என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானல் அரசு கலைக்கல்லூரியில் விரிவுரையாளர்கள் பற்றாக்குறை
    X

    கொடைக்கானல் அரசு கலைக்கல்லூரி.

    கொடைக்கானல் அரசு கலைக்கல்லூரியில் விரிவுரையாளர்கள் பற்றாக்குறை

    • கொடைக்கானலைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் இருந்தும் வெளிமாவட்டங்களில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் க‌ல்லூரியில் பயின்று வருகின்றனர்.
    • உயர் கல்வித்துறை கவனம் செலுத்தி இந்த அரசு கலை கல்லூரியில் நிரந்தர கவுரவ விரிவுரையாளர்களை பணியில் அமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் அரசு ம‌க‌ளிர் கலை அறிவிய‌ல் கல்லூரி இயங்கி வருகிறது, இந்த கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம், பி.எஸ்.சி வேதியியல், பி.ஏ ஆங்கிலம், பி.ஏ எக்கனாமிக்ஸ், பி.ஏ பப்ளிக் சர்வீஸ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் இங்கு உள்ளன.

    கொடைக்கானலைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் இருந்தும் வெளிமாவட்டங்களில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் க‌ல்லூரியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அரசுக்கல்லூரியில் 50-க்கும் மேற்பட்டகவுரவ விரிவுரையாளர்கள் பணியில் இருக்க வேண்டும் ஆனால் தற்போது 20 முதல் 25 தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் ம‌ட்டுமே பணி புரிந்து வருவதாக கல்லூரி நிர்வாகத்தினால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் கடந்த ஒரு மாத காலமாக கல்லூரியில் 7 வகுப்புகள் நடைபெற வேண்டிய நிலையில் ஒரு சில வகுப்புகள் மட்டுமே நடைபெறுவதாக கல்லூரி மாணவிகள் கூறுகின்றனர்.

    மேலும் வகுப்புகள் நடைபெறாமல் இருப்பதால் இது குறித்து கல்லூரி மாண‌விக‌ள் க‌ல்லூரி நிர்வாகத்திடம் கேட்க்கும் போது நீங்க‌ளாக‌வே யூ டியூப் சேனலில் பார்த்து படித்து கொள்ளுமாறும் கல்லூரி நிர்வாகம் பதில் தெரிவிப்பதாக கல்லூரி மாணவிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.மேலும் அடுத்த மாதம் செம‌ஸ்ட‌ர் தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில் கல்லூரி மாணவிகளின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாக மாறி உள்ளது.

    இதனை உயர் கல்வித்துறை கவனம் செலுத்தி இந்த அரசு கலை கல்லூரியில் நிரந்தர கவுரவ விரிவுரையாளர்களை பணியில் அமர்த்த வேண்டும் எனவும் இந்த கல்லூரியில் சுகாதாரமற்ற முறையில் இருக்கும் கழிப்பறைகளையும் முறையாக பராமரிக்க வேண்டும் எனவும், கல்லூரி வளாகத்திற்குள் அவ்வப்போது அச்சுறுத்தி வ‌ரும் காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்களும் அப்ப‌குதி ம‌க்க‌ளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×