என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • கடந்த சில நாட்களாக பெய்த கனமழை மற்றும் தற்போது நிலவும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறையத் தொடங்கியுள்ளது.
    • பூக்களின் விலை குறைந்துள்ளதாலும் போதுமான வரத்து இல்லாததாலும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட் மிகப்பெரிய வியாபார சந்தையாக உள்ளது. பல்வேறு கிராமங்களில் விளையும் பூக்கள் இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக பெய்த கனமழை மற்றும் தற்போது நிலவும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறையத் தொடங்கியுள்ளது. இதனால் விலை சற்று அதிகரித்துள்ளது. 1 கிலோ மல்லிகை ரூ.700க்கு விற்பனையாகிறது.

    பிச்சிப்பூ ரூ.250, கனகாம்பரம் ரூ.300, முல்லைப்பூ ரூ.300, ஜாதிப்பூ ரூ.250, அரளி ரூ.250, சம்பங்கி ரூ.20, காக்கரட்டான் ரூ.200, செவ்வந்தி ரூ.40, செண்டுமல்லி ரூ.20, பட்டன் ரோஸ் ரூ.100, பன்னீர்ரோஸ் ரூ.80, சாதா ரோஸ் ரூ.40, கோழிக்கொண்டை ரூ.10, துளசி ரூ.15 என்ற விலையில் விற்பனையாகிறது.

    நாளை கார்த்திகை மாதப்பிறப்பு மற்றும் முகூர்த்த நாட்கள் வர உள்ள நிலையில் பூக்களின் விலை குறைந்துள்ளதாலும் போதுமான வரத்து இல்லாததாலும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    • குடிபோதையில் பஸ்சை மறித்து ரகளையில் ஈடுபட்டதை தட்டிகேட்டதால் டிரைவரை வாலிபர் சரமாரியாக தாக்கினார்.
    • போலீசார் போதை வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடைரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இருந்து காமலாபுரம், சக்கையநாயக்கனூர், அழகம்பட்டி, சின்னாளபட்டி வழியாக திண்டுக்கல்லுக்கு அரசு டவுன்பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை அந்த பஸ் கொடைரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தது. டிரைவர் ஆரோக்கியதாஸ்(53) பஸ்சை ஓட்டிவந்தார்.

    அழகம்பட்டி, சக்கையநாயக்கனூர் இடையே திடீரென அதேபகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(23) என்பவர் குடிபோதையில் பஸ்சை மறித்து ரகளையில் ஈடுபட்டார். இதனை ஆரோக்கியதாஸ் தட்டிகேட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து பஸ்சுக்குள் புகுந்த பாலசுப்பிரமணியன் பயணிகளையும் தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    ஒரு கட்டத்தில் பாலசுப்பிரமணியன் டிரைவர் ஆேராக்கியதாசுடன் சாலையில் கட்டிபுரண்டு சண்டைபோட்டார். மேலும் அவரது சட்டையையும் கிழித்துள்ளார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவர் பாலசுப்பிரமணியன் ரகளை செய்ததை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர், விஜயபாண்டியன் ஆகியோர் விரைந்து சென்று பாலசுப்பிரமணியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொடைக்கானல் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பாறைப்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • முகாமில் 10 மாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் ஊசி போடப்பட்டது. சினை பிடிக்காத மாடுகளுக்கு தாது உப்பு கலவை வழங்கப்பட்டது

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பாறைப்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. கால்நடை உதவி இயக்குனர் பிரபு தலைமை தாங்கினார். அட்டுவம்பட்டி கால்நடை மருந்தக உதவி டாக்டர் அபிநயா தலைமையிலான மருத்துவக் குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

    குறிப்பாக கோழி கழிச்சல் தடுப்பூசி, குடற்புழு நீக்கம் மருந்து வழங்கப்பட்டது. முகாமில் 10 மாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் ஊசி போடப்பட்டது. சினை பிடிக்காத மாடுகளுக்கு தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. மேலும் சிறந்த முறையில் கால்நடைகளை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசு பொருட்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    இந்த முகாமில் கால்நடை ஆய்வாளர்கள் சுரேஷ் பாபு, பத்மாவதி மற்றும் செயற்கை முறை கருவூட்டுனர் பழனிச்சாமி மற்றும் ஸ்ரீனிவாசா சேவைகள் அறக்கட்டளையின் நிர்வாகிகள் கள அலுவலர் விஜயகுமார், பொறியாளர் உதயகுமார், ராஜேஷ் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பாறைப்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் கால்நடைகளை அழைத்து வந்தனர்.

