என் மலர்
நீங்கள் தேடியது "Young girl tortured for dowry"
- பெண்ணிடம் ரூ.3 லட்சம் பணம் மற்றும் 5 பவுன் நகை வாங்கி வருமாறு கொடுமைப்படுத்தியதால் போலீசில் புகார் அளித்தார்..
- போலீசார் கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்ைட அருகே மேலகோவில்பட்டியை சேர்ந்தவர் முத்துச்சாமி மகன் அழகுராஜ்(35). இவர் தமிழக ஊர்காவல்படையில் திண்டுக்கல்லில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் லீலாவதி(32) என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது சீர்வரிசையாக 10 பவுன் நகை, ரூ.3 லட்சம் மதிப்பில் பொருட்கள் கொடுக்கப்பட்டது. இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.
இந்தநிலையில் மேலும் ரூ.3 லட்சம் பணம் மற்றும் 5 பவுன் நகை வாங்கி வருமாறு லீலாவதியை கொடுமைப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லதா, லீலாவதியின் கணவர் அழகுராஜ், மாமனார் முத்துச்சாமி, மாமியார் ஜோதி, நாத்தனார் நாகலட்சுமி ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் நாகலட்சுமி விளாம்பட்டி போலீசில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- தேனியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.இந்த நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் தத்தெடுத்து குழந்தையை வளர்த்து வந்தனர்.
- மது குடித்து விட்டு வந்து கூடுதலாக நகை, பணம் கேட்டு ஜெயசுதாவை சித்ரவதை செய்துள்ளார்.
தேனி:
தேனி பவர் கவுஸ் தெருவை சேர்ந்தவர் ஜெயசுதா (வயது40). இவருக்கும் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான ஜெயேந்திரன் (53) என்பருக்கும் கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் நடை பெற்றது. ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தேனியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். ஜெயேந்திரன் மது குடித்து விட்டு வந்து கூடுதலாக நகை, பணம் கேட்டு ஜெயசுதாவை சித்ரவதை செய்துள்ளார்.மேலும் சசிகலா என்ற பெண்ணுடன் சேர்ந்து சித்ரவதை செய்வதாக தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ஜெயேந்திரன் மற்றும் சசிகலா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






