழை மற்றும் பாலப்பணிகளால் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வே ண்டும். பாலகிருஷ்ணாபுரம் ரெயில்வே மேம்பால ப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அனுமந்தநகர் - பாலகிருஷ்ணாபுரம் இணைப்புச்சாலையை செப்பணிட வேண்டும். கட்டி முடித்த சுரங்கப்பாதைகளை உடனே திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பாலகிருஷ்ணாபுரத்தில் வாழைக்கன்று நடும் போராட்டம் நடைபெற்றது.

    முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமை வகித்தார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் அஜய்கோஸ், சரத்குமார், ஜீவானந்தம், செல்வநாயகம், ஜீவானந்தினி, ஜோசப், செல்வகணேசன் உள்பட ஏராளமானோர் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் இதில் கலந்து கொண்டனர்.

    • நாளை மறுநாள் 16ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • தாடிக்கொம்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் 16ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை தாடிக்கொம்பு, கிரியம்பட்டி, சத்திரப்பட்டி, இன்னாசிபுரம், பிரகரை, உண்டார்பட்டி, தவசிகுளம், திருகம்பட்டி, மறவபட்டி, காப்பிளியபட்டி புதூர், அழக்குவார்பட்டி, கள்ளிபட்டி, அகரம், சுக்காம்பட்டி, உலகம்பட்டி, சில்வார்பட்டி, கொண்டம நாயக்கன்பட்டி, மல்லணம்பட்டி, கோட்டூர் ஆவராம்பட்டி, அழகுபட்டி, கெச்சாணிபட்டி, விட்டல் நாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • நீர்வரத்து அதிகரித்ததால் நிலக்கோட்டை கொங்கர்குளம் கண்மாய் நிரம்பி வழிகிறது.
    • சிறுவர்கள் மற்றும் பெரியோர்கள் உள்பட அனைவரும் உற்சாகமாக மீன் பிடித்து வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான குளம், கண்மாய்கள் நிரம்பிவிட்டன. நீர்வரத்து அதிகரித்ததால் நிலக்கோட்டை கொங்கர்குளம் கண்மாய் நிரம்பி வழிகிறது.

    இந்த கண்மாயில் ஏற்கனவே மீன்கள் அதிக அளவு இருந்தது. தற்போது மேலும் மீன்கள் வந்துள்ளன. இதனால் நிலக்கோட்டை, காமாட்சிபுரம், புதுப்பட்டி, துரைச்சாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தூண்டில் மூலமாக மீனைப் பிடித்து செல்கின்றனர்.

    பலவகையான மற்றும் அதிக எடைகொண்ட மீன்கள் சிக்குவதால் சிறுவர்கள் மற்றும் பெரியோர்கள் உள்பட அனைவரும் உற்சாகமாக மீன் பிடித்து வருகின்றனர்.

    • தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியத்துறை, வருவாய்த்துறையினர் விரைந்து சென்று மரத்ைத அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சீரமைத்தனர்.
    • அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. மேலும் நாயுடுபுரம் சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியத்துறை, வருவாய்த்துறையினர் விரைந்து சென்று மரத்ைத அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சீரமைத்தனர்.

    மேலும் மண் சரிவு ஏற்பட்ட இடங்கள், மரங்கள் முறிந்து கிடந்த பகுதியில் நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, துணை த்தலைவர் மாயகண்ணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பணிகளை விரைந்து முடிக்க ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

    இது குறித்து செந்தில்குமார் எம்.எல்.ஏ. கூறுகையில், கொடைக்கா னலில் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர ஏரி முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆற்று பகுதியை கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது. மேலும் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அரசு அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

    • திண்டுக்கல்லில் கனமழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் வாழைக்கன்று நடும் போராட்டம் நடைபெற்றது.
    • பாலகிருஷ்ணாபுரம் ரெயில்வே மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அனுமந்தநகர்-பாலகிருஷ்ணாபுரம் இணைப்புச்சாலையை செப்பணிட வேண்டும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்த நிலையில் கடந்த 1 வாரமாக பெய்த கனமழையால் மேலும் சேதமடைந்தது.