    • கொடைக்கானலில் ஜே.சி.பி மற்றும் கனரக வாகனங்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
    • அதிகாரிகளை மிரட்டியவருக்கு 5 ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் ஜே.சி.பி மற்றும் கனரக வாகனங்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. இந்நிலையில் மேல்மலை கிராமமான கூக்கால் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் அரசு வருவாய் நிலத்தில் அனுமதியின்றி ஜே.சி.பி வாகனம் இயக்கப்பட்டது.

    இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கேட்டபோது வாகனத்தின் டிரைவர் அலட்சியமாக பதில் கூறினார். மேலும் வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியருக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். இதனைதொடர்ந்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு கொடைக்கானல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    அதிகாரிகளை மிரட்டிய சுரேஷ் என்பவருக்கு 5 ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார். ஜே.சி.பி டிரைவருக்கு உடந்தையாக இருந்த அன்பழகன், கற்பகநாதனுக்கும் ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • கரூர் பஸ் நிலையத்தில் இருந்த 4 மாணவிகளையும் திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்திக் மற்றும் அனைத்து மகளிர் போலீசார் மீட்டு வந்தனர்.
    • சமூக நலத்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு 4 மாணவிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள மகளிர் பள்ளியில் செல்லாண்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 2 மாணவிகள், நந்தவனப்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவிகள் என 4 பேரும் 8ம் வகுப்பு படித்து வந்தனர். நெருங்கிய தோழிகளான இவர்கள் 4 பேரும் நேற்று காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்தனர்.

    ஆனால் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவர்களது பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து விசாரித்தனர். ஆனால் அவர்கள் 4 பேரும் நேற்று பள்ளிக்கே வரவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த வகுப்பு மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.

    ஆனால் அவர்களும் தங்களுக்கு தெரியாது என தெரிவித்து விட்டனர். இரவு வரை வீடு திரும்பாததால் அவர்கள் கடத்தப்பட்டார்களோ என்ற அச்சத்தில் மாணவிகளின் பெற்றோர்கள் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் திரண்டு வந்து புகார் அளித்தனர்.

    ஆனால் மாணவிகள் 4 பேரும் கரூரில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த மாவட்ட போலீஸ் எஸ்.பி. மூலம் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கரூர் பஸ் நிலையத்தில் இருந்த 4 மாணவிகளையும் திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்திக் மற்றும் அனைத்து மகளிர் போலீசார் மீட்டு வந்தனர்.

    இதுகுறித்து மாணவிகளிடம் விசாரித்ததில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தாங்கள் எங்காவது வெளியே செல்லலாம் என முடிவெடுத்ததாகவும் அதன்படி 4 பேரும் பழனி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததாகவும் கூறினர். அதன் பிறகு திண்டுக்கல் செல்வதற்காக பழனி பஸ் நிலையத்திற்கு வந்தபோது திண்டுக்கல்லுக்கு பஸ் இல்லாததால் அங்கிருந்த கரூர் பஸ்சில் ஏறியதாக கூறினர்.

    பின்னர் வழி தெரியாமல் தவித்த தங்களுக்கு அங்கிருந்த போலீசார் உதவி செய்து அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு 4 மாணவிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பள்ளி மாணவிகள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறும்போது சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து அவர்கள் எடுத்து கூறினர்.

    இனி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது எனவும் அறிவுரைகள் கூறி அவர்களை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இதனால் மாணவிகளின் பெற்றோர்களும் நிம்மதியடைந்தனர்.

    • திண்டுக்கல்லில் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் சேரக்கூடிய குப்பைகளில் பாதியளவு பிளாஸ்டிக் குப்பைகளே ஆகும்.
    • அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் பிளாஸ்டிக் பயன்பாடு திண்டுக்கல்லில் அதிகரித்து வருகிறது.

