என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • கொரோனா தொற்று குறைந்துள்ளதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
    • கொடைக்கானல் நகர் பகுதிகளில் வந்து இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் வட்டக்கானல் பகுதிக்கு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதங்களில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவது வழக்கம். கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வரத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் கொடைக்கானலுக்கு வரும் இவர்கள் இங்கேயே தங்கி இருந்து தங்கள் மத வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம்.

    மேலும் இவர்களுக்கு போதை காளான், கஞ்சா போன்றவற்றை வழங்குவதற்காக சிலர் உதவி செய்து வருவது கடந்த காலங்களில் நடந்து வந்தது. எனவே அது போன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் வட்டக்கானல் பகுதி நுழைவுச்சாலையில் கொடைக்கானல் போலீசார் சோதனை சாவடி அமைத்துள்ளனர்.

    கடந்த சில வாரங்களுக்கு முன் இப்பகுதியில் உள்ள தங்கும் விடுதி மற்றும் கடை உரிமையாளர்களை அழைத்து கொடைக்கானல் டி.எஸ்.பி. சீனிவாசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது இஸ்ரேல் நாட்டினர் இங்கு வரும் சூழலில் அவர்களை கண்காணித்து குற்றச்செயல்களில் ஈடுபட்டாலோ, சந்தேகத்திற்கிடமான நபர்கள் தென்பட்டாலோ அது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் போலீசார் அவர்களின் நடமாட்டத்தை சோதனை சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர். தற்போது கொடைக்கானல் நகர் பகுதிகளில் வந்து இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகள்தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

    • பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.
    • மேலும் 120க்கும் மேற்பட்ட வாகனங்கள் திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதான த்துக்கு ஏலம் விடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் கடந்த 2016-ந் தேதி முதல் கேட்பாரற்று கிடந்த வாகனங்களை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் கிரேன் மூலம் அப்புறப்படு த்தினர்.

    மேலும் 120க்கும் மேற்பட்ட வாகனங்கள் திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதான த்துக்கு ஏலம் விடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    • கொடைக்கானல் துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள் (19-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள்(19-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்றுகாலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை கொடைக்கானல், பூம்பாறை, மன்னவனூர், கவுஞ்சி, பூண்டி, கிளாவரை, கூக்கால், பழம்புத்தூர், குண்டுபட்டி, கோம்பைக்காடு, வில்பட்டி, பெருமாள்மலை, பி.எல்.செட்டு, ஊத்து, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூர்,

    பாச்சலூர், கடைசிகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என வத்தலக்குண்டு பகிர்மான செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    • கொடைக்கானலைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் இருந்தும் வெளிமாவட்டங்களில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் க‌ல்லூரியில் பயின்று வருகின்றனர்.
    • உயர் கல்வித்துறை கவனம் செலுத்தி இந்த அரசு கலை கல்லூரியில் நிரந்தர கவுரவ விரிவுரையாளர்களை பணியில் அமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் அரசு ம‌க‌ளிர் கலை அறிவிய‌ல் கல்லூரி இயங்கி வருகிறது, இந்த கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம், பி.எஸ்.சி வேதியியல், பி.ஏ ஆங்கிலம், பி.ஏ எக்கனாமிக்ஸ், பி.ஏ பப்ளிக் சர்வீஸ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் இங்கு உள்ளன.

    கொடைக்கானலைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் இருந்தும் வெளிமாவட்டங்களில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் க‌ல்லூரியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அரசுக்கல்லூரியில் 50-க்கும் மேற்பட்டகவுரவ விரிவுரையாளர்கள் பணியில் இருக்க வேண்டும் ஆனால் தற்போது 20 முதல் 25 தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் ம‌ட்டுமே பணி புரிந்து வருவதாக கல்லூரி நிர்வாகத்தினால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் கடந்த ஒரு மாத காலமாக கல்லூரியில் 7 வகுப்புகள் நடைபெற வேண்டிய நிலையில் ஒரு சில வகுப்புகள் மட்டுமே நடைபெறுவதாக கல்லூரி மாணவிகள் கூறுகின்றனர்.

    மேலும் வகுப்புகள் நடைபெறாமல் இருப்பதால் இது குறித்து கல்லூரி மாண‌விக‌ள் க‌ல்லூரி நிர்வாகத்திடம் கேட்க்கும் போது நீங்க‌ளாக‌வே யூ டியூப் சேனலில் பார்த்து படித்து கொள்ளுமாறும் கல்லூரி நிர்வாகம் பதில் தெரிவிப்பதாக கல்லூரி மாணவிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.மேலும் அடுத்த மாதம் செம‌ஸ்ட‌ர் தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில் கல்லூரி மாணவிகளின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாக மாறி உள்ளது.

