என் மலர்
நீங்கள் தேடியது "school children were injured"
- திண்டுக்கல் - திருச்சி நான்கு வழிச்சாலை இ.பி காலனி பிரிவு அருகே சென்ற போது அந்த வழியாக குறுக்கே மாடுகள் வந்தது.
- திடீரென மூர்த்தி பிரேக் போட்டதால் ஆட்டோ நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அடுத்த நந்தவனப்பட்டி கருவூல காலனியைச் சேர்ந்தவர் மூர்த்தி (53). ஆட்டோ டிரைவர். இவர் இன்று காலை வழக்கம் போல் பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சென்றார். திண்டுக்கல் - திருச்சி நான்கு வழிச்சாலை இ.பி காலனி பிரிவு அருகே சென்ற போது அந்த வழியாக குறுக்கே மாடுகள் வந்தது.
திடீரென மூர்த்தி பிரேக் போட்டதால் ஆட்டோ நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ டிரைவர் மூர்த்தி மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த பள்ளிக் குழந்தைகளான ராஜக்காபட்டியை சேர்ந்த நாகசாமி மகன் கிஷோர் (7) , வேதாத்திரி நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் லோக்சனா (11) ஆகியோர் காயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் நகரில் பெரும்பாலான ஆட்டோக்களில் பள்ளி குழந்தைகளை அைடத்து வைத்துக்கொண்டு செல்வது தினசரி நிகழ்வாக உள்ளது. குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் இதுபோல 10-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்வதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.
எனவே போக்குவரத்து போலீசார் இதுபோன்ற விதிமீறல்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