    குள்ளனம்பட்டி:

    தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் பிளாஸ்டிக்கால் ஆன பைகளை தடை செய்து அரசு ஆணை வெளியிட்டது. ஆனால் திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை உபயோகத்தை தவிர்க்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    திண்டுக்கல்லில் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் சேரக்கூடிய குப்பைகளில் பாதியளவு பிளாஸ்டிக் குப்பைகளே ஆகும்.எனவே சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் நிர்வாகம்,கடைகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அதிகாரிகள் பெயருக்காக ஆய்வு செய்து வருகின்றனர். அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் பிளாஸ்டிக் பயன்பாடு திண்டுக்கல்லில் அதிகரித்து வருகிறது.

    தற்சமயம் பருவமழை தொடங்கியுள்ளதால்மக்கள் பயன்படுத்தும் அனைத்து பிளாஸ்டிக்குகளும், கழிவுநீர் வெளியேறும் வாய்க்காலில் அடைத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் குப்பைகளில் சேரக்கூடிய பொருட்களில் கேரி பேக்குகளில் இருக்கும் உணவுப்பொருட்களை கால்நடைகள் உண்பதால் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகிறது.

    இதற்கு முழு காரணம் துறை சார்ந்த அரசு அதிகாரிகளே என்ற குற்றச்சாட்டை சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர். பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்காமல் அலட்சியப்படுத்தும் அதிகாரிகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை செல வாகும் என்பதால் பெரும்பா லான விவசாயிகள் கொடி த்தக்காளி சாகுபடி செய்ய தயக்கம் காட்டுகின்றனர்
    • விளைச்சல் அதிகரித்து விலைகுறையும் சமயங்களில் அதனை பதப்படுத்தி வைக்க குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், எரியோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் தக்காளியை பயிரிட்டு வருகின்றனர்.

    பலவகை தக்காளி விதைகளை நடவு செய்து தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உற்பத்தி திறனை அதிகரித்து வருகின்றனர். 3 முதல் 6 மாதங்கள் வரை தக்காளி அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஒரு நாற்று ரூ.1 முதல் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு பந்தல் அமைத்து, களை எடுத்து கொடிபோல் படரச்செய்து பராமரித்து வருகின்றனர்.

    இதற்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை செல வாகும் என்பதால் பெரும்பா லான விவசாயிகள் கொடி த்தக்காளி சாகுபடி செய்ய தயக்கம் காட்டுகின்றனர். ஏனெனில் வருடத்தின் பெரும்பாலான மாதங்களில் தக்காளிக்கு போதிய விலை கிடைப்பதில்லை.

    இதனால் தக்காளியை பறிக்காமலும், பறித்த பழங்களை குப்பை யில் கொட்டிச்செல்லும் நிலையும் உள்ளது. பல ஆண்டுகளாக தக்காளியை பதப்படுத்தி பல்வேறு பொருட்கள் செய்யும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கை யாக வைக்கப்பட்டும் இதுவரை நிறைவேற்ற ப்படாமல் உள்ளது.

    இதனால் இப்பகுதி விவ சாயிகளுக்கு கொடிப்பந்தல் தக்காளி நடவு முறை, விளைச்சல் அதிகரிப்பு குறித்து வேளாண் அதிகாரி கள் உரிய ஆலோசனை வழங்குவதோடு மானியத் ெதாகையும் வழங்க வே ண்டும். மேலும் விளைச்சல் அதிகரித்து விலைகுறையும் சமயங்களில் அதனை பதப்படுத்தி வைக்க குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாயமான 4 பள்ளி மாணவிகளை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.
    • கரூரில் இருந்த மாணவிகளை போலீசார் மீட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே உள்ள மகளிர் பள்ளியில் செல்லாண்டி யம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 2 மாணவிகள், நந்தவனப்பட்டி, சென்ன மநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவிகள் என 4 பேரும் 8ம் வகுப்பு படித்து வந்தனர். நெருங்கிய தோழிகளான இவர்கள் 4 பேரும் நேற்று காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்தனர்.

    ஆனால் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனை யடுத்து அவர்களது பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து விசாரித்தனர். ஆனால் அவர்கள் 4 பேரும் நேற்று பள்ளிக்கே வர வில்லை என ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதனை யடுத்து அந்த வகுப்பு மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.

    ஆனால் அவர்களும் தங்களுக்கு தெரியாது என தெரிவித்து விட்டனர். இரவு வரை வீடு திரும்பாததால் அவர்கள் கடத்தப்பட்டா ர்களோ என்ற அச்சத்தில் மாணவிகளின் பெற்றோ ர்கள் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் திரண்டு வந்து புகார் அளித்தனர்.

