என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் இடைவிடாத மழையால் வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள் வியாபாரிகள் தவிப்பு
    X

    தொடர் மழையால் ஏரியில் இயக்காமல் உள்ள படகுகள்.

    கொடைக்கானலில் இடைவிடாத மழையால் வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள் வியாபாரிகள் தவிப்பு

    • கொடைக்கானலில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தும், மின்கம்பங்கள் சேதமடைந்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
    • சுற்றுலா பயணிகள் வருகையும் அடியோடு குறைந்து அனைத்து இடங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கொடைக்கானலில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தும், மின்கம்பங்கள் சேதமடைந்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

    போக்குவரத்து சீரமைப்பு பணியில் தொடர்ந்து பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாலை முதலே சாரல் மழை மற்றும் விட்டுவிட்டு பெய்யும் கனமழை காரணமாக சாலையில் பொதுமக்கள் வெளியே வரவே அச்சமடைந்து வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர்.

    மேலும் சுற்றுலா பயணிகள் வருகையும் அடியோடு குறைந்து அனைத்து இடங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது. தொடர் மழையினால் முற்றிலும் நிறுத்தப்பட்டு படகுகள் அனைத்தும் கட்டி வைக்கப்பட்டுள்ளன. குதிரைசவாரி, சைக்கிள்சவாரி போன்றவை எதுவும் நடைபெறாததால் ஏரிச்சாலை வெறிச்சோடி காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வாகன ஓட்டுனர்கள், வழிகாட்டிகள், விடுதி, ஓட்டல் ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×