    இதனை உயர் கல்வித்துறை கவனம் செலுத்தி இந்த அரசு கலை கல்லூரியில் நிரந்தர கவுரவ விரிவுரையாளர்களை பணியில் அமர்த்த வேண்டும் எனவும் இந்த கல்லூரியில் சுகாதாரமற்ற முறையில் இருக்கும் கழிப்பறைகளையும் முறையாக பராமரிக்க வேண்டும் எனவும், கல்லூரி வளாகத்திற்குள் அவ்வப்போது அச்சுறுத்தி வ‌ரும் காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்களும் அப்ப‌குதி ம‌க்க‌ளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பெண்ணிடம் ரூ.3 லட்சம் பணம் மற்றும் 5 பவுன் நகை வாங்கி வருமாறு கொடுமைப்படுத்தியதால் போலீசில் புகார் அளித்தார்..
    • போலீசார் கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்ைட அருகே மேலகோவில்பட்டியை சேர்ந்தவர் முத்துச்சாமி மகன் அழகுராஜ்(35). இவர் தமிழக ஊர்காவல்படையில் திண்டுக்கல்லில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் லீலாவதி(32) என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    திருமணத்தின்போது சீர்வரிசையாக 10 பவுன் நகை, ரூ.3 லட்சம் மதிப்பில் பொருட்கள் கொடுக்கப்பட்டது. இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

    இந்தநிலையில் மேலும் ரூ.3 லட்சம் பணம் மற்றும் 5 பவுன் நகை வாங்கி வருமாறு லீலாவதியை கொடுமைப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லதா, லீலாவதியின் கணவர் அழகுராஜ், மாமனார் முத்துச்சாமி, மாமியார் ஜோதி, நாத்தனார் நாகலட்சுமி ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் நாகலட்சுமி விளாம்பட்டி போலீசில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • நிலவரி திட்ட கணக்கினை கணிப்பொறியில் பதிவு செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
    • வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நிலஅளவையர்கள் கலந்துகொண்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் நத்தம் நிலவரி திட்ட கணக்கினை கணிப்பொறியில் பதிவு செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் லதா முன்னிலையில் நடைபெற்றது. இதில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நிலஅளவையர்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நத்தம் நிலவரி திட்ட கணக்கினை கணிப்பொறியில் பதிவு செய்யும் பணிகளும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். நீங்கள் மேற்கொள்ளும் பதிவுகளை முழுமையாக சரியாக செய்து, முடிக்க வேண்டும். இப்பணியின்போது, பெயர், முதலெழுத்து மற்றும் பகுதி, சர்வே எண் என பல்வகை தவறுகளை தனித்தனியாக பிரித்து, அவைகளை சரி செய்திட வேண்டும்.

    கிராம நிர்வாக அலுவலர்களாக பணியாற்றும் நீங்கள் சமூகத்திற்கான அர்ப்பணிப்புடன் பணியாற்றிட வேண்டும். உங்களால்தான் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் மாற்றம் கொண்டுவர முடியும். பட்டா வழங்குதல், பல்வேறு சான்றிதழ்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் விரைந்து செய்து கொடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் உங்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளது. அனைவரும் ஒருங்கிணைந்து இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பேசினார்.

    • தி.மு.க ஆட்சியில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.
    • திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் வாக்காளர் முகவர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது,

    தமிழகத்தில் தி.மு.க ஆட்சி எப்படி இருக்கிறது என்பதற்கு தொடர்ந்து உயர்ந்துவரும் விலைவாசி உயர்வை வைத்தே மக்கள் தெரிந்து கொண்டு விட்டனர். ஆவின்பால் விலையை லிட்டருக்கு ரூ.12 வரை உயர்த்திவிட்டனர். மின்சார கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி போன்ற அனைத்தையும் உயர்த்திவிட்டனர்.

    தி.மு.கவுக்கு வாக்களித்த மக்களும், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் நல்லாட்சி நடக்கிறது என்று தி.மு.கவினர் கூறிவருகின்றனர். மழைநீரே இல்லை என்று அமைச்சர்கள் கூறி வருகின்றனர். ஆனால் சென்னை மழைநீரில் தத்தளிக்கிறது. ஆனால் அ.தி.மு.க. 4ஆக உடைந்துவிட்டது. இவர்கள் ஒன்றுசேர்ந்தால்தான் வெற்றிபெற முடியும் என எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.

    இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.கவின் 71 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மாவட்ட செயலாளர்கள் 70 பேர் உள்ளனர். 2500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர் உள்ளனர். தி.மு.க ஆட்சியின் அவலத்தை மக்கள் தற்போது நன்றாக உணர்ந்து உள்ளனர். எனவே பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    அடுத்த முதல்வராக எடப்பாடி பழனிசாமி வருவது உறுதி. இதற்காக அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று அவர் தெரித்தார். இந்த கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அபார வெற்றிபெறும். இந்த கூட்டணியில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோருக்கு இடமில்லை. அவர்கள் வருவதால் அ.தி.மு.கவுக்கு எந்த லாபமும் இல்லை. தி.மு.க ஆட்சியில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்களை கைது செய்யும் போலீசாரை ஆளும்கட்சியினர் மிரட்டி வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது தொடர்பான சிறப்பு முகாம்களில் கட்சி நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைப்பு செயலாளர் மருதராஜ், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, முரளி, அபிராமி கூட்டுறவு பண்டகசாலை துணைத்தலைவர் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது.
    • வீடுகளில் சுத்தம் செய்து மாலை அணிவதற்கு தேவையான வேஷ்டி, துளசி மாலைகள், பூஜைபொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.

    திண்டுக்கல்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. இதனைதொடர்ந்து அய்யப்ப பக்தர்கள் நாளை காலை முதல் கோவில்களில் மாலை அணிந்து தங்கள் விரதத்தை தொடங்க உள்ளனர்.

    இதனையடுத்து வீடுகளில் சுத்தம் செய்து மாலை அணிவதற்கு தேவையான ேவஷ்டி, துளசி மாலைகள், பூஜைபொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால் திண்டுக்கல் கடைவீதிகளில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது.

    மாலை அணிந்து விரதம் தொடங்குவதற்கான பூஜை பொருட்களை அவர்கள் வாங்கிச்சென்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் சபரிமலை அய்யப்பன்கோவிலுக்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த முறை முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    முன்பதிவு செய்ய முடியாத பக்தர்கள் நிலக்கல் உள்பட 6 இடங்களில் செயல்படும் தற்காலிக மையங்களில் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்துள்ளது. இதுதவிர 2 ஆண்டுகளுக்குபிறகு மீண்டும் பெரியபாதையும் பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    நாளை காலை அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவதற்காக பல்வேறு கோவில்களிலும் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    • குளம் உடைந்தால் அருகில் உள்ள வெள்ளச்சிகவுண்டன்குளமும் உடைந்து தண்ணீர் வெளியேறும் நிலை உள்ளது.
    • போர்க்கால நடவடிக்கையாக குளத்தின் கரைப்பகுதியை பலப்படுத்த வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகில் உள்ள பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கம்புகுத்தியூரில் பாசனகுளம் உள்ளது. கம்புகுத்திகவுண்டன் குளம் எனப்படும் இந்த குளம் 15ஏக்கர் பரப்பளவு கொண்டது. ராமகிரி, தளிப்பட்டி ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் இந்த குளத்தில் வந்துசேர்கிறது. கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் பெய்த கனமழையால் குளம் முழுகொள்ளளவை எட்டியது.

    இதனால் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி செல்லாமல் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தாசில்தாருக்கு கோரிக்கை விடுத்தனர். இதனைதொடர்ந்து பாளையம் பேரூராட்சி சார்பில் குளத்தின் மறுகால் பகுதியில் குறைந்த அளவு மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து சென்றனர். ஆனால் அதன்பிறகு கொட்டிதீர்த்த கனமழையின் காரணமாக மணல்மூடைகள் அடித்து செல்லப்பட்டு தண்ணீர் வீணாகி செல்கிறது.

    இந்த குளம் உடைந்தால் அருகில் உள்ள வெள்ளச்சிகவுண்டன்குளமும் உடைந்து தண்ணீர் வெளியேறும் நிலை உள்ளது. மேலும் இப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கும் மழைநீர் செல்லும் அபாயம் உள்ளது.