    ஆனால் மாணவிகள் 4 பேரும் கரூரில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த மாவட்ட போலீஸ் எஸ்.பி. மூலம் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் தெரி விக்கப்பட்டது. கரூர் பஸ்நிலையத்தில் இருந்த 4 மாணவிகளையும் திண்டு க்கல் நகர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்திக் மற்றும் அனைத்து மகளிர் போலீசார் மீட்டு வந்தனர்.

    இது குறித்து மாணவி களிடம் விசாரித்ததில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தாங்கள் எங்காவது வெளியே செல்லலாம் என முடிவெடுத்ததாகவும் அதன்படி 4 பேரும் பழனி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததாகவும் கூறினர். அதன் பிறகு திண்டுக்கல் செல்வதற்காக பழனி பஸ் நிலையத்திற்கு வந்த போது திண்டுக்க ல்லுக்கு பஸ் இல்லாததால் அங்கிருந்த கரூர் பஸ்சில் ஏறியதாக கூறினர்.

    பின்னர் வழி தெரியாமல் தவித்த தங்களுக்கு அங்கிருந்த போலீசார் உதவி செய்து அனுப்பி வைத்ததாக வும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு 4 மாணவிகளுக்கும் ஆலோ சனைகள் வழங்கப்பட்டது. பள்ளி மாணவிகள் பெற்றோர் மற்றும் ஆசிரி யர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறும் போது சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து அவர்கள் எடுத்து கூறினர்.

    இனி இது போன்ற சம்பவங்களில் ஈடுபட க்கூடாது எனவும் அறிவுரை கள் கூறி அவர்களை பெற்றோர்களிடம் ஒப்படை த்தனர். இதனால் மாணவி களின் பெற்றோர்களும் நிம்மதியடைந்தனர்.

    • திண்டுக்கல் - திருச்சி நான்கு வழிச்சாலை இ.பி காலனி பிரிவு அருகே சென்ற போது அந்த வழியாக குறுக்கே மாடுகள் வந்தது.
    • திடீரென மூர்த்தி பிரேக் போட்டதால் ஆட்டோ நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அடுத்த நந்தவனப்பட்டி கருவூல காலனியைச் சேர்ந்தவர் மூர்த்தி (53). ஆட்டோ டிரைவர். இவர் இன்று காலை வழக்கம் போல் பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சென்றார். திண்டுக்கல் - திருச்சி நான்கு வழிச்சாலை இ.பி காலனி பிரிவு அருகே சென்ற போது அந்த வழியாக குறுக்கே மாடுகள் வந்தது.

    திடீரென மூர்த்தி பிரேக் போட்டதால் ஆட்டோ நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ டிரைவர் மூர்த்தி மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த பள்ளிக் குழந்தைகளான ராஜக்காபட்டியை சேர்ந்த நாகசாமி மகன் கிஷோர் (7) , வேதாத்திரி நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் லோக்சனா (11) ஆகியோர் காயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் நகரில் பெரும்பாலான ஆட்டோக்களில் பள்ளி குழந்தைகளை அைடத்து வைத்துக்கொண்டு செல்வது தினசரி நிகழ்வாக உள்ளது. குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் இதுபோல 10-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்வதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.

    எனவே போக்குவரத்து போலீசார் இதுபோன்ற விதிமீறல்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • கொடைக்கானலில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தும், மின்கம்பங்கள் சேதமடைந்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
    • சுற்றுலா பயணிகள் வருகையும் அடியோடு குறைந்து அனைத்து இடங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கொடைக்கானலில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தும், மின்கம்பங்கள் சேதமடைந்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

    போக்குவரத்து சீரமைப்பு பணியில் தொடர்ந்து பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாலை முதலே சாரல் மழை மற்றும் விட்டுவிட்டு பெய்யும் கனமழை காரணமாக சாலையில் பொதுமக்கள் வெளியே வரவே அச்சமடைந்து வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர்.

