என் மலர்
நீங்கள் தேடியது "குடிபோதையில் ரகளை செய்த வாலிபர்"
- குடிபோதையில் பஸ்சை மறித்து ரகளையில் ஈடுபட்டதை தட்டிகேட்டதால் டிரைவரை வாலிபர் சரமாரியாக தாக்கினார்.
- போலீசார் போதை வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைரோடு:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இருந்து காமலாபுரம், சக்கையநாயக்கனூர், அழகம்பட்டி, சின்னாளபட்டி வழியாக திண்டுக்கல்லுக்கு அரசு டவுன்பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை அந்த பஸ் கொடைரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தது. டிரைவர் ஆரோக்கியதாஸ்(53) பஸ்சை ஓட்டிவந்தார்.
அழகம்பட்டி, சக்கையநாயக்கனூர் இடையே திடீரென அதேபகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(23) என்பவர் குடிபோதையில் பஸ்சை மறித்து ரகளையில் ஈடுபட்டார். இதனை ஆரோக்கியதாஸ் தட்டிகேட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து பஸ்சுக்குள் புகுந்த பாலசுப்பிரமணியன் பயணிகளையும் தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
ஒரு கட்டத்தில் பாலசுப்பிரமணியன் டிரைவர் ஆேராக்கியதாசுடன் சாலையில் கட்டிபுரண்டு சண்டைபோட்டார். மேலும் அவரது சட்டையையும் கிழித்துள்ளார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவர் பாலசுப்பிரமணியன் ரகளை செய்ததை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர், விஜயபாண்டியன் ஆகியோர் விரைந்து சென்று பாலசுப்பிரமணியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






