என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
மழை, பனிப்பொழிவால் நிலக்கோட்டை மார்க்கெட்டில் பூக்கள் வரத்து குறைவு
- கடந்த சில நாட்களாக பெய்த கனமழை மற்றும் தற்போது நிலவும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறையத் தொடங்கியுள்ளது.
- பூக்களின் விலை குறைந்துள்ளதாலும் போதுமான வரத்து இல்லாததாலும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட் மிகப்பெரிய வியாபார சந்தையாக உள்ளது. பல்வேறு கிராமங்களில் விளையும் பூக்கள் இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக பெய்த கனமழை மற்றும் தற்போது நிலவும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறையத் தொடங்கியுள்ளது. இதனால் விலை சற்று அதிகரித்துள்ளது. 1 கிலோ மல்லிகை ரூ.700க்கு விற்பனையாகிறது.
பிச்சிப்பூ ரூ.250, கனகாம்பரம் ரூ.300, முல்லைப்பூ ரூ.300, ஜாதிப்பூ ரூ.250, அரளி ரூ.250, சம்பங்கி ரூ.20, காக்கரட்டான் ரூ.200, செவ்வந்தி ரூ.40, செண்டுமல்லி ரூ.20, பட்டன் ரோஸ் ரூ.100, பன்னீர்ரோஸ் ரூ.80, சாதா ரோஸ் ரூ.40, கோழிக்கொண்டை ரூ.10, துளசி ரூ.15 என்ற விலையில் விற்பனையாகிறது.
நாளை கார்த்திகை மாதப்பிறப்பு மற்றும் முகூர்த்த நாட்கள் வர உள்ள நிலையில் பூக்களின் விலை குறைந்துள்ளதாலும் போதுமான வரத்து இல்லாததாலும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.