    மேலும் சுற்றுலா பயணிகள் வருகையும் அடியோடு குறைந்து அனைத்து இடங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது. தொடர் மழையினால் முற்றிலும் நிறுத்தப்பட்டு படகுகள் அனைத்தும் கட்டி வைக்கப்பட்டுள்ளன. குதிரைசவாரி, சைக்கிள்சவாரி போன்றவை எதுவும் நடைபெறாததால் ஏரிச்சாலை வெறிச்சோடி காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வாகன ஓட்டுனர்கள், வழிகாட்டிகள், விடுதி, ஓட்டல் ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    • கலெக்டர் தலைமை வகித்து கொடியசைத்து விழிப்புணர்வு வாகன பிரச்சார பயணத்தை துவக்கி வைத்தார்.
    • கலெக்டர் அலுவலக ஊழியர்கள்,சமூக ஆர்வலர்கள், மருத்துவ பிரதிநிதிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு சக்தி டயபடீஸ் பவுண்டேஷன் மற்றும்சக்தி சர்க்கரை நோய் சிறப்பு மையம்இணைந்து உலக சர்க்கரை நோய்தினத்தை முன்னிட்டுதிண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சர்க்கரைநோயைப் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய நவீனகருவிகளுடன் கூடிய விழிப்புணர்வு வாகனம் உருவாக்கப்பட்டது.

    வாகன விழிப்புணர்வுபிரச்சார பயணம் தொடக்க நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை வகித்துகொடியசைத்து விழிப்புணர்வு வாகன பிரச்சார பயணத்தைதுவக்கி வைத்தார்.

    மாவட்ட கலெக்டர் முன்னிலையில் சக்தி டயாபடீஸ் பவுண்டேஷன் மூலமாகமுதல் வகை சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சர்க்கரை அளவை கண்டறிந்துகட்டுப்படுத்தும் கன்டிநியுயஸ் குளுகோஸ் மானிடர் என்ற அதிநவீன தொடர்சர்க்கரை கண்காணிப்பு கருவி வாகனத்தில் பொருத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் வத்தலக்குண்டு சக்தி சர்க்கரை நோய்சிறப்பு மைய தலைமை டாக்டர் தெய்வந்திரன் மற்றும்மருத்துவமனை ஊழியர்கள்,கலெக்டர் அலுவலக ஊழியர்கள்,சமூக ஆர்வலர்கள், மருத்துவ பிரதிநிதிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை சக்தி சர்க்கரை நோய்சிறப்பு மைய பொதுமேலாளர் முகமது சுல்தான் மற்றும்நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • வாரிசு மற்றும் பட்டா கேட்டு கொடுத்த மனுவின் மீது பல ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது
    • பல ஆண்டுகளாக போராடி கிடைக்காமல் இருந்த சான்றுகளை வழங்கிய தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு மாணவி குடும்பத்தினர் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

    குஜிலியம்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள பாளையம் முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் சுகன்யா (வயது 17). இவர் குஜிலியம்பாறை தாலுகா அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

    நான் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறேன். எனது தாயார் சந்திரா மனநலம் பாதித்தவர். நாங்கள் வசிக்கும் வீடு சேதமடைந்து மழைக்காலங்களில் தண்ணீர் வழிந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. பாம்பு, எலி போன்ற பூச்சிகள் வீட்டுக்கு வருவதால் எங்களுக்கு அச்சமாக உள்ளது.

    எனவே எனது தந்தை ஆறுமுகத்தின் வாரிசு என்பதற்கான சான்றும், நாங்கள் வசிக்கும் வீட்டுக்கு பட்டாவும் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    இந்த மனுவின் மீது பல ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது. இதனிடையே தாசில்தாரிடம் நேரடியாக முறையிட்டதின் பேரில் தாசில்தார் ரமேஷ் தலைமையில் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது மாணவியின் வீடு பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததும், அவரது தாய் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததும் உறுதியானது. ஆனால் மாணவியின் தந்தைக்கு 2 மனைவிகள் என்பதும் முதல் மனைவி இறந்து விட்டதால் கரூரில் இருக்கும் அவரது மகள் கவிதாவிடம் எழுத்துப்பூர்வமான சம்மதம் பெற்று பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுத்து சந்திரா குடும்பத்தினருக்கு வீட்டு மனை பட்டா மற்றும் மாணவிக்கு வாரிசு சான்றிதழ் ஆகியவை வழங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டது. பல ஆண்டுகளாக போராடி கிடைக்காமல் இருந்த சான்றுகளை வழங்கிய தாசில்தார் ரமேஷ் மற்றும் வருவாய்த்துறையினருக்கு அவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

    ×