    எனவே மழை மற்றும் பாலப்பணிகளால் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். பாலகிருஷ்ணாபுரம் ரெயில்வே மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அனுமந்தநகர்-பாலகிருஷ்ணாபுரம் இணைப்புச்சாலையை செப்பணிட வேண்டும். கட்டி முடித்த சுரங்கப்பாதைகளை உடனே திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பாலகிருஷ்ணாபுரத்தில் வாழைக்கன்று நடும் போராட்டம் நடைபெற்றது.

    முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமை வகித்தார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் அஜய்கோஸ், சரத்குமார், ஜீவானந்தம், செல்வநாயகம், ஜீவானந்தினி, ஜோசப், செல்வகணேசன் உள்பட ஏராளமானோர் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் இதில் கலந்து கொண்டனர்.

    • பள்ளியில் கட்டிட வசதி இல்லாததால் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், கலெக்டருக்கும் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
    • பள்ளியில் கட்டிட பணி தொடங்கப்படாமல் உள்ளது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கொம்பேறிப்பட்டி மலை கிராமப் பகுதியான செம்மணாம் பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. இங்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை பல்வேறு கிராமங்களில் இருந்து குழந்தைகள் கல்வி பயில வருகின்றனர்.

    இப்பள்ளியில் சுமார் 70 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு மற்ற தனியார் பள்ளிகள் எதுவும் இல்லாததாலும், பெரும்பாலும் விவசாய கூலித் தொழிலாளர்களே உள்ளதாலும் தங்கள் குழந்தைகளை இந்த பள்ளிக்கே ஆரம்ப கல்விக்காக அனுப்பி வந்தனர்.

    ஆனால் பள்ளியில் கட்டிட வசதி இல்லாததால் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், கலெக்டருக்கும் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்காலிக ஏற்பாடாக அங்குள்ள கலையரங்கத்தில் பாடம் சொல்லிக் கொடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக அதே கலையரங்கில் கடந்த சில மாதங்களாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

    ஆனால் பள்ளியில் கட்டிட பணி தொடங்கப்படாமல் உள்ளது. தற்போது கன மழை பெய்து வரும் சமயங்களில் கூட மாணவர்கள் வகுப்பறை வசதியின்றி திறந்தவெளி கலையரங்கில் கல்வி பயின்று வருகின்றனர். இதனால் அந்த குழந்தைகளுக்கு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    சுகாதாரமான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி இல்லாமல் உள்ளது. எனவே மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் கலெக்டர் இப்பிரச்சினையில் தலையிட்டு பள்ளி கட்டிடத்தை விரைந்து சீரமைக்கவும் மாணவர்களுக்கு பாதுகாப்பான இடத்தில் கல்வி பயில நடவடிக்கை எடுக்கவும் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • போதை வாலிபர்கள் சிலர் அவ்வழியே வந்த வாகனங்களை மறித்து தகராறில் ஈடுபட்டனர்.
    • போலீசார் இரவு நேர ரோந்து பணியை தீவிரபடுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    பழனி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோமங்கலம்புதூரைச் சேர்ந்தவர் பாலா. இவர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் தன் மனைவி கல்பனாவுடன் ஒரு காரில் பழனியில் ஒரு விசேஷத்துக்கு வந்தார்.

    நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நேற்று இரவு காரில் பொள்ளாச்சி நோக்கி புறப்பட்டுக் கொண்டு இருந்தார். அப்போது காமராஜ் நகர் பகுதியில் போதை வாலிபர்கள் சிலர் அவ்வழியே வந்த வாகனங்களை மறித்து தகராறில் ஈடுபட்டனர்.