    எனவே போர்க்கால நடவடிக்கையாக குளத்தின் கரைப்பகுதியை பலப்படுத்த வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் குளம் உடைந்து தண்ணீர் வந்துவிடுேமா என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

    • மார்க்கம்பட்டியை சேர்ந்த 3 பேர் ஆக்கிரமிப்பை எதற்கு அகற்றினீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடு பட்டனர்.
    • வி.ஏ.ஓ.வை மிரட்டுவதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே வி.எஸ்.கோட்டை கிராம வி.ஏ.ஓ.வாக இருப்பவர் கோபாலகிருஷ்ணன் (வயது37). இவர் சாணார்பட்டி போலீசில் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    நான் கடந்த 1½ ஆண்டுகளாக வி.எஸ்.கோட்டை குரூப் கிராமத்தில் வி.ஏ.ஓ. வாக பணிபுரிந்து வருகிறேன். மார்க்கம்பட்டி பகுதியில் பொது ப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள மறுகால் செல்லும் வாய்க்காலில் சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக புகார் வந்தது.

    ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலர், நான் மற்றும் உதவியாளர் சம்பவ இடத்துக்கு சென்று ஜே.சி.பி.வாகனத்தின் உதவி யுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டோம். அன்று மாலை எனது அலுவலகத்திற்கு மார்க்கம்பட்டியை சேர்ந்த செல்வம், திருப்பதி, மூர்த்தி ஆகிய 3 பேரும் வந்து ஆக்கிரமிப்பை எதற்கு அகற்றினீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடு பட்டனர்.

    மேலும் என்னையும் கிராம உதவியாளரையும் அச்சுறுத்தும் விதமாக மிரட்டல் விடுத்தனர். அரசு பணியை செய்ய விடாமல் இடையூறு செய்துள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வி.ஏ.ஓ.வை மிரட்டுவதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கல்லூரிகளில் சுமார் 7000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • முதற்கட்டமாக 4200 மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி மூலம் திறந்து வைத்தார்.

    பழனி:

    தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக இந்துசமயஅறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கும், காலை சிற்றுண்டி திட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

    பழனி தண்டாயுதபாணி சாமி கோவில் கட்டுப்பாட்டின்கீழ் பழனியாண்டவர் கலைகல்லூரி, மகளிர் கல்லூரி, சின்னகலையம்புத்தூர் கல்லூரி, மெட்ரிக் பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இதுதவிர ஒட்டன்சத்திரத்தில் அரசு கல்லூரியும் செயல்பட்டு வருகிறது.

    இந்த கல்லூரிகளில் சுமார் 7000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் முதற்கட்டமாக 4200 மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி மூலம் திறந்து வைத்தார். பழனி கல்லூரியில் இதனை திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டியை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டியாக இட்லி, பொங்கல், கேசரி வழங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு மாணவ-மாணவிகள் மிகுந்த வரவேற்பு தெரிவித்தனர்.

    • அங்கன்வாடி மைய கட்டிடத்தை ஜே.சி.பி. எந்திரம் மூலமாக அகற்ற முயன்றனர். இதற்கு சீரகம்பட்டியைச் சேர்ந்த ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • சீரகம்பட்டி கிராம மக்கள் ஒன்று திரண்டு நில க்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிலுக்கு வார்பட்டி ஊராட்சி சீரகம்பட்டி கிராமத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வரு கின்றனர். இக்கிராமத்தில் உள்ள குழந்தைகள் படிப்பத ற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.

    இந்த கட்டிடத்திற்குள் தற்போது மழை பெய்வதால் தண்ணீர் புகுந்து பள்ளி நடத்த முடியாத நிலை உள்ளது. மேலும் கட்டிடம் தற்போது பழுதடைந்த நிலையில் இருப்பதால் அதனை உடனடியாக அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட நிலக்கோட்டை ஊரா ட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதனையடுத்து புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்க ப்பட்டது. இந்நிலையில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் சென்று சீரகம் பட்டியில் அமைந்துள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை ஜே.சி.பி. எந்திரம் மூலமாக அகற்ற முயன்றனர். இதற்கு சீரகம்பட்டியைச் சேர்ந்த ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து சீரகம்பட்டி கிராம மக்கள் ஒன்று திரண்டு நில க்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு உடனடியாக அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தினர்.

    அவர்களிடம்நில க்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) அண்ணாதுரை பேச்சு வார்த்தை நடத்தினார். உடனடியாக அங்கன்வாடி மையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை பொது மக்கள் கைவிட்டனர்.

    ×