என் மலர்
நீங்கள் தேடியது "Diabetes prevention awareness"
- கலெக்டர் தலைமை வகித்து கொடியசைத்து விழிப்புணர்வு வாகன பிரச்சார பயணத்தை துவக்கி வைத்தார்.
- கலெக்டர் அலுவலக ஊழியர்கள்,சமூக ஆர்வலர்கள், மருத்துவ பிரதிநிதிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு சக்தி டயபடீஸ் பவுண்டேஷன் மற்றும்சக்தி சர்க்கரை நோய் சிறப்பு மையம்இணைந்து உலக சர்க்கரை நோய்தினத்தை முன்னிட்டுதிண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சர்க்கரைநோயைப் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய நவீனகருவிகளுடன் கூடிய விழிப்புணர்வு வாகனம் உருவாக்கப்பட்டது.
வாகன விழிப்புணர்வுபிரச்சார பயணம் தொடக்க நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை வகித்துகொடியசைத்து விழிப்புணர்வு வாகன பிரச்சார பயணத்தைதுவக்கி வைத்தார்.
மாவட்ட கலெக்டர் முன்னிலையில் சக்தி டயாபடீஸ் பவுண்டேஷன் மூலமாகமுதல் வகை சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சர்க்கரை அளவை கண்டறிந்துகட்டுப்படுத்தும் கன்டிநியுயஸ் குளுகோஸ் மானிடர் என்ற அதிநவீன தொடர்சர்க்கரை கண்காணிப்பு கருவி வாகனத்தில் பொருத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் வத்தலக்குண்டு சக்தி சர்க்கரை நோய்சிறப்பு மைய தலைமை டாக்டர் தெய்வந்திரன் மற்றும்மருத்துவமனை ஊழியர்கள்,கலெக்டர் அலுவலக ஊழியர்கள்,சமூக ஆர்வலர்கள், மருத்துவ பிரதிநிதிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை சக்தி சர்க்கரை நோய்சிறப்பு மைய பொதுமேலாளர் முகமது சுல்தான் மற்றும்நிர்வாகிகள் செய்திருந்தனர்.