    மேலும் கத்தியை காட்டியும் மிரட்டிக் கொண்டு இருந்தனர். அப்போது காரில் இருந்து இறங்கிய போலீஸ்காரர் பாலா அவர்களை எச்சரித்தார். அப்போதும் அந்த வாலிபர்கள் கேட்காமல் அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினர்.

    இதனால் காருக்குள் இருந்து கல்பனா தேவி இறங்கி சத்தம் போட்டார். ஆத்திரமடைந்த போதை வாலிபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்தனர்.

    இதில் சங்கிலி அறுந்து விழுந்தது. இதனையடுத்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் கல்பனா தேவி புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரகளையில் ஈடுபட்டு நகை பறிக்க முயன்ற காமராஜ் நகரைச் சேர்ந்த மாரிமுத்து (வயது 20), கார்த்தி (22), சாலமன் ராஜா (21) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    பழனி புறநகர் பகுதியில் குடிபோதையில் இரவு நேரங்களில் வாலிபர்கள் ரகளையில் ஈடுபடுவதும், வழிப்பறி சம்பவத்தில் ஈடுபடுவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. எனவே போலீசார் இரவு நேர ரோந்து பணியை தீவிரபடுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் ஆத்தூர் காமராஜர் அணைக்கு செல்கிறது.
    • இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அருவிக்கு வந்து ஆனந்தமாக குளித்து செல்வார்கள். ஆனால் தற்போது வனத்துறை தடை விதித்துள்ளதால் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் அழகை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள பெரும்பாறை, கானல்காடு, தடியன்குடிசை, பெரியூர், குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள மலை கிராமங்களில் கடந்த 1 வாரமாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

    இதனால் மலை பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஊற்றுகள் ஏற்பட்டு அங்கு சிறு அருவிகளாக தோன்றி உள்ளது. இதனால் தண்ணீர் அதிக அளவு பெருக்கெடுத்து செல்கிறது.

    பெரும்பாறை அருகே இயற்கை எழில் மிகுந்த புல்லாவெளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் ஆத்தூர் காமராஜர் அணைக்கு செல்கிறது.

    கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் அதிக அளவு ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. ஏற்கனவே ஆத்தூர் காமராஜர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி விட்ட நிலையில் தற்போது அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குடகானறு அணைக்கு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    வழக்கமாக புல்லாவெளி அருவியில் தண்ணீர் அதிகரிக்கும் சமயங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். குறிப்பாக இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அருவிக்கு வந்து ஆனந்தமாக குளித்து செல்வார்கள். ஆனால் தற்போது வனத்துறை தடை விதித்துள்ளதால் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் அழகை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    • பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கம் மற்றும் வழி நீட்டிப்பு செய்யப்பட்டு பஸ்கள் இயக்கம் என 10 பேருந்து சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
    • கூட்டுறவுத்து றை அமைச்சர் இ.பெரியசாமி பஸ் சேவையை தொடங்கி வைத்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்கம் தொடக்க விழா, வழித்தடப் பஸ்கள் நீட்டிப்பு மற்றும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கான கூடுதல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா ரெட்டியார்சத்திரத்தில் மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. வேலுச்சாமி எம்.பி முன்னிலை வகித்தார்.

    விழாவில் கூட்டுறவுத்து றை அமைச்சர் இ.பெரியசாமி பஸ் சேவையை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 25 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கம் மற்றும் வழி நீட்டிப்பு செய்யப்பட்டு பஸ்கள் இயக்கம் என 10 பேருந்து சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, புதிய வழித்தடப் பஸ்கள் விவரம், திண்டுக்கல்-– ஒட்டன்சத்திரம் (வழி -ரெட்டியார்சத்திரம், எல்ல ப்பட்டி, கட்டசின்னன்பட்டி, காமாட்சிபுரம், நரிப்பட்டி, பலகனூத்து, திருமலைராயபுரம், மூலச்சத்திரம்), திண்டுக்கல்-கன்னிவாடி(வழி-அம்மாபட்டி, மேலப்பட்டிபிரிவு, நடுப்பட்டி, மாங்கரை, புதுப்பட்டி), திண்டுக்கல்-செட்டியப்பட்டி (வழி-பேம்பூர், தோமையார்புரம் பைபாஸ்), செம்பட்டி- – வத்தலகுண்டு(வழி-சித்தையன்கோட்டை, சித்த ரேவு, அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி), ஒட்டன்சத்திரம்-திண்டுக்கல் (வழி-மூலச்சத்திரம், திருமலை ராயபுரம், பலகனூத்து, நரிப்பட்டி, காமாட்சிபுரம், கட்டசின்னன்பட்டி, எல்லபட்டி, ரெட்டியார்சத்திரம்) ஆகிய புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

    வழித்தடம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள பேருந்து வழித்தடங்கள் விவரம், வத்தலகுண்டு –செம்பட்டி(வழி-பட்டிவீரன்பட்டி, அய்யம்பா ளையம், சித்தரேவு, சித்தையன்கோட்டை, ஆத்தூர்), திண்டுக்கல் – எஸ்.காமாட்சிபுரம்(வழி-வாணிவிலாஸ், கொட்டப்பட்டி), வேடசந்தூர் – திண்டுக்கல் (வழி-சீத்தமரம் நால்ரோடு, கரட்டுப்பட்டி, ரெட்டியார்சத்திரம், முத்தனம்பட்டி, பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி) ஆகிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கம் நீட்டிப்பு இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

    மேலும், கன்னிவாடி – திண்டுக்கல் (தொடுதல் வழி-திப்பம்பட்டி, கசவனம்பட்டி, வெல்லம்பட்டி, கோனூர், குஞ்சனம்பட்டி, புளியராஜக்காப்பட்டி, குட்டத்துப்பட்டி) மற்றும் பூத்தாம்பட்டி-திண்டுக்கல் (தொடுதல் வழி-தாடிக்கொம்பு, மாவட்ட நீதிமன்றம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்) ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

    ஆத்தூர்் சட்டமன்ற தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் ஆத்தூர் செயல்பட்டு வருகிறது. தற்போது, ரெட்டியார்சத்திரத்தில் கூடுதலாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பா ன மனுக்களை இந்த அலு வலகத்தில் அளிக்கலாம். அந்த மனுக்களை அரசு அலுவலர்கள் பெற்று சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு அனுப்பி தகுந்த நடவடிக்கை மேற்கொ ள்வார்கள். பொது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    இந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு நானும் அடிக்கடி வந்து, பொதுமக்களின் கோரிக்கைகளை நிறை வேற்ற உறுதிதுணையாக இருப்பேன் என பேசினார்.

    • முத்தனம்பட்டி புதூர் இந்து உதவிபெறும் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணி சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • இந்த சிறப்பு முகாம் இன்று,26 மற்றும் 27-ந்ஆதேதி ஆகிய நாட்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளன.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே , முத்தனம்பட்டி புதூர் இந்து உதவிபெறும் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணி சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விசாகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவித்ததாவது,

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 1.1.2023-ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணி 9-ந்தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் 1.1.2023-ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால், தற்போது புதியதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-ம், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விபரம் சேர்ப்பதற்கு படிவம் 6பி-ம்,

    பெயர் நீக்கம் செய்ய விரும்புபவர்கள் படிவம் 7-ம், வாக்காளர் பட்டியலில் உள்ள எழுத்துப் பிழைகள், முகவரி மாற்றம் செய்ய விரும்புவோர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகல் கேட்டு விரும்புபவர்கள் படிவம் 8-ம் பூர்த்தி செய்து 8.12.2022 வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்கள் அல்லது அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் வழங்கலாம்.

    அதற்காக வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சிறப்பு முகாம் இன்று,26 மற்றும் 27-ந்ஆதேதி ஆகிய நாட்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளன. வாக்காளர்கள் விண்ணப்பத்தினை தங்களது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நேரில் வழங்கலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

    ×